முக்கூற்று ஏரணத் தொடரி

முக்கூற்று ஏரணத் தொடரி அல்லது தொடர் வாதமுறை விவாதம் (Polysyllogism; செயல் உச்சம், பல் முதற்கோள் முக்கூற்று ஏரணம் அல்லது தொடர் வாதமுறை எனவும் அழைக்கப்படும்) என்பது முக்கூற்று ஏரணத்தின் வரிசையை ஒன்றாக உருவாக்கும் கூற்றினுடைய எண்ணிக்கைத் தொடர் ஆகும். இது ஒவ்வொரு முக்கூற்று ஏரணத்தினதும் முடிவாகவும், அடுத்த கூற்றுடன் ஒன்றாகவும், அடுத்த முதற்கோள் என தொடர்ந்து செல்லும்.[1]

உதாரணம் தொகு

முக்கூற்று ஏரணத் தொடரிக்கான ஓர் உதாரணம்:

மழை பெய்கிறது.
மழை பெய்யும்போது நாம் வெளியே சென்றால், நாம் நனைந்து விடுவோம்.
நாம் நனைந்தால், நமக்குத் தடிமன் பிடித்துவிடும்.
ஆகவே, நாம் வெளியே சென்றால், நமக்குத் தடிமன் பிடித்துவிடும்.

புதிய முக்கூற்று ஏரணங்களில் பின்வருமாறு அமையும்:

மழை பெய்கிறது.
மழை பெய்யும்போது நாம் வெளியே சென்றால், நாம் நனைந்து விடுவோம்.
ஆகவே, நாம் வெளியே சென்றால், நாம் நனைந்து விடுவோம்.

நாம் வெளியே சென்றால், நாம் நனைந்து விடுவோம்.
நாம் நனைந்தால், நமக்குத் தடிமன் பிடித்துவிடும்.
ஆகவே, நாம் வெளியே சென்றால், நமக்குத் தடிமன் பிடித்துவிடும்.

தொடர் வாதமுறை தொகு

தொடர் வாதமுறை (sorites) என்பது முக்கூற்று ஏரணத் தொடரியின் குறிப்பிட்ட வகையாகும். இதில் ஒவ்வொரு கூற்றின் பயனிலை அடுத்த முதற்கோளுக்கான விடயமாக அமையும். உதாரணம்:

எல்லாச் சிங்களும் பெரும் பூனைகளாகும்.
எல்லாப் பெரும் பூனைகளும் கொன்றுண்ணிகளாகும்.
எல்லாக் கொன்றுண்ணிகளும் ஊனுண்ணிகளாகும்.
ஆகவே, எல்லாச் சிங்களும் ஊனுண்ணிகளாகும்.

உசாத்துணை தொகு

  1. "polysyllogism". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கூற்று_ஏரணத்_தொடரி&oldid=2747071" இலிருந்து மீள்விக்கப்பட்டது