மேச்சிநகர்

மேச்சிநகர் (Mechinagar) (நேபாளி: मेचीनगर) நேபாளத்தின் தூரக்கிழக்கில் மாநில எண் 1ல் உள்ள ஜாப்பா மாவட்டத்தில் அமைந்த நகராட்சியாகும்.

மேச்சிநகர்
मेचीनगर
நகராட்சி
மேச்சிநகர் is located in நேபாளம்
மேச்சிநகர்
மேச்சிநகர்
நேபாளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°40′00″N 88°07′20″E / 26.66667°N 88.12222°E / 26.66667; 88.12222
நாடு நேபாளம்
பிராந்தியம்கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்
மாநிலம்மாநில எண் 1
மண்டலம்மேச்சி மண்டலம்
மாவட்டம்ஜாப்பா மாவட்டம்
அரசு
 • வகைமேயர்-மாமன்றக் குழு
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
அஞ்சல் சுட்டு எண்57207, 57208
தொலைபேசி குறியீடு023
இணையதளம்mechinagarmun.gov.np

மேச்சிநகர், இந்தியா - நேபாள எல்லையில் உள்ளது. தேசியத் தலைநகரம் காட்மாண்டிற்கு தென்கிழக்கே 475 கிமீ தொலைவிலும்; மாநிலத் தலைநகரம் விராட்நகருக்கு கிழக்கே 115 கிமீ தொலைவிலும் மேச்சிநகர் உள்ளது.

தோற்றம் தொகு

மேச்சிநகர் நகராட்சி மன்றம் 1999ல் நிறுவப்பட்டது. தற்போது 15 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இயங்குகிறது. 192.85 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மேச்சிநகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகைன் 1,11,797 ஆகும். இதன் மக்கள்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 586.7 வீதம் உள்ளது.[1]

புவியியல் தொகு

நேபாளத்தின் தூரக்கிழக்கில், தராய் பகுதியில் அமைந்த மேச்சிநகரில் பாயும் மேச்சி ஆறு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தையும், நேபாளத்தையும் பிரிக்கிறது.

மகேந்திரா நெடுஞ்சாலை மற்றும் மேச்சி நெடுஞ்சாலை, மேச்சிநகர் வழியாகச் செல்கிறது. மேச்சிநகர், மேச்சி மண்டலத்துடன் இணைக்கிறது. இந்நகரின் தெற்கில் உள்ள பத்திரப்பூர் வானூர்தி நிலையம், காத்மாண்டிற்கு நாள்தோறும் 6 முதல் 8 முறை, இருவழிப் பயணம் மேற்கொள்கிறது.

மக்கள் தொகு

இந்நகரத்தின் மக்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களும், சேத்திரி மக்களும் ஆவார். மார்வாரி சமுதாயத்தவர்கள் வணிகத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

தட்பவெப்பம் தொகு

மேச்சிநகரின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 40 பாகை செல்சியசாகவும்; குளிர்கால வெப்பம் 10 பாகை செல்சியசாகவும் உள்ளது. சூன் மற்றும் சூலை மாதங்கள் மழைக்காலம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. MECHINAGAR Population
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேச்சிநகர்&oldid=2513965" இலிருந்து மீள்விக்கப்பட்டது