முத்துராஜா

முத்தரையர்

முத்துராஜா (Muthuraja) அல்லது முத்தரையர் (Mutharaiyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.

முத்துராஜா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வலையர், அம்பலகாரர்

சொற்பிறப்பு

ஒரு கோட்பாட்டின்படி, மு என்பது "மூன்று" என்றும் மற்றும் தரை என்பது "பூமி" என்று பொருள்படும். இது தோராயமாக மூன்று பிரதேச மக்களைக் குறிக்கிறது. அரையர் என்பதும் ராஜா என்று பொருள்படும் என்பதால், இது மூன்று பிரதேசங்களின் பிரபு/அரசன் என்றும் பொருள் கொள்ளலாம்.[1][2][3] முத்தி என்ற சொல்லுக்கு பழையது என்றும் பொருள், எனவே சில அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்களின் பெயர் 3 பிரதேசங்களின் இளவரசர்களையும் குறிக்கும்.[4]

இவர்கள் பொதுவாக காவல்காரர் என்று அழைக்கப்படுகிறார்கள். இது காவல் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது "பாதுகாத்தல்" என்று பொருள்படும், இவர்கள் கிராம காவலர்கள் மற்றும் வீரர்கள் ஆவர்.[5][6] இவர்கள் அம்பலக்காரர் எனவும் அழைக்கப்படுகின்றனர் அம்பலக்காரர் என்பது அம்பலம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, இவர்கள் வாழும் கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள்.[5]

பிரிவுகள்

தமிழகத்தில், முத்தரையர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். பொதுவாக தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தங்களை முத்துராஜா, முத்தரையர் என்று அழைத்துக் கொள்கின்றனர். இவர்களுடன் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட முத்துராஜா நாயுடு [7], முத்திரிய நாயுடு [8] மற்றும் பாளையக்கார நாயக்கர்[9] சமூகத்தவர்களும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், 1996இல் வெளியிடப்பட்ட முத்தரையர் அரசாணை எண் G.O.15/22.02.1996 படி, முத்தரையர் சமூகத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளன.[10][11] அதன்படி அந்த 29 சமூகப் பிரிவுகள் பின்வருமாறு:-

  1. முத்துராஜா
  2. முத்திரியர்
  3. அம்பலகாரர்
  4. சேர்வை
  5. சேர்வைக்காரன்
  6. வலையர்
  7. கண்ணப்பகுல வலையர்
  8. பரதவலையர் (பார்தவ வலையர்)
  9. பாளையக்காரன்
  10. காவல்காரன்
  11. தலையாரி
  12. வழுவாடியார்
  13. பூசாரி
  14. முதிராஜ்
  15. முத்திரிய மூப்பர் (சாணான்)
  16. முத்திரிய மூப்பனார் (பார்க்கவ குலம்)
  17. முத்திரிய நாயுடு (கவரா)
  18. முத்திரிய நாயக்கர்
  19. பாளையக்கார நாயுடு
  20. பாளையக்கார நாயக்கர்
  21. முத்துராஜா நாயுடு
  22. வன்னியகுல முத்துராஜ்
  23. முத்திரிய ஊராளிக் கவுண்டர்
  24. முத்திரிய ராவ்
  25. வேட்டுவ வலையர்
  26. குருவிக்கார வலையர்
  27. அரையர்
  28. அம்பலம்
  29. பிள்ளை

29 முத்தரையர் உட்பிரிவுகள் இணைத்த வரலாறு

 
புதுக்கோட்டை முத்தரையர் மாநாட்டில் முதல்வர் எம்.ஜிஆர் உடன் சங்க மாநிலதலைவர் வெங்கடசாமி நாயுடு

