மோபியஸ் (2013 திரைப்படம்)

மோபியஸ் (Moebius) 2013ல் வெளிவந்த தென் கொரிய திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 70வது வெணிஸ் சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது.[1][2]

மோபியஸ்
இயக்கம்கிம் கி-டக்
கதைகிம் கி-டக்
நடிப்புசோ ஜியே-ஹியூன்
வெளியீடு3 செப்டம்பர் 2013 (2013-09-03)(Venice)
5 செப்டம்பர் 2013 (South Korea)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்

இத்திரைப்படத்தினை தொடக்கத்தில் தென் கொரியா தடை செய்திருந்தாலும் பிறகு கொரியாவின் தணிக்கை குழு தடையை நீக்கியது.[3][4][5][6]

இத்திரைப்படம் 2014 ஏப்ரலில் ஸ்டேனிலி திரைப்பட திருவிழாவிலும், 2014 நவம்பர் லண்டன் கொரியன் திரைப்பட திருவிழாவிலும் திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தினை வசனமே இல்லாமல் கிம் கி-டக் இயக்கியுள்ளார்.[7]

நடிகர்கள் தொகு

கதைச் சுருக்கம் தொகு

தன் தாயின் கோபத்தால் ஆண்குறியை இழக்கும் இளைஞனின் வாழ்க்கைப் பற்றியது.

கதை தொகு

(எச்சரிக்கை:முழுகதையும் இடம்பெற்றுள்ளது.)

சியோ யங்-ஜூ தன் தாய் லீ என்-வூ மற்றும் தந்தை சோ ஜியே-ஹியூவுடன் வசித்து வருகின்றான். ஒருநாள் தன் தந்தை சோ ஜியே-ஹியூ இன்னொரு பெண்ணுடன் பாலியலுறவில் ஈடுபடுவதைப் பார்த்துவிடுகின்றான் சியோ யங்-ஜூ.  கூடவே அந்தக் காட்சியை லீ என்-வூவும்  பார்த்துவிடுகின்றாள்.

அன்றைய இரவே தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் பாலியலுறவில் ஈடுபடும் காட்சியை நினைத்து சியோ யங்-ஜூ சுயமைதுனம் செய்துகொள்கிறான். இதையும் லீ என்-வூ பார்த்துவிட ஆத்திரப்படும் அவள் ஒரு கத்தியைஎடுத்து தன் கணவனின் குறியை அறுக்க முயற்சி செய்ய அவளைத் தள்ளிவிட்டு ஓடிவிடுகின்றார் அவர். கடைசியில் தன்  மகனின் குறியை அறுக்கும் லீ  என்- வூ அந்தக்  குறியைத் தின்றும்  விடுகின்றாள்.

குறியை இழந்து கதறும் மகனை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றார் சோ ஜியே-ஹியூ. அங்கே அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முடிவில் குறியில்லாமல் வீடு திரும்புகின்றான்  சியோ யங்-ஜூ.  “அந்தச்” சம்பவத்திற்குப் பிறகு வீட்டை விட்டு போய்விட தனிமையிலும், குற்றவுணர்ச்சியிலும் துன்பப்படுகின்றார்  சோ ஜியே-ஹியூ.

ஒருநாள் சியோ யங்-ஜூ பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரானது நேராகப் போகாமல் வளைந்து போகின்றது. அத்தோடு சிறுநீரானது  அவன் அணிந்திருக்கும் சப்பாத்திலும் தெறித்துவிடுகின்றது. இதைக் கவனித்துவிடும் அவனுடைய பள்ளித் தோழர்கள் அவனை வழிமறித்து அவனுடைய காற்சட்டையை கழற்றிப் பார்க்கின்றார்கள்.  சியோ யங்-ஜூக்கு தங்களைப் போன்று குறியில்லையென்பது தெரியவர அவனை கேலி செய்கின்றார்கள். அவமானத்தில் வெட்கித் தலைகுனிகின்றான் சியோ யங்-ஜூ.

