மீரா காந்தி

மனித நேயம் கொண்ட இந்திய பெண்மணி

மீரா காந்தி[1](Meera Gandhi, பிறப்பு 28 சனவரி1963) கிவிங்க்கு பேக் பவுண்டேசன் என்ற அமைப்பை நிறுவியவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

மீரா தெரசா காந்தி
மேசுட்ரோ கேர்சு பவுண்டேசன் நிகழ்வில் மீரா காந்தி பேசுகிறார் மார்க் ஆன்டனி, என்றி கேர்டின்சு ஆகியோருடன்
பிறப்புமும்பை, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஹார்வர்ட் யூனிவர்சிடி (கல்வி திட்ட நிர்வாகம்)
பாஸ்டன் பல்கலைக்கழகம் (MBA)
டெல்லி பல்கலைக்கழகம்  (பொருளாதாரத்தில் இளநிலைப்பட்டம்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி மீரா காந்தி சோ (2017-2018) என்னும் வெற்றி பெற்ற டிவி சோ வின் தயாிப்பாளர்

“கிவிங்கு” பொருட்கள் வரிசையில் தயாரிப்பாளர் கிவிங்கு நறுமணம் மற்றும் கிவிங்கு மெழுகுவர்த்தி (2015-2016) இலெட்ஜ்வுட் இரிட்ரீட் ஃபார் மென்டல் வெல்னசு (2013-2014) நிறுவனர் (2012) -ல் வெளியிடப்பட்ட “கிவிங்குபேக்” என்ற புத்தகத்தின் நூலாசிரியர் கிவிங்குபேக் ஆவணப்படம் (2010-2011) எழுதி தயாரித்தார்

கிவிங்குபேக் பவுண்டேசன் (2010) -ஐ நிறுவியவர்
பிள்ளைகள்கனிகா காந்தி , கிரண் காந்தி, கபீர் காந்தி
வலைத்தளம்
meeragandhi.com thegivingbackfoundation.net

இளமையும் கல்வியும் தொகு

மீரா காந்தி ஐரிசு தாய்க்கும் ஒரு இந்திய தந்தைக்கும் மும்பையில் பிறந்தார்.[2] அவரது 16 வது வயதில் அன்னை தெரசா அவர்களை சந்தித்தார். அவருடன் மும்பையிலுள்ள ஆசா டான் என்ற இடத்தில் குழந்தைக்கு உதவி செய்யும் பணி புரிந்தார். அவரால் கவரப்பட்டு மீரா காந்தி, இந்தியா, நியூயார்க், ஆங்காங், துருக்கி மற்றும் ஐக்கிய இராச்சியம் முதலிய நாடுகளில் செயலாக்கத்திட்டங்களுடன் கிவிங்க் பேக் ஆபிசசு என்னும் அமைப்பை நிறுவினார்.[3]

இந்தியாவின் மும்பையிலுள்ள தி கதீட்ரல் அண்ட் ஜான் கான்னன் ஸ்கூல்ஸ் பள்ளியில் படித்தார். பின்பு கனடாவிலுள்ள தி லெஸ்டர் பி பயர்ஸன் யுனைடடு வேர்ல்டு காலேஜ் ஆப் தி பசிபிக் -என்ற கல்லூரியில் யூடபள்யுசி படித்தார். பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலைப்பட்டம் பெற்றார். அங்கு தலைவராக இருந்தார். போசுடன் யுனிவர்சிடி சுகூல் ஆப் மேனேச்மென்ட்டில் சேர்ந்து எம்பிஏ பட்டம் பெற்றார். பிறகு 2007-ல் ஆர்வர்டு பிசினசு சுகூலில் சேர்ந்து கல்வி திட்ட நிர்வாகம் என்ற படிப்பு முடித்தார்.[2]. மீரா காந்தி தற்போது ஆர்வர்டு யூனிவர்சிடி சவுத்து ஏசியா போர்டில் உள்ளார். அது சமீபத்தில் இலக்ஸ்மீ மிட்டல் சவுத் ஏசியா இன்ஸ்டிட்யூட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
தி கிவிங்க் பேக் பவுண்டேசன் லோகோ
 

