யட்டிநுவரை

யட்டிநுவரை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும்.கடுகண்ணாவை பிலிமத்தலாவை, பேராதனை என்பன இப்பிரிவில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது.

யட்டிநுவரை

யட்டிநுவரை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°15′57″N 80°33′13″E / 7.265815°N 80.553745°E / 7.265815; 80.553745
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
70.0  ச.கி.மீ

 - 303 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - மக்களடர்த்தி
 - நகரம் (2001)
96946

 - 1385/ச.கி.மீ
 - 1215

புவியியலும் காலநிலையும் தொகு

யட்டிநுவரை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 303 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள் தொகு

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 96946 86289 1201 2084 7222 70 80
நகரம் 1215 916 40 2 251 4 2
கிராமம் 93848 84566 1161 1048 6933 66 63
தோட்டப்புறம் 1883 807 0 1034 38 0 4

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 96946 85269 2523 7309 1146 689 10
நகரம் 1215 872 46 251 43 3 0
கிராமம் 93848 83581 1572 7016 1004 665 10
தோட்டப்புறம் 1883 816 905 42 99 21 0

கைத்தொழில் தொகு

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

குறிப்புகள் தொகு


உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யட்டிநுவரை&oldid=2608995" இலிருந்து மீள்விக்கப்பட்டது