மோஸ்லி விதி

மோஸ்லியின் விதி (Moseley's law) என்பது அணுக்களில் இருந்து வெளிவிடப்படும் எக்சு-கதிர்களின் பண்புகளைக் குறித்த ஒரு அனுபவ விதியாகும். இவ்விதி 1913ஆம் ஆண்டில் ஹென்றி மோஸ்லி என்னும் ஆங்கில இயற்பியலாளரால் தெரிந்து விளக்கப்பட்டது. எக்சு-கதிர்கள், வெற்றிடக் குழாயிலுள்ள இலக்கினை, வேகமாகச் செல்லும் இலத்திரன்கள் மோதுவதால் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில் தொடர்நிறமாலையுடன் இலக்காகப் பயன்படும் தனிமத்தின் பண்புக் கோடுகளும் (Characteristic lines) தோற்றுவிக்கப்படுகின்றன. மோஸ்லி பல்வேறு தனிமங்களை இலக்காகப் பயன்படுத்தி, அவை ஒவ்வொன்றின் பண்புக் கோடுகளையும் ஆய்ந்தார். பிராக்கின் எக்சு கதிர் நிறமாலைமானியினைப் (Bragg's x-ray spectrometer) பயன்படுத்தி அவர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகவும் விந்தையான முடிவுகளைக் காட்டின. முக்கியமாக பண்பு நிறமாலையில் KLM கோடுகள் உள்ளதைக் கண்டார்.

தனிமத் தொடர் ஒன்றிற்கான Kα, Kβ எக்சு-கதிர்களின் உமிழ் வரிகளைக் காட்டும் ஒளிப்படப் பதிவு

அவர் கண்ட முக்கிய முடிவு (மோஸ்லி விதி):

K பண்புக் கோடுகளின் அதிர்வெண்கள், அணு எண் கூடும் போது அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அணுஎண் கூடும் போது K எலக்ட்ரான்களின் பிணைப்பாற்றலும் கூடுவதாகும்.

Kα வரியினை எடுத்துக்கொள்வோம். அதிக அணுவெண்ணுள்ளத் தனிமத்திற்கு Kα கதிரின் அதிர்வெண்ணும் அதிகமாக இருக்கும்.

அதாவது:

இதில் f, கதிரின் அதிர்வெண்; Z என்பது அணு எண்; a யும் b யும் மாறிலிகள். a, b என்பன K தொடருக்கு மாறுவதில்லை. ஆனால் L தொடருக்கு மாறும். b என்பது கரு மறைப்பு மாறிலி (Neuclear screening constant) எனப்படும். இதன் மதிப்பு L தொடருக்கு அதிகம். இதுவே மோஸ்லி விதியாகும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோஸ்லி_விதி&oldid=3351582" இலிருந்து மீள்விக்கப்பட்டது