முகம் சிவத்தல்

முகம் சிவத்தல் (Blushing) என்பது உளவியல் காரணங்களினால் முகம், காது மடல்கள், கன்னம் ஆகியவற்றில் மேலோட்டமாக ஏற்படும் முகம் சிவந்துபோவதைக் குறிக்கிறது. முகம் சிவத்தல் பொதுவாக மனவுளைவு, கோபம் அல்லது காதல்வயப்பட்டத் தூண்டுதல்கள் ஆகிய உணர்ச்சிகளின் அழுத்தங்களைத் தன்னிச்சையாகப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. பல்வேறு உடலியக்கக் காரணங்களால் குறிப்பிட்ட அளவு முகம் மற்றும் பிற சருமப் பகுதிகளில் சிவந்திருக்கும் நிலையான தோல் சிவத்திலிருந்து முகம் சிவத்தல் வேறுபடுகிறது. முகம் சிவப்பதைக் கண்டு பயப்படுவதை சிகப்பு வெறுப்பு (Erythrophobia) என்று கூறலாம்[1][2].

முகம் சிவந்துக் காணப்படும் ஒரு இளம் பெண்.

மேற்கோள்கள் தொகு

  1. Gieler, Uwe; Kusnir, Daniel; Tausk, Francisco A. (2008-11-14). Clinical Management in Psychodermatology. Springer Science & Business Media. பக். 59–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783540347187. http://books.google.com/books?id=NHnEMdgKJbIC&pg=PA59. பார்த்த நாள்: 7 December 2014. 
  2. W, Stekel, (2013-07-04). Conditions Of Nervous Anxiety And Their Treatment. Routledge. பக். 236–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136299315. http://books.google.com/books?id=pdoIaKOuRlgC&pg=PA236. பார்த்த நாள்: 7 December 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்_சிவத்தல்&oldid=1992421" இலிருந்து மீள்விக்கப்பட்டது