இதற்கிடையில்,  இது எல்லாவற்றுக்கும் தான் செய்த துரோகம் தான் காரணமென தெரியவர அதிகமாகத் துன்பப்பட்டுப் போகின்றார் சோ ஜியே-ஹியூ. கூடவே தான் பாலியல்த் தொடர்பு வைத்திருந்த பெண்ணுடனும் தொடர்பைத் தூண்டித்து விடுகின்றார்.

இன்னொருநாள் சியோ யங்-ஜூ தன் தந்தை பாலியல்த் தொடபு வைத்திருந்த பெண்ணின் கடைக்குச் செல்கின்றான். அங்கே அவனை உறவுக்கு வருமாறு அந்தப் பெண் அழைக்க தனக்கு குறியில்லாத விஷயம் தெரியவந்தால் அவள் தன்னை அவமானப்படுத்தக்கூடுமென எண்ணி அங்கிருந்து ஓடிவிடுகின்றான்  சியோ யங்-ஜூ. அதற்கு அடுத்த காட்சியில் அவனுடைய பள்ளித்தோழர்கள் அவனைக் கண்டு அவனின் காற்சட்டையை கழற்றிப் பார்க்கின்றார்கள். அப்போது சியோ யங்-ஜூங்கை சில இளைஞர்கள் காப்பாற்றுகின்றார்கள். 

அதற்கு அடுத்த காட்சியில் அந்த இளைஞர்களுடன் சேர்ந்து சியோ யங்-ஜூ மதுவருந்துகின்றான். இது எல்லாமே அந்தப் பெண்ணின் கடையில் வைத்தே நடக்கின்றது. அப்போது அந்த இளைஞர்களிலொருவன் குடிபோதையில்  அந்தப்பெண்ணை வன்புணர்கின்றான். அடுத்ததாக சியோ யங்-ஜூகும் அந்தப் பெண்ணை வன்புணர்கின்றான்.

இந்த விஷயம் காவல்துறைக்குத் தெரியவர,  அவர்கள்  சியோ யங்-ஜூகைத் தேடி அவனின் வீட்டுக்கு வருகின்றார்கள். சோ ஜியே-ஹியூ அவனுக்கு குறியே இல்லையெனவும், குறியில்லாத ஒருவனால் எப்படி ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முடியுமென்றும் கேட்கின்றார். சோ ஜியே-ஹியூ கூறுவது உண்மைதானா என்பதையறிய சியோ யங்-ஜூங்கின் காற்சட்டையை உருவிப்பார்க்கின்றது காவற்துறை. கூட இருந்த இளைஞர்கள் அவனைக் கேலி செய்கின்றார்கள். ஆத்திரத்தில், அவமானத்தில் வெட்கித் தலைகுனியும் சியோ யங்-ஜூ தன் தந்தையை அடித்து உதைக்கின்றான்.

தன்னுடைய அறையிலிருந்து கண்ணீர் விடும் சோ  ஜியே-ஹியூ தன் மகனின் பிரச்சனைக்கு பரிகாரம் தேட எண்ணி இணையத்தில் குறியில்லாமல் இன்பம் அனுபவிப்பது எப்படியென்று தேடத் தொடங்குகின்றார். மனித உடலில் சுயமாகவே காயங்களை ஏற்படுத்துபோது எங்கள் குறியானது விறைக்கத் தொடங்கி ஷ்கலிதமடைகின்றது என அதில் எழுதப்பட்டிருப்பது கண்டு திகைப்படைகின்றார்.

பிறிதொரு சமயம், கல்லொன்றினை எடுத்து தன்னுடைய காலில் காயம் ஏற்படும்வரை தேய்க்கின்றார். காலில் உராய்வு ஏற்பட்டு இரத்தம் கசிகின்றது. கூடவே சோ ஜியே-ஹியூக்கு குறி விறைக்கத் தொடங்கி ஷ்கலிதமும் ஏற்படுகின்றது.

