மொக்கணீசுவரம் மொக்கணீசுவரர் கோயில்

மொக்கணீசுவரம் மொக்கணீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம் தொகு

அவிநாசி-அந்தியூர் சாலையில் உள்ள வைப்புத்தலமான சேவூரை அடுத்து 1 கிமீ தொலைவில் குட்டகம் என்னுமிடத்தில் பிரியும் இடப்புறச் சாலையில் 6ஆவது கிமீ தொலைவில், தண்ணீர்ப்பந்தல் பாளையம் என்னும் ஊரையடுத்து, சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது. கோயில் அமைந்துள்ள இடத்தில் ஊர் எதுவும் இல்லை. ஒரு பண்ணை வீடு மட்டுமே உள்ளது. கோயில் பெயர்ப்பலகையும் காணப்படவில்லை. அவிநாசி-புளியம்பட்டி நகரப்பேருந்து இந்த ஊர் வழியாகச் செல்கிறது. கோயிலை அடுத்து கூளேகவுண்டன்புதூர் என்னும் ஊர் உள்ளது. 1968 பிப்ரவரி 6ஆம் நாள் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக மொக்கணீசுவரர் உள்ளார். [1] சுந்தரரால் பாடப்பெற்ற இந்த வைப்புத்தலமானது முழுமையாக அழிந்துபோனது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "மொக்கணி அருளிய..." எனக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனடிப்படையில் இக்கோயில் மீண்டும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறைவி மீனாட்சி தெற்கு நோக்கிய நிலையில் தனி சன்னதியில் உள்ளார். முன் மண்டபத்தில் மாணிக்கவாசகர் காணப்படுகிறார். [2]

அமைப்பு தொகு

சிறிய கோயிலாக உள்ளது. கோலில் நவக்கிரகம், பைரவர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. வலைத்தமிழ், அருள்மிகு மொக்கனீஸ்வரர் திருக்கோயில்