மொத்த தேசிய வருமானம்

மொத்த தேசிய வருமானம் (gross national income (GNI), முன்னர் இதனை (மொத்த தேசிய உற்பத்தி (gross national product (GNP) என அழைக்கப்பட்டது. இதனை சுருக்கமாகக் கூறினால், ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், வெளிநாடுகளிலிருந்து பலவவகையில் ஈட்டப்படும் வருமானத்துடன் கூட்டி வரும் தொகையுடன், வெளிநாடுகளுக்கு பலவகைகளில் செலுத்தப்படும் பணத்தை கழித்தால் வரும் தொகையே மொத்த தேசிய வருமானம் ஆகும்.(Todaro & Smith, 2011: 44).[2]

2016 நிலவரப்படி உலக வங்கியின் வருவாய் குழுக்கள்[1]

மொத்த தேசிய வருமானத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடுவது என்பது ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவிற்கு உள்நாட்டு அல்லது சர்வதேச நடவடிக்கைகளை குறிக்கிறது என்பதைக் காட்டுகிறது. சர்வதேச புள்ளிவிவரங்களில் மொத்த தேசிய வருமானம் எனும் சொல்லால், படிப்படியாக ஜி.என்.பி எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி எனும் சொல் நீக்கப்பட்டது.[3][4] கருத்தியல் ரீதியாக இரண்டு சொற்களும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அது வித்தியாசமாக கணக்கிடப்படுகிறது.[5] ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு-செலவு திட்டத்தில், சொந்த பங்களிப்புகளின் மிகப்பெரிய பகுதியை கணக்கிடுவதற்கான அடிப்படையாக மொத்த தேசிய வருமானம் விளங்குகிறது.[6]

மொத்த தேசிய வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான ஒப்பீடு தொகு

மொத்த தேசிய வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தியின் ஒப்பீடு
2018 உலக வங்கி அறிக்கை (மில்லியன் யு எஸ் டாலரில் $)
No. Country மொத்த தேசிய வருமானம்[7] மொத்த தேசிய வருமானம்[8] மொத்த உள்நாட்டு உற்பத்தி[9]
value (a) a - GDP value (b) b - GDP
1   ஐக்கிய அமெரிக்கா 20,636,317 -267,153 20,837,347 344,239 20,544,343
2   சீனா 13,181,372 175,082 13,556,853 -44,951 13,608,151
3   சப்பான் 5,226,599 -123,267 5,155,423 156,212 4,971,323
4   செருமனி 3,905,321 146,841 4,058,030 58,783 3,947,620
5   ஐக்கிய இராச்சியம் 2,777,405 130,590 2,816,805 -60,242 2,855,296
6   பிரான்சு 2,752,034 39,806 2,840,071 37,660 2,777,535
7   இந்தியா 2,727,893 124,576 2,691,040 39,230 2,718,732
8   இத்தாலி 2,038,376 -51,486 2,106,525 -28,268 2,083,864
9   பிரேசில் 1,902,286 64,182 1,832,170 4,172 1,885,482
10   கனடா 1,665,565 54,417 1,694,054 -21,265 1,713,341

மேற்கோள்கள் தொகு

  1. "உலக வங்கியின் வருவாய் குழுக்கள்". Our World in Data. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  2. Todaro, M. P., & Smith, S. C. (2011). Economic Development 11. Addison-Wesley, Pearson, ISBN, 10, 0-13.
  3. World Bank. "GNI, Atlas method". data.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  4. World Bank. "GNI, PPP (international $)". data.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  5. "Glossary:Gross national income (GNI)". Eurostat Statistic Explained (Eurostat). http://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php/Glossary:Gross_national_income_%28GNI%29. பார்த்த நாள்: 2016-06-23. 
  6. "Monitoring GNI for own resource purposes". Eurostat Statistic Explained (Eurostat). http://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php/Monitoring_GNI_for_own_resource_purposes. பார்த்த நாள்: 2016-06-23. 
  7. "GNI, Atlas method (current US$)". World Bank.
  8. "GNI (current US$)". World Bank.
  9. "GDP (current US$)". World Bank.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொத்த_தேசிய_வருமானம்&oldid=3032749" இலிருந்து மீள்விக்கப்பட்டது