யோகினி கோயில், ஒடிசா

64 யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் (Chausathi Jogini Mandir - 64 Joginis Temple)(ஒடியா: ଚଉଷଠି ଯୋଗିନୀ ମନ୍ଦିର, ହୀରାପୁର) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்த பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும்.[1] இக்கோயில் காளிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

சௌசதி யோகினி கோயில்
சௌசதி யோகினி கோயில், ஹிராப்பூர் கிராமம், ஒடிசா
யோகினி கோயில், ஒடிசா is located in ஒடிசா
யோகினி கோயில், ஒடிசா
ஒடிசாவில் அமைவிடம்
பெயர்
வேறு பெயர்(கள்):யோகினி கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:கோர்த்தா
அமைவு:ஹிராப்பூர்
ஏற்றம்:17 m (56 அடி)
ஆள்கூறுகள்:20°13′35.454″N 85°52′32.141″E / 20.22651500°N 85.87559472°E / 20.22651500; 85.87559472
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்கக் கட்டிடக்கலை
மகாமாயா

இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள், 64 நோய்களுக்கு காரணமாக 64 யோகினி தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால், இக்கோயிலை 64 யோகினி கோயில் என்றும் அழைப்பர். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை நிர்வகித்து, பராமரிக்கிறது.

அமைவிடம் தொகு

இக்கோயில் ஒடிசா மாநிலத் தலைநகரமான புவனேசுவரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[2]

வரலாறு தொகு

யோகினி கோயில், பொ.ஊ. 9ம் நூற்றாண்டில் கலிங்க இராணி ஹிராவதியால் கட்டப்பட்டது.[3]

கோயில் அமைப்பு தொகு

யோகினி கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. யோனி அமைப்பில், வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான காளி தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் உள்ள சிலை உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ஏகபாத மூர்த்தி, பார்வதி, பிள்ளையார், ரதி, சாமுண்டி, பைரவர், கிருஷ்ணர் சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது.[3] இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது.[4] முக்கியமாக சாக்த சமய தாந்திரீகர்கள் 64 யோகினி கோயிலில் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர்.[5]

பிற கோயில்கள் தொகு

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதசம் போன்ற மாநிலங்களில் யோகினி கோயில்கள் காணப்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் ராணிப்பூர் மற்றும கஜுராஹோ, கொனார்க், ஜபல்பூர் அருகில் இருக்கும் மிடௌலி, லலித்பூர் அருகில் (மத்தியப்பிரதேசம்), துதாஹி, வாரணாசி போன்ற ஊர்களிலும் மோகினி வழிபாடு சிறந்திருந்தது. ஜபல்பூர் அருகில் உள்ள பேடேகாட் என்ற இடத்தில் உள்ள யோகினி கோயில் மிகவும் பெரியதாகும். யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.[4]

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


யோகினி கோயில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகினி_கோயில்,_ஒடிசா&oldid=3745656" இலிருந்து மீள்விக்கப்பட்டது