தொண்டு நடவடிக்கைகள் தொகு

காந்தி , கிவிங்கு பேக் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.   இந்த நிறுவனம் உலகெங்கிலும் நோய், வறுமை, துன்பம் இவற்றோடு  பெண்கள் மற்றும் குழந்தைகளைப்பாதிக்கும் கல்வி பிரச்சினைகளையும்  நீக்குவதை நோக்கி முடுக்கப்பட்டுள்ளது. கிவிங்கு பேக் பவுண்டேசனின் பணியில் மூன்று தளங்கள் உள்ளன.  முதலாவது நிலைமாற்றம் செய்யவல்ல கல்வி மூலமாக பெண்களுக்கு அதிக சக்தி வழங்குதல். இரண்டாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்படி இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு நேர்மறையான பேச்சுகள், விவாதங்கள் இவற்றிற்கு ஒரு தளமாக செயல்படுதல். மூன்றாவதாக கவனம், மகிழ்ச்சி இவற்றைப் பரப்புதல்.[2]

பவுன்டேசனின் முதன்மை திட்டங்களுள் ஒன்று இந்தியாவிலுள்ள புது டில்லியின் செயின்ட் மைக்கேல் பள்ளி ஆகும். இந்த திட்டத்தின் பயனாக செயின்ட் மைக்கேல் பள்ளியின் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது. மேலும் பள்ளி மற்றும் திடல் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. இத்திட்டம் புதிய விடுதி ,விளையாட்டுத்திடல் மற்றும் புதிய வகுப்பறைகள் நிறைந்த பள்ளிக்கட்டிடம் இவற்றை வழங்கியது.[4]

இது, கிவிங்கு பேக் பவுன்டேசன் மேற்கொண்ட மிகத்தேவையான முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யும் 10 ஆண்டு கால காரியமாகும். கிவிங்கு பேக் பவுன்டேசன் மிக்க எச்சரிக்கையுடன் பல நிறுவனங்களைத் தேர்வு செய்து , உதவித்தொகை மற்றும் மானியம் இவற்றை , 5 ஆண்டு உறுதியுடன் வழங்கி ஆதரவு அளிக்கிறது. அவரின் பவுன்டேசன் மூலம் தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்து, குறிப்பாக தவறாக நடத்தப்பட்ட பசியுடன் உள்ள குழந்தைகள், விதவைகள், நோயுற்றவர், காது கேளாதவர் மற்றும் கண்பார்வையற்றவர் களுக்கு உதவி செய்து தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். அவர் குறிப்பாக வெற்றிக்கு ப் படிக்கல்லாக விளங்கும் கல்வி யில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்.[5]

தன் வாழ்வில் முன்மாதிரியாகத் திகழும் இலரி கிளின்டன் , செரி ப்ளேர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் ஐரிஷ் பெண்ணான தன் சொந்தத் தாய்,இவர்களின் பாதிப்பினால், பெண் தலைமை திட்டங்கள் மற்றும் பணிப்பட்டறைகள் கூடிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார். அந்தத் தொண்டு நிறுவனங்களுள் சில ஐக்கிய இராச்சியம் நாட்டிலுள்ள செரி ப்ளேர் பவுன்டேசன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு உள்ள எலியனோர் ரூஸ்வெல்ட் இலீடர்சிப் சென்டர் ஆகும்.[6]

காந்தி அவர்களின் கிவிங்க்கு பேக் பவுண்டேசன் பல மனித நேயத்திட்டங்களில் ஈடுபாடுகொண்டுள்ளது. அவையாவன:  எலியனோர் ரூசுவெல்ட்டு இலீடர்ஷிப்பு சென்டரில் படிக்கும் இளம் பருவ மாணவர்களுக்கு  ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் வெகுமானம் வழங்குதல்;[7]    தெற்காசிய கல்லூரி மாணவர்களுக்கு நியூயார்க்கில் உள்ள பரூச்சு கல்லூரியில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக வருடாந்தர மானியங்கள் வழங்குதல் ; சமுதாய மாற்றம்  ஏற்படும் வண்ணம் பணி செய்து வரும், திரைப்படம் தயாரித்தலில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு உட் சுடாக்கு பிலிம்  விழாவில் வருடாந்தர வெகுமானம் மற்றும் விருதுகள் வழங்குதலில் ஐந்தாண்டு உறுதியளித்தல். 2011 -ல் காந்தி , மார்க்கு இரப்பல்லோ என்பவருக்கு முதல் வருடத்துக்கான மீரா காந்தி கிவிங்கு பேக் விருது அளித்தார். இந்த  விருது ஒவ்வொரு ஆண்டும் உட் சுடாக்கு பிலிம்  விழாவில்  இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது  சமுதாய மாற்றம் தேவை என்ற செய்தியை  சிறப்பாக சொல்லும்,  மனிதநேயத்தில் ஆர்வம் மிக்க நடிகருக்கு கொடுக்கப்படுகிறது. அடுத்து இவ்விருதை வென்றவர்கள் 2011-ஆம் ஆண்டில் நடிதர்,இயக்குநர் மற்றும்  திரைக்கதை எழுத்தாளர் இடிம் பிளேக்கு நெல்சன், 2013 ஆம் ஆண்டில், பாராட்டுகள் பல பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆர்வலர் மீரா நாயர் ஆவார்.[8]

