யுசி உலாவி (UC Browser) என்பது ஒரு தொலைபேசிக்கான மற்றும் கணினிக்கான உலாவி ஆகும். சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமத்தினரால் இது நிர்வகிக்கப்படுகிறது. தற்போது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ், விண்டோஸ், சிம்பியன், பிளாக்பெர்ரி போன்ற இயங்கு தளங்களில் இது செயல்படுகின்றது.[1][2][3][4][5]

யுசி உலாவி
மேம்பாட்டாளர்அலிபாபா குழுமம்
இயக்க அமைப்புஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன், விண்டோஸ் ஆர்டி‌, S60, ஜாவா, விண்டோஸ் சிஇ, மைக்ரோசாப்ட் விண்டோசு, மெடியாடெக், டைசன், படா
பொறிபிளிங்க், V8
கிடைக்கக்கூடிய மொழிகள்சீனம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் பல
வகைதொலைபேசி உலாவி
உரிமம்இறுதி பயனர் உரிம ஒப்பந்தம் (இணைப்பு) மற்றும் தனியுடைமை மென்பொருள் (link) மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்(link)
வலைத்தளம்www.ucweb.com
சீர்தரம்HTML5, விழுத்தொடர் பாணித் தாள்கள்
யு சி வெப் இணைய உலவி நிறுவன சின்னம்

வசதிகள் தொகு

உள் நினைவக திறன் தொகு

இந்த உலாவிக்கான ஒரு கணக்கினை துவங்குவதன் மூலம் இதன் உள் நினைவகத்கினை நாம் பயன்படுத்தலாம்.[6]

தரவுச் சுருக்கம்: (DATA COMPRESSION) தொகு

பெரும்பாலான அனைத்து உலாவிகளை விடவும் தரவுகளை சுருக்கம் செய்வதில் இவை சிறந்து விளங்குகிறது.

வேகமான உலாவுதல் தொகு

மொத்தமுள்ள 500 மில்லியன் பயனர்களில் 300 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.[7]

பதிவுகள் தறவிறக்கம் தொகு

நமக்கு விருப்பமான கோப்புகளில் நமக்கு தேவையானவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் நாம் பல்வேறு தரவுகளை நம்மால் பதிவிறக்கம் செய்ய இயலும். ஒரு கோப்பினை இடைநிறுத்தம்(PAUSE)செய்து பிறகு தொடர (RESUME) முடியும்.

பயன்படும் தளங்கள் தொகு

ஆண்ட்ராய்டு தொகு

இப்போதைய நிலையில் சுமார் 500 மில்லியன் பயனாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துகின்றனர் அதில் 300 மில்லியன் மக்கள் யூ சி உலாவியினை பயன்படுத்துகிறனர்.[8] இதில் 2 வகைகள் உள்ளன அவை,

  1. யூசி உலாவி ஆண்ட்ராய்டு
  2. யூசி உலாவி மினி

ஐ.ஓ.எஸ் தொகு

ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கான பதிப்பினை 2010 – ஆம் வருடம் வெளியிட்டது.</ref> and UC Browser+ HD for iPad.[9] இதில் 2 வகைகள் உள்ளன அவை,

  1. யூசி உலாவி ஐ.ஓ.எஸ்
  2. யூசி உலாவி ஹெச்.டி(HD) (IPAD)
விண்டோஸ் தொகு

2012ல் இதற்கான பதிப்பு வெளியிடப்பட்டது.[10]

தற்போதைய பதிப்பின் வசதிகள் தொகு

தற்போதைய பதிப்பு 11.3.0 (ஆண்ட்ராய்டு)

வரலாறு & அடைப்புக்குறி தொகு

நாம் உலாவியில் பார்த்த பக்கங்களின் வரலாற்றையும், நாம் சேமித்து வைத்த பக்கங்களையும் இதில் காண இயலும்.