சிறையிலிருக்கும் மகனிடமும் இதைப்பற்றிச் சொல்ல,   சியோ யங்-ஜூ வும் சிறைச் சுவரிலிருக்கும் சிறிய கற்துண்டொன்றினை பெயர்த்தெடுத்து தன்னுடைய கையில் உராஞ்சுகிறான். குறி விறைத்து ஷ்கலிதமடைகிறது.

பின்னர்  சியோ யங்-ஜூ சிறையிலிருந்து விடுதலையாகின்றான். நேராகக் கடை வைத்திருக்கும் பெண்ணிடம் செல்கிறான். அவள் தன்னிடமிருக்கும் கத்தியொன்றினால்  சியோ யங்-ஜூவின் தோற்பட்டையில் குத்துகின்றாள். தன் மார்புகளை விலக்கிக் காட்டி அவனின் குறியை விறைக்கப் பண்ணும் அவள்  சியோ யங்-ஜூவின் தோற்பட்டையில் சொருகியிருக்கும் கத்தியைப் பிடித்து பின்னும், பின்னும் அசைக்க  சியோ யங்-ஜூக்கு ஷ்கலிதமாகி இன்பம் கிடைக்கிறது.

ஆண்குறி மாற்று சிகிச்சை பற்றி இணையத்தில் செய்திவர அன்றே மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சோ  ஜியே-ஹியூ மகனுக்கு ஆண்குறி மாற்று அறுவைசிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் கெஞ்சுகிறார். முடிவில் சியோ யங்-ஜூக்கு குறியும் கிடைத்து விடுகின்றது.

காட்சிகள் இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்க ஒருநாள் வீட்டைவிட்டுப் போன லீ  என்- வூ திரும்பி வருகிறாள். வந்தவள் நேராகப் படுக்கையறைக்குச் சென்று தூங்கி விடுகின்றாள். இரவில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் அவள், நேராக சியோ யங்-ஜூவின் படுக்கையறைக்குச் சென்று அவனருகில் படுத்துக் கொள்கிறாள். மகனின் கன்னத்தைப் பிடித்து தடவுகிறாள். சியோ யங்-ஜூக்கு குறி விறைத்துக் கொண்டு விடுகிறது. அதைப் பார்த்து அதிர்ச்சியடையும்  லீ  என்-வூ தன் கணவனின் காற்சட்டையைப் பிடித்து உருவிப் பார்க்க அவருக்கு குறியில்லாதது கண்டு மேலும் அதிர்ச்சியடைகின்றாள்.

பிறிதொரு நாள், தன் சொந்த மகனுடனேயே  லீ  என்- வூ பாலியலுறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு கொதித்துப் போகும்  சோ  ஜியே-ஹியூ அவளைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கின்றார். தாயின் மரணத்திற்கும், தந்தையின் மரணத்திற்கும் தன்னுடைய குறியே காரணமென்கிற குற்றவுணர்வு சியோ யங்-ஜூக்கு ஏற்பட தன் குறியை தானே சுட்டுக் கொள்கிறான்.

ஆதாரங்கள் தொகு

  1. "Out of Competition". labiennale. Archived from the original on 2013-09-08. பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
  2. "Venice film festival 2013: the full line-up". The Guardian (London). 25 July 2013. http://www.guardian.co.uk/film/2013/jul/25/venice-film-festival-2013-line-up/. பார்த்த நாள்: 2013-07-27. 
  3. "Korean Censors Lower Rating on Controversial Movie". Scene Asia. http://blogs.wsj.com/scene/2013/08/07/korean-censors-lower-rating-on-controversial-movie/. பார்த்த நாள்: 2013-08-15. 
  4. "Not Coming To Screens Any Time Soon: Kim Ki-duk's Moebius Effectively Banned In Korea". Twitch. Archived from the original on 2013-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
  5. "Moebius cleared for release with cuts". Screen Daily. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
  6. "Kim Ki-duk's 'Moebius' Due Out in Early September". Chosun. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
  7. தி இந்து - இதோ இன்னொரு கிம் கி டுக் படம்! December 19, 2014

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோபியஸ்_(2013_திரைப்படம்)&oldid=3569137" இலிருந்து மீள்விக்கப்பட்டது