ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம்

கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயம்

ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம் (Ranganathittu Bird Sanctuary) (கர்நாடகாவின் பக்சி காட்சி என்றும் அழைக்கப்படுகிறது) [1] என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இது இம்மாநிலத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும். [2] 40 ஏக்கர் (16 ஹெக்டேர்) பரப்பளவு கொண்ட இச்சரணாலயமானது காவிரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது.

ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
சரணாலயத்தில் மஞ்சள் மூக்கு நாரை
Map showing the location of ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம்
Map showing the location of ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம்
Location in Map of Karnataka
அமைவிடம்மண்டியா, கருநாடகம், இந்தியா
ஆள்கூறுகள்12°24′N 76°39′E / 12.400°N 76.650°E / 12.400; 76.650
பரப்பளவு40 ஏக்கர்கள் (16 ha)
நிறுவப்பட்டது1940
வருகையாளர்கள்304,000 (in 2016–17)
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு

அமைவிடம் தொகு

இந்த பறவைகள் காப்பகம், வரலாற்று நகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் மைசூருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் (9.9 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இது 2016–17 ஆம் ஆண்டில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது. இது இந்தியாவின் முக்கியமான பறவைகள் சரணாலயமாக உள்ளது.

பூங்காவின் வரலாறு தொகு

1645 மற்றும் 1648 க்குமிடையில் அப்போதைய மைசூர் மன்னர் காந்தீரவ நரசிம்மராச உடையார் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது இத்தீவுகள் உண்டானது.

பறவையியலாளர் சலீம் அலி, இத்தீவுகள் பல வகையான பறவைகளுக்கு ஒரு முக்கியமான கூடு கட்டும் இடம் என்பதை கண்டறிந்து, மைசூர் மன்னரை 1940 ஆம் ஆண்டில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க தூண்டினார்.[3] இந்த சரணாலயம் தற்போது கர்நாடக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது, மேலும் சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, இதில் பாதுகாக்கப்பட்ட பகுதியை விரிவுபடுத்த அருகிலுள்ள தனியார் நிலங்களை வாங்குவதும் அடங்கும். 2014 ஆம் ஆண்டில், சரணாலயத்தைச் சுற்றியுள்ள சுமார் 28 சதுர கி.மீ பரப்பளவு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதாவது அரசாங்கத்தின் அனுமதியின்றி சில வணிக நடவடிக்கைகள் நடைபெற முடியாது..[4]

தாவரங்கள் தொகு

நதிநீர் நாணல் படுக்கைகள் தீவுகளின் கரையை உள்ளடக்கியுள்ளது. அதே நேரத்தில் தீவுகள் அகன்ற காடுகளால் மூடப்பட்டுள்ளன. வெண் மருது, மூங்கில் போன்றவை ஆதிக்கம் செலுத்தும் இனங்களாகும். தைல மரங்களும் அகாசியா மரங்களும் இங்கு நடப்பட்டுள்ளன, அவை பூர்வீக இனங்களை நீண்டகாலமாக அழிக்க வழிவகுக்கிறது. கொல்சிகேசே குடும்பத்தின் உள்ளூர் மற்றும் அச்சுறுத்தப்பட்ட அகணியத் தாவரமான லில்லி சரணாலயத்திலும் வளர்கிறது.

பறவைகள் தொகு

சுமார் 170 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் [5] இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, கரண்டிவாயன், வெண்கழுத்து நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சிறிய சீழ்க்கைச்சிரவி, கொண்டை நீர்க்காகம், தடித்த அலகு மீன்கொத்தி, நீர்க்காகம், மற்றும் ஹெரான் போன்ற பறவைகள் இங்கு தவறாமல் இனப்பெருக்கம் செய்கின்றது. முசல் கின்னாத்தி, மற்றும் ஆற்று ஆலா ஆகியவை கூடுகட்டுகின்றன, அதே நேரத்தில் இந்த பூங்கா ஒரு பெரிய மந்தையின் சின்னத் தகைவிலானின் தாயகமாகவும் உள்ளது.[3] ஒரு பிரபலமான கூடு கட்டும் தளமான இதில் 2011 சூன் மாதத்தில் சுமார் 8,000 கூடுகள் காணப்பட்டன. [6] சுமார் 50 கூழைக்கடாக்கள் இதை தங்கள் நிரந்தர இல்லமாக மாற்றியுள்ளன.

