முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்

முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (இலத்தீன்: Concilium Vaticanum Primum) திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் 29 ஜூன் 1868 அன்று அறிவிக்கப்பட்டு 6 டிசம்பர் 1864 அன்று தொடங்கிய கத்தோலிக்க பொதுச்சங்கம் ஆகும்.[1] இருபதாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இப்பொதுச்சங்கம் மூன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு 8 டிசம்பர் 1869 இல் தொடங்கி 20 அக்டோபர் 1870 இல் ஒத்திவைக்கப்பட்டது.[2]

முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
காலம்1869–1870
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
முந்திய சங்கம்
திரெந்து பொதுச்சங்கம் (1545–1563)
அடுத்த சங்கம்
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962–1965)
சங்கத்தைக் கூட்டியவர்ஒன்பதாம் பயஸ்
தலைமைஒன்பதாம் பயஸ்
பங்கேற்றோர்744
ஆய்ந்த பொருள்கள்பகுத்தறிவியம், தாராளமயம், பொருள்முதல் வாதம்; விவிலிய இறை ஏவுதல்; திருத்தந்தையின் தவறா வரம்
வெளியிட்ட ஏடுகள்/அறிக்கைகள்
Dei Filius, Pastor aeternus
பொதுச்சங்கங்களின் வரலாற்றுக் கால வரிசை

இதற்கு முன் நடந்த ஐந்து பொதுச்சங்கங்கள் இலாத்தரன் பேராலயத்தில் நடந்ததால் இலாத்தரன் பொதுச்சங்கங்கள் என்று அழைக்கப்பட்டன. ஆனால் இது வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நிகழ்ந்ததால் இது வத்திக்கான் பொதுச் சங்கம் எனும் பெயர் பெற்றது. திருத்தந்தையின் தவறா வரம் மறை உணமையாக திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டது இச்சங்கத்தின் குறிக்கத்தக்க செயல்பாடாகும்.[3]

அக்காலத்தில் நிளவிய பகுத்தறிவியம், அரசின்மை, பொதுவுடைமை, சமூகவுடைமை, தாராளமயம், பொருள்முதல் வாதம் முதலியவற்றால் எழுந்த பல கேள்விகளுக்கு விடைக்காண இச்சங்கம் கூட்டப்பட்டது.[4] இதோடு கிறிஸ்துவின் திருஅவை குறித்த தெளிவுக்காகவும் கூட்டப்பட்டது.[5] இரண்டு ஆவணங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன: கத்தோலிக்க நம்பிக்கை பற்றிய கோட்பாட்டு விளக்கம் (Dei Filius) மற்றும் திருச்சபை பற்றிய கோட்பாட்டு விளக்கம் (Pastor aeternus). இதில் முதல் ஆவணம் பகுத்தறிவியத்தால் ஏற்பட்ட தீமைகளையும், இரண்டாம் ஆவணம் உரோமை ஆயரின் முதன்மை மற்றும் தவறா வரம் குறித்தது ஆகும்.[5] பகுத்தறிவியம், தாராளமயம், பொருள்முதல் வாதம் மற்றும் அனைத்து இறைக் கொள்கை முதலியவை கண்டிக்கப்பட்டட்ன. 19 ஆம் நூற்றாண்டின் முக்கிய கருத்தியல்களுக்கு எதிராகவும், தன் அடிப்படைவாதத்தை தற்காத்துக்கொள்ளும் வகையிலுமே இச்சங்கத்தின் செயல்பாடுகள் இருந்தன.[6]

மேற்கோள்கள் தொகு