மௌனி

தமிழ் எழுத்தாளர்

மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.

மெளனி
பிறப்புசூலை 27, 1907
மாயவரம் அருகில்
இறப்புசூலை 6, 1985(1985-07-06) (அகவை 77)

கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

1907 சூலை 27ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6ஆம் தேதி காலமானார்.

மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்

மெளனி படைப்புகள் முழுத் தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம் (2010)

படைப்புகள் தொகு

சிறுகதைகள் இதழ் வருடம்
1.பிரபஞ்சகானம் மணிக்கொடி 1936
2.ஏன்? மணிக்கொடி 1936
3.காதல் சாலை மணிக்கொடி 1936
4.குடும்பத்தேர் மணிக்கொடி 1936
5.கொஞ்ச தூரம் மணிக்கொடி 1936
6.சுந்தரி மணிக்கொடி 1936
7.அழியாச்சுடர் மணிக்கொடி 1937
8.மாறுதல் மணிக்கொடி 1937
9.நினைவுச் சுழல் மணிக்கொடி 1937
10.மாபெருங் காவியம் தினமணி மலர் 1937
11.மிஸ்டேக் மணிக்கொடி 1937
12.சிகிச்சை ஹனுமான் மலர் 1937
13.எங்கிருந்தோ வந்தான் தினமணி வருஷ மலர் 1937
14.இந்நேரம்,இந்நேரம் மணிக்கொடி 1937
15.மாறாட்டம் மணிக்கொடி 1938
16.நினைவுச் சுவடு தேனி 1948
17.மனக்கோலம் தேனி 1948
18.சாவில் பிறந்த சிருஷ்டி சிவாஜி 1954
19.குடை நிழல் சிவாஜி மலர் 1959
20.பிரக்ஞை வெளியில் சரஸ்வதி 1960
21.மனக்கோட்டை எழுத்து 1963
22.உறவு,பந்தம்,பாசம் குருசேத்திரம் 1968
23.அத்துவான வெளி குருசேத்திரம் 1968
24.தவறு கசடதபற 1971
கட்டுரைகள் இதழ் வருடம்
1.எனக்கு பெயர் வைத்தவர் பி.எஸ்.ராமையா மணிவிழா மலர் 1965
2.செம்மங்குடி தன் ஊர் தேடல் ஆனந்த விகடன் 1968

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌனி&oldid=3154879" இலிருந்து மீள்விக்கப்பட்டது