1977 ஆகத்து 06, அன்று சட்டசபையில் பேசிய எம். ஆர்.கோவேந்தன், தமிழ்நாட்டில் பல்வேறு வழங்கு பெயர்களில் வாழ்ந்து வரும் முத்தரையர்கள் அனைவரையும் முத்தரையர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டும் என அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தார்.[12][13] அதனை தொடர்ந்து 12 ஆகத்து, 1979இல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த குழ. செல்லையா, தன்னுடைய தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் சார்பாக, புதுக்கோட்டையில் முதலாவது முத்தரையர்கள் மாநில மாநாட்டை நடத்தினார்.[14] அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் பேசிய போது,[15] 27 சாதிகளை ஒழிக்கக்கூடிய மாநாடாக இருக்கிற காரணத்தால், அந்த 27 ஜாதிகளை ஒழித்து, முத்தரையர் என்ற ஒரே ஜாதியின் கீழ் கொண்டு வரும் அரசாணையை விரைவிலே பிறப்பிக்க இருக்கிறேன்[16] என்று கூறினார், ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.24 சனவரி, 1981 அன்று தமிழக சட்டசபையில் பேசிய மெ. ஆண்டி அம்பலம், பல்வேறு வழங்கு பெயர்களில் வாழ்ந்து வரும் முத்தரையர்கள் அனைவரையும் முத்தரையர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அப்போதைய நிதித்துறை அமைச்சராக இருந்த இரா. நெடுஞ்செழியனிடம் வினா எழுப்பினார்.[17] 11 சூலை, 1985 அன்று தமிழக சட்டசபையில் பேசிய அ. வெங்கடாசலம், புதுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்தை நினைவுகூர்ந்து முத்தரையர் இனத்தின் 27 பிரிவுகளையும் முத்தரையர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டும் என அன்றைய முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரனிடம் மீண்டும் கோரிக்கை வைத்தார்.[18] 07 பிப்ரவரி, 1996 அன்று அப்போதைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில், திருச்சியில் நடத்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பேசிய போது,[19][20] தமிழ்நாடு முழுவதும் 29 உட்பிரிவுகளில் வாழும் அனைவரையும் ஒன்றிணைந்து "'முத்தரையர்"' என்ற ஒரே ஜாதியின் கீழ் கொண்டு வரும் அரசாணையை விரைவிலே பிறப்பிக்க இருக்கிறேன் என வாக்குறுதியளித்தார்.[21] அதனை தொடர்ந்து 22 பிப்ரவரி, 1996 இல் அன்றைய தமிழக அரசின் தலைமை செயலாளர் என். ஹரிபாஸ்கர், 29 உட்பிரிவுகளை இணைத்து பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் G.O.15/22.02.1996 படி, தமிழக அரசு, முத்தரையர் அரசாணை [22] வெளியிட்டது.

வாழும் பகுதிகள்

தமிழ் சமூகத்தை சேர்ந்த முத்தரையர்கள், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையாகவும், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமாகவும் வசிக்கின்றனர்.

வட தமிழகத்தில் முத்தரைய நாயுடு மற்றும் முத்தரைய நாயக்கர் என்ற பெயரில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமாகவும், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவிலும் வசிக்கின்றனர்.[23][24]