இசை: தொகு

நமக்குத் தேவையான பாடல்களை இதில் இருந்து பெற இயலும். மேலும் நம்முடைய உலாபேசியில் உள்ள பாடல்களையும் நம்மால் இங்கு கேட்க இயலும்.

பதிவிறக்கம்: தொகு

ஒரே சமயத்தில் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்ய இயலும்.இதனை தற்சமயம் நிறுத்தி பின் மீன்டும் பயன்படுத்தலாம்.[11]. மேம்படுத்தப்பட்ட பதிப்புகளில் சில குறைகள் சரி செய்யப்பட்டுள்ளன.[12]

வாசித்தல் தொகு

இரவு நேரங்களில் வாசிப்பதற்கு ஏதுவாக இரவு முறை(NIGHT MODE) உள்ளது. இதனால் கண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவு குறைகின்றது.

மறைநிலை உலாவி: (Incognito Browsing) தொகு

தற்போதைய சூழ்நிலையில் தனியுரிமை பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று, எனவே நாம் பார்க்ககூடிய பக்கங்களை வேறு யாரும் பார்க்கக் கூடாது எனும் வேளையில் இதனை நாம் பயன்படுத்தலாம்.

பகிர்தல்: நாம் பார்க்கக்கூடிய பக்கங்களையோ அல்லது தரவுகளையோ அதனை உலாவியில் இருந்தவாறே நம்மால் எளிதில் பகிர இயலும்.

புத்திசாலி மின்விசை சேர்வி: (Smart Charging) சற்று அதிக வேகத்தில மின்விசை சேர்க்க இயலும்.

செய்திகள்: அறிவிப்பின் மூலமாக செய்தியினை நம்மால் அரிய இயலும். மேலும் பல மொழிகளில் நம்மால் செய்திகளை படிக்க இயலும்.

விளம்பரத் தடுப்பான்:(Ad block)

இந்தியாவில் தடை தொகு

இந்தியாவின், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவை என்று கூறி சூன் 29, 2020 அன்று இந்திய அரசு தடை செய்த 59 சீன செயலிகளில், யுசி உலாவியும் ஒன்று என்பதால், இந்த செயலியை இந்தியாவில் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.[13][14]

இதனையும் காண்க தொகு

கூகிள் குரோம்

சான்றுகள் தொகு

  1. "iTunes Store". apple.com.
  2. "UC BrowserHD – Windows Apps on Microsoft Store". windowsphone.com. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
  3. UCWeb:. "UC Browser (Symbian S60V5)". CNET. CBS Interactive.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  4. "UC Browser English - BlackBerry World". blackberry.com. Archived from the original on 2013-07-27. பார்க்கப்பட்ட நாள் 2017-05-22.
  5. "UC Browser Enters App Store". uc.cn.
  6. "UC Web launches updated version of UC Browser for Android, Java and iPad | NDTV Gadgets". Gadgets.ndtv.com. 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  7. Jon Russell (21 March 2014). "Chinese Browser-Maker UCWeb Cross 500 Million Users". The Next Web.
  8. "UCBrowser surpasses Opera Mini with 33 percent more downloads – CELLPHONEBEAT". Cellphonebeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  9. "UC Browser+ for iPad on the App Store on iTunes". itunes.apple.com. 2014-02-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  10. "Best Free Download UC Browser for pc - UC Browser for Web".
  11. Yin, Sara. "UC Browser 8.0.5 (for Android) Review & Rating". PCMag.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  12. "UC Browser Releases Version 9.3 For Android Platform". Efytimes.com. 2013-09-24. Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  13. "டிக்டாக் மற்றும் யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை". Archived from the original on 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03. தினகரன் (சூன் 29, 2020)
  14. "இந்தியாவில் டிக் டாக், ஷேர்இட், யுசி பிரவுசர் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை". இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் (சூன் 30, 2020)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுசி_உலாவி&oldid=3718612" இலிருந்து மீள்விக்கப்பட்டது