பின் வரும் இதர  தொண்டு  நிறுவனங்களில் காந்தி நேரடியாகவோ அல்லது அவரது பவுண்டேசன் மூலமாகவோ ஈடுபட்டார். அவை தி ஆப்பி ஓம் ,மும்பையிலுள்ள பார்வையற்றோர் பள்ளி, தி இராபர்ட் எஃப் கென்னடி சென்டர் ஃபார் சசுடிசு & இயூமன் இரைட்சு(justice and human rights), தி கம்போடியன்  இலேண்ட்மைன் இரிலீஃபு ஃபண்டு , சென்டர்பாயின்டு, கிவ் டு கொலம்பியா, தி அமெரிக்கன் ஃப்ரண்ட்சு ஆஃப் பிரின்சு வில்லியம் அண்டு பிரின்சு ஏரி.[9]

காந்தியின் பவுண்டேசன் மேலும் சில கல்வி நிறுவனங்களுக்கும் தனது  பங்கை அளித்துள்ளது.  2012-ஆம் ஆண்டு, மிகவும் சக்திவாய்ந்ததும்,  அதி நவீனமான ஒரு தொலைநோக்கியை , இலண்டன் இல் உள்ள தி ஆர்ரோ சுகூல்  மேற்கூரையில் நிறுவ இந்த பவுண்டேசன்  நிதி வழங்கியுள்ளது.[10]

நூல் பதிப்புகளும் தயாரிப்புகளும் தொகு

 

2017-ல் மீரா காந்தி பி4யூ டிவி நெட்வர்க்கில் மற்றும் இணைய தளங்களில் (themeeragandhishow.com , southasiantimes.com) ஒளி பரப்பப்பட்ட "தி மீரா காந்தி சோ" என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரித்தார். ஒவ்வொரு அத்தியாயமும் மன அழுத்ததை நீக்கி மேலும் மகிழ்ச்சிகரமானதும் நேர்மறையானதுமான வாழ்க்கை வாழ பயன்படும் அத்தியாவசியமானதும் வாழ்வையே மாற்றக்கூடிய தலைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி வாழ்க்கையில் பயணிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்குள்ள பின்வரும் ஒவ்வொரு நபரிடமும் நேர்காணல் செய்வதன் மூலம் ஆழ்ந்து செல்கிறது: நண்பர்கள், குணப்படுத்துபவர்கள்,ஆன்மிக குருக்கள்,அரசியல்வாதிகள், தூதர்கள்,நடிகர்கள்,வழக்கறிஞர்கள். காந்தி வெற்றியடைந்தோர்,ஆன்மீகத்தைத் தழுவியவர்கள் வாழ்க்கை, தற்போதைய மற்றும் பிரபலமான தலைப்புகள் ,புதிய வரவிருக்கும் இசை இவற்றை நெருங்கிய கோணத்திலிருந்து காண்பிக்கிறார்.

2016-ல் காந்தி "தி கிவிங்க்கு கேண்டில்" என்ற உலகத்தரம் கொண்ட மெழுகுவர்த்தியை அறிமுகப்படுத்தினார். மேலும் 2016-ல் வெளியிட த்திட்டமிட்டபடி கிவிங்க்கு பிராக்ரன்சு வை வெளியிடுவார். இவை இரண்டும் GivingBackFragrance.com [11] மற்றும் Amazon.com என்ற இணைய தளங்களில் கிடைக்கும்.

