மேட்டூர் வட்டம்

மேட்டூர் வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மேட்டூர் நகராட்சியில் உள்ளது. மேட்டூர் வட்டம் 48 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [2]

இவ்வட்டத்தில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 419,887 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 218,447 ஆண்களும், 201,440 பெண்களும் உள்ளனர். 112,155 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 56.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 70.05% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 922 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40269 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 898 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 54,392 மற்றும் 9,503 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.28%, இசுலாமியர்கள் 0.9%, கிறித்தவர்கள் 1.73%, மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-14. பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
  2. மேட்டூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேட்டூர்_வட்டம்&oldid=3568561" இலிருந்து மீள்விக்கப்பட்டது