முஸ்கோஜிய மொழிக்குழு

முஸ்கோஜிய மொழிக்குழு என்பது தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உள்நாட்டுக்கு உரிய மொழிகளின் குடும்பம் ஆகும். இம் மொழிகள் பொதுவாகக் கிழக்கு மொழிகள், மேற்கு மொழிகள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. எனினும் இது குறித்த வாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இம் மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்.

ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட கால முஸ்கோஜிய மொழிப் பரவல்

மொழிக்குடும்பப் பிரிவுகள் தொகு

முஸ்கோஜிய மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்ற இரண்டு வகையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. வழக்கில் உள்ள வகைபிரிப்பு, மேரி ஹாஸ் என்பரும் அவரது மாணவர்களும் உருவாக்கியது. பிந்தியதும், சர்ச்சைக்குரியதும் ஆன இன்னொரு வகைப்பாடு பமீலா முன்றோ என்பவரால் உருவாக்கப்பட்டது.

ஹாஸ் வகைப்பாடு தொகு

  1. மேற்கு முஸ்கோஜிய மொழிகள்
    1. சிக்காசோ
    2. சொக்ட்டோ
  2. கிழக்கு முஸ்கோஜிய மொழிகள்
    1. நடு முஸ்கோஜிய மொழிகள்
      1. அப்பலாச்சி-அலபாமா-கோவாசாத்தி குழு
        1. அலபாமா-கோவாசாத்தி
          1. அலபாமா
          2. கோவாசாத்தி
        2. அப்பலாச்சி
          1. அப்பலாச்சி
      2. ஹித்சித்தி-மிக்காசுக்கி
        1. ஹித்சித்தி-மிக்காசுக்கி
    2. கிறீக்

முன்றோ வகைப்பாடு தொகு

  1. வடக்கு முஸ்கோஜிய மொழிகள்
    1. கிறீக் / செமினோலே
  2. தெற்கு முஸ்கோஜிய மொழிகள்
    1. தென்மேற்கு முஸ்கோஜியக் குழு
      1. அப்பலாச்சி
        1. அப்பலாச்சி
      2. அலபாமா-கோவாசாத்தி
        1. அலபாமா
        2. கோவாசாத்தி
      3. மேற்கு முஸ்கோஜிய மொழிகள்
        1. சிக்காசோ
        2. சொக்ட்டோ
    2. ஹித்சித்தி / மிக்காசுக்கி குழு
      1. ஹித்சித்தி / மிக்காசுக்கி

பிற மொழிகளுடனான தொடர்புகள் தொகு

ஹாஸ் (1951, 1952) என்பார், முஸ்கோஜிய மொழிகள், குடாப்பகுதி மொழிகள் எனப்படும் பெரிய மொழிக் குழு ஒன்றின் ஒரு பகுதி எனக் கருத்து வெளியிட்டார். குடாப்பகுதி மொழிகளுள், முஸ்கோஜிய மொழிகள், அத்கப்பா, சித்திமச்சா, துனிக்கா, நட்செஸ் ஆகிய மொழிக் குழுக்கள் அடங்கு என அவர் கூறினார். காம்பெல் போன்றவர்கள், குடாப்பகுதி மொழிகள் என்னும் கருத்துருவை மறுக்கிறார். சிலர் முஸ்கோஜிய மொழிகள், யமாசி மொழிகளுடன் தொடர்புள்ளவை எனக் கருதினர். யமாசி மொழிபற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. யமாசி பல இனங்களின் ஒரு குழுவையே குறிக்கிறது என்றும், அவர்கள் ஒரே மொழியைப் பேசியவர்கள் அல்ல என்ற கருத்து உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்கோஜிய_மொழிக்குழு&oldid=2741750" இலிருந்து மீள்விக்கப்பட்டது