தி கிவிங்க்கு பேக் என்ற தலைப்பில் மார்கோ பிக்யூ, லூசியா இவோங் கோர்டோன், சூலியட் ஏன்லான், டேவிடு அரிலேலா மற்றும் சந்த்ரிகா டேன்டன் முதலிய அகில உலக கலைஞர்கள் இடம் பெறும் குறுந்தகடுகள் தயாரித்து இயக்கினார். அவர் ஒரு காபி டேபிள் புத்தகம் படைத்தார். ஒரு ஆவணப்படம் தயாரித்தார். இவையும் "தி கிவிங்க்கு பேக்" என்று தலைப்பிடப்பட்டது.[12]

ஆவணப்படம், புத்தகம் ஆகிய இரண்டும் தன் நண்பர்கள் மற்றும் ஊக்குவித்தவர்களுக்கு தனது மனித நேய முயற்சிகளை நிரூபிப்பதற்காகவேயாகும். [13][14] இந்த புத்தகத்தில் இன்னும் போனோ மற்றும் பலருடன் நேர்காணல் இடம் பெறுகிறது.[15] அலெகசு கவுன்ட்சு என்பவர், கிராமீன் பவுண்டேசனின் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர், மீரா அவர்களின் செய்தியான கிவிங்க்கு பேக் கில் உண்மையுண்டு என்று கண்டார். அதாவது கிவிங்க்கு பேக் அல்லது திருப்பி அளிப்பது என்ற திட்டம் நன்றாக சிந்தித்து சரியான முறையில் செய்யப்பட்டால் நன்கொடை செய்பவரிடமிருந்து குறைவதற்கு பதிலாக கூடும் என்பதாகும்.[16] அந்த ஆவணப்படம் 2011-ல் நடந்த உட்சுடாக் பிலிம் பெசுடிவலில் விற்பனை செய்யப்பட்டது. மீரா காந்தி அவர்களின் கிவிங்க்கு பேக் பவுண்டேசன் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் நூறு விழுக்காடு உலகெங்கிலும் உள்ள அவரது தொண்டு செய்யும் திட்டங்களுக்கு செல்கிறது.

ஆசிய சமூகம் தொகுத்து நடத்திய விவாதக் குழுவில் மீரா பங்கு பெற்றார். அக்குழுவிலுள்ள மற்றொரு உறுப்பினர், இராக்பெல்லர் பிலந்த்ரோபி அட்வைசர்சு என்ற அமைப்பின் மூத்த ஆலோசகரான டோன்செலினா பர்ரோசோ என்பவர் ஆவார். இந்த குழுவின் மதிப்பீட்டாளர், ஃபாக்சு அண்டு ஃப்ரெண்ட்சு வீக்கு எண்டு என்ற நிகழ்வின் தொகுப்பாளரான அலிசின் கேமரோட்டா ஆவார். விவாதத்தில் , கிவ்பேக்கு அதாவது திருப்பி அளித்தல் என்னும் கருத்தை பருவ வயதினருக்கும், குழந்தைகளுக்கும் குறைந்த வயதிலிருந்தே ஊக்கப்படுத்தும் வழிமுறைகள் அடங்கியிருந்தது.[17]

குடும்பம் தொகு

 

மீரா காந்தி பெரும்பாலும் நியூயாரக் நகரத்திலேயே தங்குகிறார். மேலும் முன்னாள் அமெரிக்க முதன்மைப் பெண்மணியான எலியனோர் இரூசுவெல்ட் அவர்களுடைய வரலாற்று சிறப்பு மிக்க டவுன் அவுசு, இவருக்குச் சொந்தமானதாகும். இவருக்கு நன்கு வளர்ந்த  29,24,20 வயதுள்ள மூன்று குழந்தைகள் உண்டு. இருவர் பெண் , ஒருவர் ஆண் ஆகும். இவர் யோகா, தியானம் மற்றும் வரலாற்றை விரும்புகிறார்.  இவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி மனவழுத்தம் இல்லாத வாழ்க்கை பற்றி மீரா காந்தி டிவி என்னும் தொலைக்காட்சி  தொடரை தயாரித்து ஒவ்வொரு ஞாயிறன்றும் பி4 யூ டிவி நெட்வொர்க்கில் ஒளிபரப்புகிறார். மிகவும் வெற்றியடைந்த இந்த காட்சியை www.TheMeeraGandhiShow.com என்ற இணைய தளத்தில் காணலாம். இத்தொடரின் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து குறிப்புகள் எடுக்கப்பட்டு ஒரு புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. கிவிங்கு வரிசையில் மன அமைதி தரும், உலகத்திலேயே மிக ஆடம்பரமான வாசனைப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும் வாசனை,உடம்பு,குளியல் மற்றும் செல்(gel) முதலிய பொருட்கள் இவருக்கு சொந்தமாகும்.   மேலும் பாம் பீச்சு புளாரிடா , ஐடு பார்க்கு நியூயார்க்கு இந்த இரண்டு சொத்துக்கள் மீரா காந்தி அவர்களின் குடும்பத்துக்கு சொந்தமானதாகும்.[1][18]

