முஸ்தாங் மாவட்டம்

முஸ்தாங் மாவட்டம் (Mustang District) (நேபாளி: मुस्ताङ जिल्लाகேட்க), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. முஸ்தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோம்சோம் நகரம் ஆகும்.

நேபாளத்தில் முஸ்தாங் மாவட்டத்தின் அமைவிடம்
மலைசாரலில் விளைநிலங்கள், கீழ் முஸ்தாங் மாவட்டம்
காக்பெனி கிராமம், முஸ்தாங் மாவட்டம், ஆண்டு 1999

தவளகிரி மண்டலத்தில் அமைந்த முஸ்தாங் மாவட்டத்தின் பரப்பளவு 3,573 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்தாங் மாவட்ட மக்கள் தொகை 13,452 ஆக உள்ளது.[1]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடாமான ஜோம்சோம் நகரத்தில் வானூர்தி நிலையம் உள்ளது.

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் வடக்கில் திபெத் மேட்டு நிலத்தைத் தொட்டுத்தொடா நிலையில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித தலமான முக்திநாத் கோவில் இம்மாவட்டத்தில் உள்ளது. மேலும் அன்னபூர்ணா கொடுமுடியும் இங்கு அமைந்துள்ளது.

ஆப்பிள், மார்பா எனும் மதுபானம் இம்மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உள்ளாட்சி நிர்வாகம் தொகு

 
முஸ்தாங் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தில் பதினாறு கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

இம்மாவட்டம், இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள், டிரான்ஸ் இமயமலை காலநிலை என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [2]

 
முஸ்தாங் மாவட்டத்தின் பனிபாலை வன தட்ப வெப்பம்
 
முஸ்தாங் மாவட்டத்தின் ஒரு கிராமம்
 
ஜோம்சோம் வானூர்தி நிலையம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "National Population and Housing Census 2011 (National Report)" (PDF). Central Bureau of Statistics. Archived from the original (PDF) on 2013-04-18. பார்க்கப்பட்ட நாள் November 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்தாங்_மாவட்டம்&oldid=3568301" இலிருந்து மீள்விக்கப்பட்டது