யமுனோத்திரி கோயில்

யமுனோத்திரி கோயில் இந்திய இமயமலையின் கார்வால் மலைத்தொடர்ச்சியில், உத்தரகாண்ட் மாநிலத்தின், கார்வால் கோட்டத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் [1] 3291 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[2]இக்கோயில் யமுனை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[3] அரித்வாரிலிருந்து யமுனோத்திரிக்கு செல்ல ஒரு முழுப் பகற்பொழுது நேரம் பிடிக்கும். யமுனோத்திரியின் அடிவாரமான அனுமான் சட்டி எனும் இடத்திலிருந்து 13 கிமீ தூரம் வரை நடந்தும், பல்லக்குகள் மற்றும் குதிரைகள் மீது பயணித்தும் யமுனோத்திரி கோயிலை அடையலாம்.

யமுனோத்திரி கோயில்
யமுனோத்திரி கோயில் மற்றும் ஆசிரமங்கள்
யமுனோத்திரி கோயில் is located in உத்தராகண்டம்
யமுனோத்திரி கோயில்
யமுனோத்திரி கோயில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனோத்திரி
ஆள்கூறுகள்:31°1′0.12″N 78°27′0″E / 31.0167000°N 78.45000°E / 31.0167000; 78.45000
பெயர்
பெயர்:யமுனோத்திரி கோயில்
தேவநாகரி:यमुनोत्री मंदिर
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரகாண்ட்
மாவட்டம்:உத்தரகாசி மாவட்டம்
கோயில் தகவல்கள்
மூலவர்:அன்னை யமுனா
வரலாறு
கட்டப்பட்ட நாள்:19ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:ஜெய்ப்பூர் மகாராணி, குலாரியா

வரலாறு தொகு

யமுனை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் 18ஆம் நூற்றாண்டில் அமர்சிங் தாபா எனும் மன்னரால் கட்டப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் ஜெய்ப்பூர் ராணி குலாரியா, இக்கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்.[4] இக்கோயில் புதுப்பிக்கப்பட்ட பின்பும் கடும் பனிப் பொழிவாலும், மழை வெள்ளத்தாலும் இருமுறை அழிந்தது.[3][5] சார்-தாம் எனும் நான்கு புனித கோயில்களில் யமுனோத்திரி கோயிலும் ஒன்றாகும்.[6]

கோயிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் தொகு

ஆண்டுதோறும் சித்திரை மாதம் அட்சய திருதியை அன்று பக்தர்களின் வழிபாட்டிற்கு யமுனோத்திரி கோயில் திறக்கப்படுகிறது.[7] பனிக்காலம் தொடங்கும், தீபாவளி முடிந்த இரண்டாம் நாள் கோயில் நடைசாத்தப்படுகிறது.[8] யமுனோத்திரி கோயில் அருகே கௌரி குண்டம் மற்றும் சூரிய குண்டம் எனும் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் இயற்கையாக அமைந்துள்ளது. இதில் குளித்தால் உடல் வலி நீங்கும் எனக் கூறப்படுகிறது.[9] இந்த வெந்நீர் ஊற்றுகளில் அரிசி, கிழங்கு முதலியன சமைப்பதற்கு ஏற்ற அளவில் நீரின் சூடு உள்ளது.[10] இக்கோயில் அருகே பயணிகள் தங்குவதற்கு விடுதிகளும் ஆசிரமங்களும் அமைந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் “சார் தாம்” எனும் நான்கு இடங்களில் அமைந்த வேறு கோயில்களான யமுனோத்திரி கோயில், பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், மற்றும் கங்கோத்திரி கோயில்களை வலம் வந்து தரிசிப்பதையே இந்தியில் சார்-தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

நான்கு சிறு கோயில்கள்
   
கேதாரிநாத் பத்ரிநாத்
   
கங்கோத்ரி யமுனோத்திரி

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://uttarkashi.nic.in/
  2. Roma Bradnock, Robert Bradnock (2001). Indian Himalaya handbook: the travel guide. Footprint Travel Guides. பக். 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1900949792. 
  3. 3.0 3.1 Kapoor, Subodh (2002). The Indian encyclopaedia: biographical, historical, religious, administrative, ethnological, commercial and scientific. (Volume 5). Genesis Publishing Pvt Ltd. பக். 1397. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8177552570. 
  4. "The height of beauty". பிசினஸ் லைன். 6 August 2001 இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120701233925/http://www.hindu.com/businessline/2001/08/06/stories/100672a5.htm. பார்த்த நாள்: 2 April 2012. 
  5. Nair, Shantha N. (2007). The Holy Himalayas. Pustak Mahal. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8122309674. 
  6. Bandopadhyay, Manohar (2010). Tourist destinations in India. Pinnacle Technology. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9380944004. 
  7. "Garhwal's Himalayan yatra". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 June 2011. http://timesofindia.indiatimes.com/life-style/spirituality/faith-and-ritual/Garhwals-Himalayan-yatra/articleshow/8529373.cms. பார்த்த நாள்: 2 April 2012. 
  8. "Kedarnath, Yamunotri shrines closed for winter". தி இந்து. 30 October 2008 இம் மூலத்தில் இருந்து 27 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100527004051/http://www.hindu.com/thehindu/holnus/002200810301924.htm. பார்த்த நாள்: 2 April 2012. 
  9. http://uttarkashi.nic.in/aboutDistt/Temple.htm Yamunotri Temple] உத்தரகாசி மாவட்டம் website.
  10. Pushpendra K. Agarwal, Vijay P. Singh, Sharad Kumar Jain (2007). Hydrology and water resources of India. Springer. பக். 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1402051794. https://archive.org/details/hydrologywaterre0000jain. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனோத்திரி_கோயில்&oldid=3583188" இலிருந்து மீள்விக்கப்பட்டது