விருதுகளும் அங்கீகாரங்களும் தொகு

கடந்த பல வருடங்களில் , காந்தியும் அவரது பவுண்டேசனும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளனர்.

  • மார்க் அந்தோணி மேசுட்ரோ கேர்சு ஃபவுண்டேசன் - அகில உலக மனித நேய விருது, 16 பிப்ரவரி 2016 [19]
  • நியூயார்க் நகர மேயர் அலுவலகத்திலிருந்து ,பெற்ற 2015 ஆண்டுக்கான மனித நேய விருது
  • 2015-ல் தி எல்லிசு ஐலண்ட் தங்கப்பதக்கம் விருது
  • 2015-ல் தி மார்க்கு அந்தோணி மேசுட்ரோ கேர்சு மனித நேய விருது
  • நியுயார்க் சிடி மேயர் விருது 2015
  • சேர் அண்டு கேர் பவண்டேசன், நியு ஜெர்சி 2014-2015
  • எல்லிசு ஐலண்ட்டு கௌரவப்பதக்கம்[20]
  • சே. லியுசு பவுண்டேசன் விருது, 26 பிப்ரவரி 2015[21][22][23]
  • சிட்டி ஆப் நியுயார்க் ப்ரொக்லமேசன் அட் தி யுனைடட் நேசன்ஸ் சிறிலங்கா மிசன், 26 பிப்ரவரி 2015
  • மார்க் அந்தோணி மேசுட்ரோ கேர்சு பவுண்டேசன் - குலோபல் இயுமானிடேரியன் அவார்டு, 17 பிப்ரவரி 2015 [24][25][26]
  • சில்ட்ரன்சு கோப்பு மனித நேய விருது, 13 October 2013
  • கார்ப்பரேட்டு குலோபல் மனித நேய விருது, 2013
  • போசுடன் பல்கலைக்கழகம் அளிக்கும் பல்கலையின் மிகப்பெரிய கௌரவமான தனிப்பெருமை அலும்னி விருது, 2011 [27]
  • டோன்னா கரன் இன்டர்நேசனல் "ஊக்குவிக்கும் பெண்மணிகள்," 2011 [28]
  • வாயூ டாயா பவுண்டேசன் வழங்கும் இந்த ஆண்டின் நபர், 2010 [28]
  • ஒன் டு வேர்லடு நிறுவனத்தின் வருடாந்தர புல்ப்ரைட்டு அவார்டு இரவு விருந்தில் மீரா காந்தியும் விக்ரம் காந்தியும் கௌரவிக்கப்பட்டனர் , 2007

