மோல் பின்னம்

இரசாயனவியலில், மோல் பின்னம் என்பது கலவையொன்றில் உள்ள குறிப்பிட்ட கூறுக்கும் கலவையிலுள்ள எல்லாக் கூறுகளுக்கும் இடையிலான விகிதமாகும்.[1] என்பது குறிப்பிட்ட கூறின் அளவாகவும், என்பது கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் அளவாகவும் இருப்பின், மோல்பின்னம் ஆனது:

ஒரு கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் மோல்பின்னங்களின் கூட்டுத்தொகை 1க்குச் சமனாகும்:

மோல்பின்னம், அளவுப் பின்னம் எனவும் அழைக்கப்படும்.[1] இது எண் பின்னத்துக்குச் சமனாகும். எண் பின்னம் எனப்படுவது, குறிப்பிட்ட கூறொன்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை க்கும், கலவையிலுள்ள எல்லா மூலக்கூறுகளின் எண்ணிக்கை க்கும் இடையிலான விகிதமாகும். மோல் பின்னம் கிரேக்கச் சிற்றெழுத்தான (சை)யினால் குறிக்கப்படும்.[2][3] வாயுக்கலவைகளுக்கு யை IUPAC பரிந்துரைக்கிறது.[1]

இயல்புகள் தொகு

அவத்தை வரைபடங்களின் உருவாக்கலில் மோல் பின்னம் பரந்தளவில் பயன்படுத்தப்படுகிறது. இது பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது. அவையாவன:

  • இது வெப்பநிலையில் தங்கியிருப்பதில்லை (மூலர் செறிவைப்போல்). மேலும் குறிப்பிட்ட அவத்தைகளின் அடர்த்தி பற்றிய அறிவும் தேவைப்படாது.
  • மோல் பின்னம் அறியப்பட்ட கலவையொன்று, கூறுகளின் உருய திணிவுகளை நிறுப்பதன் மூலம் தயாரிக்கப்படலாம்.
  • இலட்சிய வாயுக்களின் கலவையொன்றில், மோல் பின்னத்தை அக்கூறின் பகுதியமுக்கத்துக்கும் கலவையின் மொத்த அமுக்கத்துக்கும் இடையிலான விகிதமாக குறிப்பிடலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "amount fraction". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Zumdahl, Steven S. (2008). Chemistry (8th ed. ). Cengage Learning. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-547-12532-1. 
  3. Rickard, James N. Spencer, George M. Bodner, Lyman H. (2010). Chemistry : structure and dynamics. (5th ed. ). Hoboken, N.J.: Wiley. பக். 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-58711-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்_பின்னம்&oldid=2745576" இலிருந்து மீள்விக்கப்பட்டது