முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழிகள் என்பன பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள். ஈமத்தாழிகள் என்றும் அழைக்கப்படும் இவை பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.

கழுகுமலை, முதல் நூற்றாண்டுச் சேர்ந்த முதுமக்கள் தாழி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமக்கள்_தாழி&oldid=3693965" இலிருந்து மீள்விக்கப்பட்டது