மைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் புரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா,[1] ஐரோப்பிய ஒன்றியம்,[1] (பிரிட்டன் உட்பட,[2]) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான பசையாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து[3] மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் "ஜவ்வரிசி" உற்பத்திக்கு பெயர்போனவை, அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 ChinaDaily. China bans two food additives in flour.
  2. "Flour Advisory Bureau. FAQ". Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
  3. "www.maidaflour.com". Archived from the original on 2021-01-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதா&oldid=3843076" இலிருந்து மீள்விக்கப்பட்டது