அண்டை மாநிலங்களான ஆந்திராவில் முதிராஜு, பாளேகாரர், தெலகா, தலாரி போன்ற பெயர்களிலும், கர்நாடகா மாநிலத்தில் பேஸ்த, போயர்,வால்மீகி  கங்கவார், என்ற பெயரிலும், கேரளா மாநிலத்தில் அரையர் என்ற பெயர்களிலும், வட இந்திய மாநிலங்களில் கோலி என்ற பெயரில் வாழ்கின்றனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. University of Calcutta. Dept. of Ancient Indian History and Culture. Journal of Ancient Indian History, Volume 5. D.C. Sircar, 1972 - India. பக். 78. 
  2. Journal of Indian history, Volume 19, page 40
  3. "A Comprehensive Etymological Dictionary of the Tamil Language". www.tamilvu.org. Government of Tamil Nadu. p. 200. பார்க்கப்பட்ட நாள் 2018-12-03. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. M. Arunachalam. The Kalabhras in the Pandiya country and their impact on the life and letters there. University of Madras, 1979 - Kalabhras - 168 pages. பக். 38. 
  5. 5.0 5.1 Kent, Eliza F. (2013-03-26) (in en). Sacred Groves and Local Gods: Religion and Environmentalism in South India. Oxford University Press. பக். 33–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199895472. https://books.google.com/books?id=kkppAgAAQBAJ. 
  6. Delhi, University of (1991) (in en). Annual Convocation ... Handbook of Research Activities. University of Delhi. பக். 293. https://books.google.com/books?id=9uHkAAAAMAAJ. 
  7. எஸ்.சஞ்சய் ராமசாமி, தொகுப்பாசிரியர் (15 Sep 2010). மத்திய மண்டலம் அரசியல் பரபர முத்தரையர்கள் வாக்கு யாருக்கு?. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/local-bodies/52920--2. "96-ம் ஆண்டு 29 பிரிவுகளாக இருந்த எங்கள் சமுதாய மக்களை 'முத்தரையர்கள்' என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பித்தார் ஜெயலலிதா" 
  8. N . Hari Bhaskar, Chief Secretary of Tamil Nadu Government, தொகுப்பாசிரியர் (July 1996). G.O.Ms.No :15 ( Backward Classes and Most Backward Classes Welfare Department ) dated 22-2-96. TAMIL NADU ELECTRICITY BOARD BULLETIN. http://tneb.tnebnet.org/test1/Gazette/YearWisePDF/1996/1996_July.pdf. "( PART - 2 ) GENERAL ADMINISTRATION & SERVICES ( Page 2 ) GOVERNMENT OF TAMILNADU ABSTRACT : WELFARE OF BACKWARD CLASSES - Mutharaiyar community and its Sub-sects calling the main community and its Sub-sects as Mutharaiyar - Orders - Issused" 
  9. எம் .ஆர் .கோவேந்தன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 06.08.1977 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரை. முத்தரையர் முழக்கம் மாத இதழ். 18 ஆகஸ்ட் 1977. 
  10. எம்.ஆர்.கோவேந்தன், தொகுப்பாசிரியர் (06.08.1977). தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி. பணித்துறை வெளியீடு. பக். 66. https://books.google.co.in/books?id=gwEtAQAAIAAJ&q=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjypa--qLrqAhVGyzgGHT_xC8oQ6AEIJjAA. 
  11. கவிமாமணி கல்லாடன், தொகுப்பாசிரியர் (2003). வரலாற்றுச் சுடர்கள். புதுச்சேரி குழலி பதிப்பகம். பக். 199. https://books.google.co.in/books?id=cTBuAAAAMAAJ&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwin4P22ydTuAhXq4nMBHc5sDBEQ6AEwAXoECAIQAg. 
  12. எஸ்.சஞ்சய் ராமசாமி, தொகுப்பாசிரியர் (15 Sep 2010). மத்திய மண்டலம் அரசியல் பரபர முத்தரையர்கள் வாக்கு யாருக்கு?. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/local-bodies/52920--2. "சாதிய மாநாடுகளை ஒருபோதும் ஊக்கப்படுத்தாத எம்.ஜி.ஆர் புதுக்கோட்டையில் நடந்த எங்கள் சமுதாய மாநாட்டில் மட்டும் கலந்துகொண்டார்" 
  13. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி 13. பணித்துறை வெளியீடு. 1985. பக். 163. https://books.google.co.in/books?id=3nYdAAAAIAAJ&q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%27+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D++%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&dq=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%27+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D++%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwi__Z34q7rqAhWmzjgGHd6MC3gQ6AEIKDAA. 
