ரகிபக் கான்

யுவான் வம்சத்தின் பேரரசர்

‘’’யுவானின் தியான்சுன் பேரரசர்’’’ (சீனம்: 元天順帝), என்று அழைக்கப்படும் ரகிபக் (அரிகபக்), யெசுன் தெமுரின் மகனாகப் பிறந்தார், இவர் 1328 ஆம் ஆண்டில் சங்டுவில் யுவான் வம்சத்தின் அரியணையில் அமர்ந்து சில காலம் ஆட்சி புரிந்தார். இவரது தந்தை யெசுன் தெமுர் கானுக்கு (அல்லது பேரரசர் டைடிங்) அடுத்தபடியாக யுவான் வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளராக இருக்க வேண்டியவர், இவரது போட்டியாளரால் ஆட்சிக்கவிழ்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 11வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது.[1]

ரகிபக்
யுவானின் பேரரசர் தியான்சுன்
மங்கோலியப் பேரரசின் 11வது ககான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)
யுவான் வம்சத்தின் 7வது பேரரசர்
சீனாவின் பேரரசர்
யுவான் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்அக்டோபர் 1328 – 14 நவம்பர் 1328
முடிசூட்டுதல்அக்டோபர், 1328
முன்னையவர்யெசுன் தெமுர் கான்
பின்னையவர்ஜயாடு கான் துக் தெமுர்
பிறப்பு1320
இறப்பு14 நவம்பர் 1328
(அகவை சுமாராக 7–8)
பெயர்கள்
ரகிபக்
மொங்கோலியம்: ᠷᠠᠵᠠᠪᠠᠭ
சீனம்: 阿剌吉八
சகாப்த காலங்கள்
தியான்சுன் (天順) 1328
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் டி சியாவோ (德孝皇帝)
மரபுபோர்ஜிஜின்
அரசமரபுயுவான்
தந்தையெசுன் தெமுர்
தாய்பபுகன்

வாழ்க்கை தொகு

ரகிபக் யெசுன் தெமுரின் மூத்த மகன் ஆவார். இவரது தாயார் பபுகன் கதுன், கொங்கிராட் வம்சத்திலிருந்து வந்தவர். பபுகன் கதுன் ஏகாதிபத்திய குடும்பத்தில் திருமணம் மூலம் அதிகாரத்தைப் பெற்றார். இவர் 1324 ஆம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இளவரசராக ஆனார். 1328 ஆம் ஆண்டு ஆகஸ்டில், சங்டு நகரில் யெசுன் தெமுர் திடீரென இறந்தபோது தவ்லத் ஷா என்கிற சக்திவாய்ந்த முஸ்லீம் அதிகாரியால் அடுத்த மாதத்திலேயே ரகிபக் பதவிபெற்றார்.

இருப்பினும், யெசுன் தெமுரின் திடீர் மரணம் முக்கிய எதிரிகளின் கிளர்ச்சியைத் தூண்டியது, அவர்கள் தவ்லத் ஷா உட்பட யெசுன் தெமுரின் உதவியாளர்கள் பலர் பதவியில் ஏகபோக உரிமை கொண்டாடுவதைக் கண்டு அதிருப்தி அடைந்திருந்தனர். இதில் தவ்லத் ஷா மங்கோலியாவில் ஜினோங் ஆகப் பதவி வகித்தவர் ஆவார். எட்டாவது மாதத்தில், டடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மங்கோலியாராக்கப்பட்ட கிப்சக் தளபதி எல் தெமுர், ஒரு ஆட்சி கவிழ்ப்பை தொடங்கி, கயிசனின் மகனுக்கு பேரரசராகப் பதவி கொடுக்க வலியுறுத்தினார். ரகிபக் அரியணை ஏறிய அதே மாதத்தில் துக் தெமுர் டடுவிற்கு வரவேற்கப்பட்டார்.[2]

இரண்டு தலைநகரங்களின் போர் என்றழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் விரைவில் வெடித்தது. ரகிபக்கின் இராணுவம் பல இடங்களில் சீனப் பெரும் சுவரை உடைத்து டடு மீது முன்னேறியது; ஆனால் எல் தெமுரின் படைகளால் கடுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ரகிபக்கின் இராணுவத்தின் பெரும்பகுதி சீனப் பெரும் சுவர் பகுதியில் போரிட்ட நேரத்தில், அடுத்த நாளே சங்டு மன்றம் சரணடைவதற்கு நிர்பந்திக்கப்பட்டது.[3] தவ்லத் ஷாவும் மற்றும் முன்னணி விசுவாசிகளும் கைது செய்யப்பட்டனர், சரணடைந்த பின்னர் டடுவிலிருந்த படையால் கொல்லப்பட்டனர்; ரகிபக் பின்னர் மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் கொலை செய்யப்பட்டது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.[4]

இவருடைய பெயரில் குறிப்பு தொகு

வரலாற்று ஆதாரங்களின் பற்றாக்குறை மற்றும் அவற்றின் பன்மொழித்தன்மையின் காரணமாக, ரகிபக்கின் பெயரில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. திபெத்திய '’ரெட் அனல்ஸ்’’ (ஹு லான் டெப் தேர்) அவரை “ர க்யி பக்” என்று அழைக்கிறது. பிற்கால மங்கோலிய வரலாற்றுக்கூறுகளான எர்டெனி-யின் டோப்சி மற்றும் ‘’அல்டான் டோப்சி’’ போன்றவை இவரை ரட்ஜிபய் அல்லது ரஜிபய் என உச்சரிக்கின்றன. ‘’யுவான் வரலாறு’’ இவரை அ-சு-ஜி-பா (阿速吉八) எனக் குறிக்கிறது, ஆனால் இது அ-ல-ஜி-பா (阿剌吉八) என்பதன் வெளிப்படையான எழுத்துக்கூட்டுப் பிழையாக இருக்கலாம். மங்கோலிய மொழியில் ஆரம்பத்தில் உள்ள "அ", "ர்" உடன் தொடங்கும் வார்த்தையைத் தடுக்கிறது. இது ஒரு நவீன மங்கோலிய ஓவியர் டிஎஸ்.மண்டிர் தன்னுடைய பெயரை "அசிட்கேபே" (Ашидхэв)[1] பரணிடப்பட்டது 2005-03-26 at the வந்தவழி இயந்திரம் என்று விளக்குவது போல் உள்ளது. சீனாவில் இவர் இவரது சகாப்த பெயரான தியான்சுன் பேரரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Их хаадын хураангуй-http://library.thinkquest.org/04apr/01341/monkingstext.htm
  2. The Empire of the Steppes, by Rene Grousset, Naomi Walford, p.321
  3. Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907–1368, p.544
  4. Frederick W. Mote- Imperial China 900–1800, p.471
ரகிபக் கான்
பிறப்பு: 1320?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
யெசுன் தெமுர் கான், யுவானின் டைடிங் பேரரசர்
மங்கோலியப் பேரரசின் பெரிய கான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே]])

1328
பின்னர்
ஜயாடு கான், பேரரசர் வென்சோங்
யுவான் வம்ச பேரரசர்களின் பட்டியல்
1328
சீனாவின் பேரரசர்
1328
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகிபக்_கான்&oldid=3783321" இலிருந்து மீள்விக்கப்பட்டது