முட்டை அடைகாக்கப்படுதல்

அடைகாத்தல் என்பது சில முட்டையிடும் விலங்குகள் முட்டையை அடைக்கும் செயல்முறையாகும்; சாதகமான சுற்றுச்சூழல் உள்ள நிலையில் முட்டையின் உள்ளே இருக்கும் கருவின் வளர்ச்சியையும் இது குறிக்கிறது. பல விலங்குகளின் அடைகாப்பு சிறப்பாக அமைய பல்வேறு காரணிகள் மிக முக்கியமானவையாக உள்ளன. உதாரணமாக பல ஊர்வனவற்றின் அடைகாப்புக்கு, நிலையான வெப்பநிலை தேவையில்லை, ஆனால் சரியான வெப்பநிலையானது சந்ததிகளின் s * x விகிதத்தை தீர்மானிக்கிறது. இதற்கு மாறாக பறவைகளில், சந்ததிகளின் பாலினம் மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பல விலங்கினங்களின் நல்ல அடைகாப்பிற்கு நிலையான, குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம் தேவை. . [1]

முட்டைகளை அடைகாக்கும் ஒரு பெட்டை காட்டு வாத்து

பறவைகள் அடைகாத்தல் தொகு

பறவைகளிடையே பரவலான அடைகாக்கும் நடத்தை உள்ளது. சாதாரணமாகப் பெண் பறவைதான் அடைகாக்கும். ஆனால் ஆண் பறவையும் பெட்டைக்கு இப்பணியில் உதவ முன்வருவதுண்டு, சில வேளைகளில் ஆண் அடைகாத்துக் கொண்டு, பெட்டை இரை தேடி உண்பதற்கு வழி செய்யும். பெரும்பாலான பறவைகள் ஆண்டிற்கு ஒரு முறையே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். பொதுவாக பறவை போன்ற வெப்ப இரத்த உயிரினங்களில், அடைகாக்கும் பறவையானது தனது உடலில் இருந்து வெப்பத்தை அளித்து அடைக்காக்கிறது. இருப்பினும் பல பறவை வகைகள், குறிப்பாக மெகாபோட்கள், அழுகும் குப்பைப் பொருட்களிலிருந்து உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்துகின்றன. [2] தென்னாப்பிரிக்காவின் பாலைவனங்களின் நமக்வா சாண்ட்கிரோவ்ஸ் பறவையானது பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் தன் முட்டைகளை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் அவை நிழலுக்காக அதன் இறக்கைகளை விரித்தபடி இருக்கின்றன. முட்டையில் ஈரப்பதமும் மிக முக்கியமானதாகும், ஏனென்றால் அதிக வெப்பத்தில் முட்டை வளிமண்டலத்தில் அதிகமான தண்ணீரை இழக்கும், இது குஞ்சு பொரிப்பதை சிக்கலாக்குகிறது அல்லது குஞ்சு பொறிக்காமல் போகும்.

பறவை அடைகாக்கும் காலம் (நாட்கள்)
கோழி 21
வாத்து 28, மஸ்கோவி வாத்து 35
கேனரி 13
வாத்து இனம் 28-33
தீக்கோழி 42
பெசண்ட் 24-26
புறா 16-19
ஜப்பானியக் காடை 16–18
போப்வைட் காடை 23-24
அன்ன பறவை 35
வான்கோழி 28
ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி 26

பாலூட்டிகளின் அடைகாத்தல் தொகு

மிகச் சில பாலூட்டிகள் முட்டையிடுகின்றன. இதில் நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டாக, வாத்தலகி ஆகும். இதன் முட்டைகள் சுமார் 28 நாட்களில் கருப்பையில் உருவாகின்றன , சுமார் 10 நாட்கள் மட்டுமே வெளிப்புற அடைகாப்பில் இருக்கின்றன. [3] முட்டையிட்ட பிறகு, அடைக்காக்கும்விதமாக பெண் வத்தலகி முட்டையை அணைத்தவாறு சுற்றி சுருண்டுகொள்கிறது.

ஊர்வனவற்றின் அடைகாத்தல் தொகு

ஊர்வனவற்றில் அடைகாக்கும் முறையானது பல வகையாக வேறுபடுகின்றது.

பல்வேறு வகையான கடல் ஆமைகள் தங்கள் முட்டைகளை கடற்கரை மணலில் புதைக்கின்றன. இந்த செயலானது வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாப்பையும் முட்டைக்கு நிலையான வெப்பநிலையையும் அளிக்கிறது.

பாம்புகள் கும்பலாக வாழும் வளைகளில் முட்டையிடுகின்றன. முட்டைகளை அங்கு ஏராளமான வளர்ந்த பாம்புகள் ஒன்றிணைந்து முட்டைகளை வெப்பமாக வைத்திருக்கிறன.

முதலைகள் அழுகும் தாவரக் குவியலில் தங்கள் முட்டைகளை இடுகின்றன அல்லது அவை தரையில் தோண்டி முட்டை இடுகின்றன.

குறிப்புகள் தொகு

  1. Ekarius, Carol (2007). Storey's Illustrated Guide to Poultry Breeds. 210 MAS MoCA Way, North Adams MA 01247: Storey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58017-667-5. https://archive.org/details/storeysillustrat0000ekar. 
  2. De Marchi, G., Chiozzi, G., Fasola, M. 2008 Solar incubation cuts down parental care in a burrow nesting tropical shorebird, the crab plover Dromas ardeola. Journal of Avian Biology 39 (5):484–486
  3. Erica Cromer (2004-04-14). "Monotreme Reproductive Biology and Behavior". Iowa State University. Archived from the original on 2009-03-13. பார்க்கப்பட்ட நாள் 2009-06-18.