முர்ரே-டார்லிங் வடிநிலம்

முர்ரே-டார்லிங் வடிநிலம் (Murray-Darling Basin) ஆத்திரேலியாவில் முர்ரே, டார்லிங் ஆறுகளை அடுத்துள்ள நிலப்பகுதிகளாகும். இந்த வடிநிலப்பகுதியில் உள்ள நீரை நம்பி மூன்று மில்லியன் ஆத்திரேலியர்கள் உள்ளனர்.

முர்ரே–டார்லிங் வடிநிலத்தின் நிலப்படம்

ஆத்திரேலியாவின் மொத்த மழையளவில் கிட்டத்தட்ட 6 % முர்ரே-டார்லிங் ஆற்று வடிநிலத்தில் விழுகின்றன.[1] ஆத்திரேலியாவின் 85 விழுக்காடு நீர்ப்பாசனம் இந்த வடிநிலத்தில் உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆண்டுக்கு $9 பில்லியன் மதிப்புள்ள விவசாயம் செழிக்கிறது.

1,061,469 சதுர கிலோமீட்டர்கள் (409,835 sq mi) பரப்பளவிலுள்ள முர்ரே-டார்லிங் வடிநிலம் ஆத்திரேலியாவின் மொத்த நிலப்பகுதியில் ஏறத்தாழ ஏழில் ஒருபங்காக (14%) உள்ளது. இப்பகுதியில் 2 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வாழ்கின்றனர்.

மேற்சான்றுகள் தொகு

  1. Prideaux, Bruce (2009). "River Heritage: the Murray–Darling River". in Prideaux, Bruce; Cooper, Malcolm. River Tourism. Wallingford, United Kingdom: CAB International. பக். 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84593-468-7. https://books.google.com.au/books?id=EpEvuRK4CHUC.