முதுமையடைதல்

மனித வாழ் நாளின் இறுதி ஆண்டுகளை முதுமை என்கிறோம். ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிபடியாக மனிதர் முதுமைப்படுவர் (ageing). இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்ற முடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது.

முதுமையும் சாவுமே மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா மிக மோசமான கொடுமையாக பலராலும் பாக்கப்படுகிறது. ஆகையால், இயன்றவரை வாழ்நாளை கூட்ட பல்வேறு ஆய்வுகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இதுவரை முதுமைப்படுதலை தடுக்க பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட எந்த வழிமுறையும் இல்லை.[1]

முதுமையின் வெளிப்பாடு தொகு

 
முதுமையின் வடுக்கள்

முதுமைப்படுதலால் உடலின் செயல்பாடு குன்றும். திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றும். மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் உட்படும். இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுத்லின் காரணமாகவே ஏற்படுகிறது.

வாழ்நாள் எதிர்பார்ப்பு தொகு

 

வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமூக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து சுவாசிலாந்தில் 32.6 ஆண்டுகள் தொடங்கி, யப்பானில் 81 ஆண்டுகள் வரை என வாழ்நாள் எதிர்பார்ப்பு வேறுபடுகிறது.[2] பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு கூடியே வருகிறது. இடைக்காலத்தில் 35 வயதுக்குட்பட்டே வாழ்நாள் எதிர்பார்ப்பு இருந்தது, இன்று இது இரண்டு மடங்காக கூடி உள்ளது[3].

இருப்பினும் பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை[4]. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிக கூடிய வாழ்நாள் கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.

முதுமை பற்றிய கோட்பாடுகள் தொகு

நாம் ஏன் முதுமை அடைகிறோம் என்பது பற்றி பல கோட்பாடுகள் இருக்கின்றன. இவை தனித்தனியே முழு விளக்கத்தையும் தருவதில்லை.

படிவளர்ச்சி முதுமைக் கோட்பாடு (Evolutionary Theory) தொகு

மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் சாரம். இந்தக் கோட்பாட்டைப் பற்றி Theodore. C. Goldsmith Theories of Biologcal Aging [1] என்ற ஆய்வறிக்கையில் விளக்கம் காணலாம்.

காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. இதனால் ஒரு உயிரினம் தனது உடல் வளங்களை இளம்பருவத்தில் குவியப்படுத்துகின்றது. குறிப்பாக உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. இதனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து, உயிர் துறக்கிறது.

மேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.

மரபணு முதுமைக் கோட்பாடு (The Genetic Theory of Aging) தொகு

மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது.

பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன.

Cellular Senescence கோட்பாடு தொகு

முதுமைக்கு ஒரு விளக்கம் Cellular Senescence theory. தற்போது இருக்கும் தகவல்களின் படி உடலில் இருக்கும் கலன்கள் எழுந்த மானமாக ஆக அல்லது தம்மைப் படி எடுக்கும் பொழுது சிறு பிழைகள் விட வாய்ப்பு உண்டு. அந்த பிழைகள் நாளடைவில் சேர்ந்து உடலை வலு இழக்கச் செய்கின்றன. இவை தம்மைப் புதிப்பிக்கும் அல்லது படி எடுக்கும் முறை நாளடைவில் சீர் குறைந்து, இறுதியாக சாவுக்கு இட்டுச்செல்கிறது.

Free Radical Theory of Aging தொகு

கலன்கள் ஆற்றலை உற்பத்தி செய்யும்பொழுது நிலையற்ற உயிர்வளி மூலக்கூறுக்களையும் (oxygen molecules) உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையற்ற மூலக்கூறுகளை free radicals என்பர். இந்த நிலையற்ற மூலக்கூறுகளில் ஒரு இலத்திரன் மேலதிகமாக இருக்கும். இவை பிற மூலக்கூறுகளிலும் சேர்ந்து, அவற்றை முறையாக இயங்க விடுவதில்லை. Damage to DNA, protein cross-linking போன்றவற்றுக்கு இதுவே காரணம். காலப்போக்கில் இத்தகைய தவறுகள் குவிந்து முதுமைக்கு காரணமாகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 http://www.azinet.com/aging/Theories_Summary.pdf
  2. http://www.un.org/esa/population/publications/wpp2006/WPP2006_Highlights_rev.pdf United Nations World Population Propsects: 2006 revision
  3. http://news.bbc.co.uk/2/hi/health/241864.stm
  4. Whitney, Craig R.. "Jeanne Calment, World's Elder, Dies at 122", The New York Times, 1997-08-05. Retrieved on 2007-10-22.

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gerontology
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமையடைதல்&oldid=3225247" இலிருந்து மீள்விக்கப்பட்டது