மேற்கு நிசாமுதீன்

மேற்கு நிசாமுதீன் (Nizamuddin West) வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதி ஆகும். இது இந்தியாவின் தலைநகரான தில்லியின் தெற்குப் பகுதியில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் உள்ளது.

மேற்கு நிசாமுதீன்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாநகராட்சிதில்லி மாநகராட்சி
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சலக குறியீடு110013
மக்களவை தொகுதிதெற்கு தில்லி
சட்டமன்றத் தொகுதிதெற்கு தில்லி
மாவட்டம்தெற்கு தில்லி மாவட்டம்

வரலாறு தொகு

ஒப்பீட்டளவில் வசதி படைத்த தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் வட்டாரம் ஹசரத் நிஜாமுதீன் அவுலியா அவர்கள் பெயரால் பெயரிடப்பட்டது. ஹசரத் நிஜாமுதீன் அவுலியா 13ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சூபி ஞானி ஆவார். அவருடைய தர்கா அடக்கத்தலம் நிஜாமுதீனில் உள்ளது.

கண்ணோட்டம் தொகு

நிஜாமுதீன் வட்டாரம் நிர்வாக வசதிக்காக மேற்கு நிசாமுதீன், கிழக்கு நிசாமுதீன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு நிசாமுதீன் ஆறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மதுரா சாலையில் பிரதான நுழைவு வாயில் உள்ளது. மேற்கு நிசாமுதீன் பூங்காக்கள் நிறைந்த பசுமையான பகுதியாகும். இந்த காலனி ஆடம்பரமான காலனிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

முக்கிய இடங்கள் தொகு

 
ஹசரத் நிஜாமுதீன் தர்கா
  1. நிஜாமுதீன் தர்கா[1]
  2. ஹசரத் நிஜாமுதீன் அவுலியா கல்லறை.
  3. 1325 இல் அலாவுதீன் கில்சி மகன் கிஸ்ர்கான் கட்டிய கில்ஜி மசூதி.[1][2]
  4. இந்திய இசையமைப்பாளரும், கல்விமானும் புலவருமான அமீர் குஸ்ராவ் நினைவிடம்.[1]
  5. கான் திலங்கானி நினைவிடம்.[3]
  6. தப்லீக் ஜமாஅத் தலைமையிடமான நிஜாமுதீன் மர்கஸ் மசூதி.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Saniotis, Arthur (2008). "Enchanted Landscapes: Sensuous Awareness as Mystical Practice among Sufis in North India". The Australian Journal of Anthropology 19 (1): 17–26. doi:10.1111/j.1835-9310.2008.tb00103.x. 
  2. "Hazrat Nizamuddin Auliya Dargah (Nizamu'din)". India Infoweb. 2008. Archived from the original on 9 ஜூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2016. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. Sanatani, Rohit Priyadarshi. "The Tomb of Khan - i Jahan Tilangani: A forgotten gem". The Speaking Arch. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.
  4. Ahmed, "Islamic Fundamentalism in South Asia", 1994: p.524
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_நிசாமுதீன்&oldid=3777301" இலிருந்து மீள்விக்கப்பட்டது