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "பற்றி". மீரா காந்தி. Archived from the original on 2016-03-29. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  2. 2.0 2.1 2.2 "காக்கப்பட்ட நகல்". Archived from the original on 18 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. குண்ஜீத்து சுரா (2011-12-08). "தி பவுண்டன் பெட்: மீரா காந்தி : பெண் - இந்தியா டு டே 19122011". Indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  4. "st மைக்கேல்சு இரெநோவேஷன் கிவிங்கு பேக் பவுண்டேசன் ராசீவ் அகர்வால் மற்றும் பலர் மீரா காந்தி விருது உட்சுடாக் பிலிம் விழா". Goodnewsplanet.com. 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  5. "உசா தேவி இரதோர்". Ashacentre.org. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. [1]
  7. "ஜிஎல்டபிள்யு திட்ட அறிக்கை". எலியநோர் இரூசுவெல்ட்டு இலீடர்சிப்பு சென்டர் அட் வால்-கில் 2013: 7. 2013. 
  8. "டபிள்யு.எப்.எப் 2013 கிவிங்கு பேக் விருது". Woodstockfilmfestival.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  9. எடிட்டர், பிபி (2012-08-28). "மீரா காந்தி "கிவ்ஸ் பேக்" - பிபி மேகசைன் மாடர்ன் குலோபல் சுடைல், பிரைடல் பேசன் | பிபி மேகசைன் மாடர்ன் குலோபல் சுடைல், பிரைடல் பேசன்". Bibimagazine.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  10. "தி ஆரோவியன்". Harrowasscoiation.com. நவம்பர் 24, 2012. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  11. "மீரா காந்தி அவர்களின் தி கிவிங்கு பேக் வரிசை தயாரிப்புகள்". Givingbackfragrance.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  12. மெல்வானி, லாவினா (2010-07-25). "கிவிங்கு பேக் பற்றி மீரா காந்தி". Lassiwithlavina.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  13. "தி ஆஷா சென்டர்". Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "கிவிங்கு பேக் என்ற மீரா காந்தியின் திரைப்படத்தைத் தொகுத்தளித்தல்: |". Questmag.com. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  15. [2] பரணிடப்பட்டது 2016-08-28 at the வந்தவழி இயந்திரம்
  16. கவுன்ட்ஸ், அலெக்ஸ் (17 மே 2012). "திருப்பி அளித்தல்: ஒரு எளிமையான் மற்றும் சக்தி வாய்ந்த கருத்து". கிராமீன் பவுண்டேசன். பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "மீரா புத்தக நுழைவில்'கிவிங்க் பேக்' விவாதிக்கப்பட்டது". பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. எம்.கிரிஸ்டீன் செய்த பதிவு (2009-09-10). "மூவர்சு அண்டு சேக்கர்சு: மீரா காந்தி, ஸிஇஓ எம் டி ஜி ப்ரொடக்சன்ஸ் மனித நேயத்தில் உறுதியாக நிற்பவர்". ஊம் யு நோ. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  19. "மேசுட்ரோ கேர்சு ஃபவுண்டேசன் நியுயார்க் சிட்டி பிப்ரவரி 16, 2016". தி கிவிங்கு பேக் பவுண்டேசன். 2016-02-16. Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  20. "இந்திய அமெரிக்கர்கள் எல்லிசு ஐலண்ட்டு கௌரவப்பதக்கம் பெறுகின்றனர்". Thegivingbackfoundation.net. 2015-05-18. Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  21. சிம் லியூசு சேம்சு சே டட்லி லியூசு பவுண்டேசன் (2015-05-05). "யு.என். மிசனில் இளம் தலைவர்களையும் மனிதாபிமானமுள்ளவர்களையும் கௌரவித்தல்". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  22. "போட்டோ ப்ளாசு: 2015 இலியூசு இலீடர் அவார்ட்சு ரிசப்சன் மனிதாபிமானமுள்ளவர்களையும் & எதிர்கால உலகத்தலைவர்களையும் கௌரவிக்கிறது". Broadwayworld.com. 2015-02-26. Archived from the original on 2016-09-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  23. "பாதுகாக்கப்பட்ட நகல்". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  24. காம்மல், சாரா (2015-02-18). "மார்க்கு அந்தோணியின் பிள்ளைகள் அனாதைகளின் வாழ்க்கையை மாற்ற எப்படி ஊக்குவிக்கின்றனர்- குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை , மார்க்கு அந்தோணி". People.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  25. "ஆதரவளித்தல் மேசுட்ரோ கேர்சு மார்க்கு அந்தோணியுடன்,மீரா காந்தி, ப்ரேவோசு இலூயிசு ஓர்ட்டிசு மற்றும் சி சி ரோட்ரிக்சு". ஆர்தர் கேட்டு. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  26. "மார்க் அந்தோணி & கென்றி கேர்டினசு, மேசுட்ரோ கேர்சு பவுண்டேசனின் இணை நிறுவனர்கள் , என்ஒய்சி காலா பண்ட்ரைசர் மூலம் பின்தங்கிய இலாடின் அமெரிக்காவிலுள்ள குழந்தைகளுக்கு உதவி என்ற நிகழ்ச்சி தொகுத்தளிப்பு". இலாடின் போஸ்ட். 2015-02-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  27. "அலும்னி வீக்கு எண்டு" (PDF). Bu.edu. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
  28. 28.0 28.1 "மீரா காந்தி". கிளாடியா சேன். 2013-01-13. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_காந்தி&oldid=3792964" இலிருந்து மீள்விக்கப்பட்டது