குளிர்கால மாதங்களான, திசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி, 40,000 பறவைகள் இங்கு கூடுகின்றன. சில சைபீரியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து குடிபெயர்கின்றன.[7] சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 30க்கும் மேற்பட்ட இனங்களில் புலம் பெயர்ந்த பறவைகளை இந்தச் சரணாலயத்தில் காணலாம். [8]

பிற விலங்குகள் தொகு

தீவுகளில் குல்லாய் குரங்கு, ஆற்று நீர்நாய், பழ வௌவால், ஆசிய மரநாய் மற்றும் இந்திய சாம்பல் முங்கூஸ் போன்ற ஏராளமான சிறிய பாலூட்டிகள் உள்ளன. கூடுதலாக, உடும்புகளின் இனமும் தொகை உள்ளது. சதுப்புநில முதலை நதிப் படுகைகளில் காணப்படும் ஒரு பொதுவான இனமாகும். [9]

செயல்பாடுகள் தொகு

தீவுகளின் வழிகாட்டும் படகு சுற்றுப்பயணங்கள் நாள் முழுவதும் கிடைக்கின்றன. மேலும் பறவைகள், முதலைகள், நீர்நாய்கள் மற்றும் வெளவால்களைப் பார்க்க இது ஒரு சிறந்த வழியாகும். சரணாலயத்திற்குள் தங்குமிடம் இல்லை. எனவே பார்வையாளர்கள் பொதுவாக மைசூர் அல்லது சிறீரங்கப்பட்டணத்தில் தங்கியிருப்பார்கள். பூங்காவிற்கு வருகை தரும் பருவங்கள் சூன் முதல் நவம்பர் வரையாகும் (நீர் பறவைகளின் கூடு கட்டும் காலம்). புலம்பெயர்ந்த பறவைகளைப் பார்க்க சிறந்த நேரம் பொதுவாக திசம்பர் ஆகும். ஆனால் இது ஆண்டுதோறும் மாறுபடும்.

 
பறவைகள் சரணாலயத்தில் சலீம் அலியின் மேற்கோள்

வனத்துறையால் பராமரிக்கப்படும் சலீம் அலி விளக்க மையம், சிறப்பு ஆர்வமுள்ள குழுக்களுக்கு 4 நிமிட ஆவணப்படத்தை திரையிடுகிறது.

அணுகல் தொகு

  • அருகிலுள்ள நகரம்: சிறீரங்கப்பட்டணம் (3 கி.மீ)
  • அருகிலுள்ள நகரம்: மைசூர் (19 கி.மீ)
  • அருகிலுள்ள இரயில்நிலையம்: சிறீரங்கப்பட்டணம்
  • அருகிலுள்ள விமான நிலையம்: மைசூர் விமான நிலையம் (25 கி.மீ)
  • அருகிலுள்ள நெடுஞ்சாலை: பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலை (2 கி.மீ)

படிம நூலகம் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "From Here and There". Deccan Herald. http://www.deccanherald.com/content/114903/from-here-amp-there.html. பார்த்த நாள்: 23 November 2010. 
  2. "Karnataka News : Rs. 1 crore sanctioned for developing Bonal Bird Sanctuary near Surpur". The Hindu. 2011-01-08. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2012-12-05.
  3. 3.0 3.1 "Ranganathittu Bird Sanctuary". The Hindu (Chennai, India). 25 September 2006 இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110123213910/http://www.hindu.com/mp/2006/09/25/stories/2006092500330300.htm. பார்த்த நாள்: 23 November 2010. 
  4. Arasu, Sibi (2019-08-03). "Ranganathittu bird sanctuary braces for the monsoon" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/ranganathittu-bird-sanctuary-braces-for-the-monsoon/article28805970.ece. 
  5. "Bird Checklist – Mysore Nature". www.mysorenature.org. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  6. DHNS (10 June 2011). "8,000 nestlings sighted at Ranganathittu". Deccan Herald. http://www.deccanherald.com/content/167949/8000-nestlings-sighted-ranganathittu.html. பார்த்த நாள்: 19 February 2013. 
  7. M.T., Shiva Kumar (28 January 2013). "Ranganathittu comes alive with winged beauties". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/ranganathittu-comes-alive-with-winged-beauties/article4352532.ece. பார்த்த நாள்: 19 February 2013. 
  8. "Ranganathittu reports record revenue". The Hindu. 9 January 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/ranganathittu-reports-record-revenue/article2786551.ece?css=print. பார்த்த நாள்: 19 February 2013. 
  9. TNN. "Sanctuary crocs fear extinction". The Times of India mobile edition. http://mobilepaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=7&sectid=edid=&edlabel=TOIBG&mydateHid=10-08-2012&pubname=Times+of+India+-+Bangalore&edname=&articleid=Ar00701&publabel=TOI. பார்த்த நாள்: 19 February 2013. [தொடர்பிழந்த இணைப்பு]