முனீசுவரர்

முனீசுவரர் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார்.வீரமும்,ஆவேசமும் நிறைந்த தெய்வமான இவர் அந்தகாசுரனை அழித்தவராகக் கருதப்படுகிறார்.

முனீசுவர்
அதிபதிகாவல் தெய்வம்
Muneeswarar , Munīshwaran, Munīshwaran முனீஸ்வரன்

சொல்லிலக்கணம் தொகு

முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும்.

கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர்.

முனி என்ற சொல் ரிக் வேதத்தில் 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு - வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது..[1]

கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

வழிபாடு தொகு

தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்படுகின்றது.

மொட்டைக்கோபுர வழிபாடு தொகு

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது.

முனி தொகு

நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயராகும். இந்தப் பெயரில் எண்ணற்றவர்கள் உள்ளதாக குறிப்புகள் உள்ளன. பஞ்ச முனி என ஐந்து முனிகள் பச்சையம்மனுக்கு காவலாக உள்ளன. சில இடங்களில் சப்த முனிகளும் உள்ளார்கள்.

வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி போன்ற ஐந்து முனிகளை பஞ்ச முனி என்கிறார்கள், இவர்கள் பச்சையம்மனுக்கு துணையாக இருந்தவர்கள். [2] வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி, இலாடமுனி ஆகிய ஏழு முனிகளையும் வணங்குகின்றனர்.

கோயில்கள் தொகு

திரைப்படங்களில் தொகு

  • 2007ஆம் ஆண்டு முனி என்ற பெயரில் ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து, முனி 2: காஞ்சனா, முனி 3: காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களும் வெளியாகின. முனி 3இல் மொட்டை சிவா, முனீசுவரரை வணங்குவதாக, "சண்டிமுனி" என்ற பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. பொன்.மூர்த்தி. (2007). முனீஸ்வரன் பூஜை (பக். 16-17). சென்னை: வரம்.
  2. குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 9-10
  3. http://www.vikatan.com/news/spirituality/62794-body-guard-muneeswaran-temple.art பாடிகாட் முனீஸ்வரன் கோயில்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனீசுவரர்&oldid=3815950" இலிருந்து மீள்விக்கப்பட்டது