  14. மெ. ஆண்டி அம்பலம், தொகுப்பாசிரியர் (ஜனவரி 1981). தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி. பணித்துறை வெளியீடு. பக். 210. https://books.google.co.in/books?id=XxstAQAAIAAJ&dq=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+. 
  15. Tamil Nadu (India). Legislature. Legislative Assembly, தொகுப்பாசிரியர். தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி 13. பணித்துறை வெளியீடு. பக். 162. https://books.google.co.in/books?id=3nYdAAAAIAAJ&q=27+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87&dq=27+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87&hl=en&sa=X&ved=0ahUKEwivkMSDr7rqAhX2zTgGHRWRC8YQ6AEIJjAA. "திரு. அ. வெங்கடாசலம் : முத்தரையர் பிரிவுகள் எல்லாம் கிட்டத்தட்ட 27 பிரிவினர்களாக இருக்கிறார்கள் அந்த 27 பிரிவினரை இந்த மாமன்றத்திலே நான் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் . முத்தரையர், முத்திரியர், முத்துரா ஜா, முத்துராச்சா, முத்தி ராஜ் அம்பலம், அம்பலக்காரர், வலையர், கண்ணப்ப குல வலை யர், பூசாரி தலையாரி நாயுடு, காவல்காரர், முத்திரிய மூப்பனார், முத்திரிய நாயக்கர், முத்திரிய நாயுடு, பாளையக் காரர், பாளையக்கார நாயுடு, முத்திரிய ஊராளிக் கவுண்டர், கம்பளத்தார், சேர்வை, சேர்வைக் காரர், தேவர், வழு வாடியார், பிள்ளை முதலிய 27 பிரிவினராக" 
  16. தமிழவேள், தொகுப்பாசிரியர் (சனவரி - மார்ச் 2020). அரசாணை அரசியல் 13. தமிழர் பெருவெளி இதழ். பக். 48. "திருச்சியில் அமைக்கப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலையை 07-02-1996 அன்று ஜெயலலிதா திறந்துவைத்தார். முத்தரையரான கு. ப. கிருஷ்ணன் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வேளாண்மை துறை இருந்து தமது சாதியின் கோரிக்கைகளைச் சாதித்துக்கொண்டார். பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, முத்தரையர்களின் கோரிக்கையை ஏற்றுப் பல பிரிவுகளாக இருக்கும் அச்சாதியினர் அனைவரையும் முத்தரையர் என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கான அரசாணை வெளியிடப்படும் என அறிவித்தார்." 
  17. பாரதி வேந்தன், தொகுப்பாசிரியர் (08 அக்டோபர் 2020). பொங்கியெழும் முத்தரையர்கள். தமிழக அரசியல் வார இதழ். பக். 28 & 29. "கடத்த 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில், திருச்சியில் நடத்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அதில் பேசிய அவர் தமிழகம் முழுவதும் 29 உட்பிரிவுகளில் வாழும் அனைவரையும் ஒன்றிணைந்து "'முத்தரையர்"' என்ற ஒரே ஜாதியின் கீழ் கொண்டு வரும் அரசாணையை விரைவிலே பிறப்பிக்க இருக்கிறேன் என வாக்குறுதியளித்ததோடு, அந்த மாதமே 15/22.02.1996 என்ற அரசாணையை அன்றைய தலைமை செயலாளர் என். ஹரிபாஸ்கர் மூலம் வெளியிடச் செய்தார்." 
  18. எஸ்.சஞ்சய் ராமசாமி, தொகுப்பாசிரியர் (15 Sep 2010). மத்திய மண்டலம் அரசியல் பரபர முத்தரையர்கள் வாக்கு யாருக்கு?. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/local-bodies/52920--2. "96-ம் ஆண்டு 29 பிரிவுகளாக இருந்த எங்கள் சமுதாய மக்களை 'முத்தரையர்கள்' என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பித்தார் ஜெயலலிதா" 
  19. N . Hari Bhaskar, Chief Secretary of Tamil Nadu Government, தொகுப்பாசிரியர் (July 1996). G.O.Ms.No :15 ( Backward Classes and Most Backward Classes Welfare Department ) dated 22-2-96. TAMIL NADU ELECTRICITY BOARD BULLETIN. http://tneb.tnebnet.org/test1/Gazette/YearWisePDF/1996/1996_July.pdf. "( PART - 2 ) GENERAL ADMINISTRATION & SERVICES ( Page 2 ) GOVERNMENT OF TAMILNADU ABSTRACT : WELFARE OF BACKWARD CLASSES - Mutharaiyar community and its Sub-sects calling the main community and its Sub-sects as Mutharaiyar - Orders - Issused" 
  20. நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்" 
  21. Census Year 1951 see:
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துராஜா&oldid=3772401" இலிருந்து மீள்விக்கப்பட்டது