முதுகுநாண்

முதுகுநாண் என்பது கரு நிலையில் எல்லா முதுகுநாணி விலங்குகளிலும் காணப்படும் வளையக்கூடிய தண்டு அல்லது உருளையான குச்சி போன்ற உடல் அமைப்பு. இம் முதுகுநாண் உடலின் அச்சு போன்று, தலை போன்ற பகுதியில் இருந்து வால் போன்ற பகுதிவரை வரை நீண்டிருக்கும். இம் முதுகுநாண், கரு உருவாகும் முதல்நிலைகளில் தோன்றும் மேசோடெர்ம் (mesoderm) எனப்படும் கருநிலைப் படலமாகிய அமைப்பில் இருந்து பெறும் செல்களால் (கண்ணறைகளால்) உருவாகின்றது. உடலமைப்பு எளிமையான முதுகெலும்பி விலங்குகளில் இந்த முதுகுநாண் வாழ்நாள் முழுவதும் அவற்றின் உடல் அச்சாக நிலைத்து இருக்கும். உயர்நிலை முதுகெலும்பிகளில், இந்த முதுகுநாண் மறைந்து, முதுகெலும்பாக மாற்றப்படும். முதுகுநாண், நரம்புக் குழாய்க்கு (neural tube) கீழே (அடிப்புறம்) அமைந்திருக்கும்.

இப் படத்தைச் சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம். முதுகுநாண் காட்டும் படம். முதுகுநாண், "2" என்னும் எண்ணால் சுட்டும் கறுப்பான நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதி.. மீன் போன்ற உயிரினத்தின் நீட்ட திசையில் (தலை-வால்) மேலிருந்து கீழாக நெடுக்குவெட்டுத் தோற்றமும், இடப்புற படத்தில் அதற்கு செங்குத்தான திசையின் குறுக்குவெட்டுத் தோற்றமும் காட்டப்பட்டுளன. 1. மூளை போன்ற புடைப்பு (brain like blister) 2. முதுகுநாண் (notochord) 3. முதுகுத் தண்டுவடம் (நரம்பு வடம்) (dorsal nerve cord) 4. பின்வால் (post-anal tail) 5. கழிவாய் (anus) 6. உணவுக்குழாய் (food canal) 7. இரத்த குழாய் இயக்கம் (blood system) 8. அடி வயிற்றுத் துளை (abdominal porus) 9. தொண்டை உறைக் குழி (overpharynx lacuna) 10. செகிள் பிளவு (gill's slit) 11. (தொண்டை) pharynx 12. வாய்க் குழி (mouth lacuna) 13. இழைகள் (mimosa) 14. வாய் திறப்பு (mouth gap) 15. விரை/ இனப்பெருக்க உறுப்புகள் (gonads (ovary/testicle) 16. ஒளி உணரி (light sensor) 17. நரம்பு (nerves) 18. வயிற்றடி (abdominal ply) 19. கல்லீரல் போன்ற பயன் தரும்ம் பைliver like sack

இந்த முதுகுநாண், முதுகெலும்பு போன்ற உடல் அச்சாகத் தோன்றிய முதல் வடிவம் எனக் கொள்ளலாம். முதுகெலும்பு இல்லாத முதுகுநாணி விலங்குகளில், உடலுக்கு உறுதி தரும் அமைப்பாக இது உள்ளது. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், கரு வளர்ச்சியுறும் முதல்நிலைகளில் இந்த முதுகுநாண் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகுநாண்&oldid=1349892" இலிருந்து மீள்விக்கப்பட்டது