ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல்லில் இந்திய நகரமான ஜெய்பூரை வழிநடத்த உரிமை பெற்ற கிரிக்கெட் அணியாகும். இந்த அணி ஷேன் வார்னேவைத் தலைமையாகவும், பயிற்சியாளராகவும் கொண்டுள்ளது. அணியின் சின்னம் மூச்சு சிங் என்றழைக்கப்படும் சிங்கம் ஆகும் [2]. அணிக்கான பாடல் இலா அருணால் பாடப்பட்ட 'ஹல்லா போல்' என்ற பாடலாகும்[2]. முதல் ஆண்டு ஐபில்லிற்கு முன்பு மற்றும் அது நடைபெற்று வந்த போது பிளிங்க்பிக்சர்ஸில் நாட்டோஜியால் இயக்கப்பட்ட ஊக்குவிப்பு வீடியோ தேசிய ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. லேசெஸ்டெர்ஷைர் சுழற்பந்து வீச்சாளர் ஜெரெமி ஸ்னேப் ராஜஸ்தான் ராயல்ஸின் உயர்-செயல்திறன் பயிற்சியாளராகவும் அணியின் உளவியலாளராகவும் கையெழுத்திட்டார். இந்த அணி 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் பந்தயப்போட்டிகளில் வெற்றியாளரானது.

ராஜஸ்தான் ராயல்ஸ்
தொடர்இந்தியன் பிரீமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்சஞ்சு சாம்சன்
பயிற்றுநர்ஆன்ட்ரியு மெக்டொனால்ட்
உரிமையாளர்மனோஜ் பதலே[1]
அணித் தகவல்
நகரம்ஜெய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா
நிறங்கள்RR
உருவாக்கம்2008 (2008)
உள்ளக அரங்கம்சவாய் மன்சிங் அரங்கம், ஜெய்ப்பூர்
கொள்ளளவு30,000
வரலாறு
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்1 (2008)
சலீஇ20 வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:www.rajasthanroyals.com

இ20

உரிமை வரலாறு தொகு

ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமை மனோஜ் படேலின் தலைமையில் இயங்கும் எமர்ஜிங் மீடியா குழு வசம் இருக்கிறது. லாக்லாப் மர்டோக், ஆதித்யா எஸ் செல்லராம் மற்றும் சுரேஷ் செல்லராம் ஆகியோர் மற்ற முதலீட்டாளர்கள் ஆவர். அந்தக் குழு $67 மில்லியனுக்கு உரிமையைக் கைப்பற்றியது. தற்செயலாக, இது இந்தியன் பிரிமியர் லீக்கின் மிகவும் குறைவான விலையைக் கொண்ட உரிமையாக இருந்தது, மேலும் பந்தயப் போட்டிகளின் ஆரம்பத்தில் லீகில் இருந்த அணிகளில் மிகவும் குறைவான எதிர்பார்ப்புடைய அணியாக இருந்தது. பாலிவுட் நடிகை மற்றும் செலெபிரிட்டி பிக் பிரதர் வெற்றியாளர் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தொழில் கூட்டாளி ராஜ் குந்தரா இருவரும் தோராயமாக US $15.4 மில்லியன் செலுத்தி 11.7% பங்குகளை வாங்கினர்.

2008 ஐபிஎல் பருவம் தொகு

தொடக்க ஐபிஎல் பருவம் தொடங்குவதற்கு முன்பு, ராயல்ஸை ஐபிஎல்லில் இருந்த மிகவும் வலுவற்ற அணியாகவும், அவர்களுக்கும் பந்தயப்போட்டிகளில் விளையாட ஒரு சிறு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றே பலரும் கருதினர்.[3] அணி அதன் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸிற்கு எதிராக 9 விக்கெட் இழப்பிற்குத் தோல்வியடைந்ததன் மூலம் அவர்களுடைய கருத்துக்கள் உண்மையானது.[4] எனினும் ராயல்ஸ் அதன் அடுத்தப் போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாபைத் தோற்கடித்ததன் மூலம் வெற்றி பெற்றது. மேலும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. ராயல்ஸ் அதன் பதினான்கு முதன்மைச் சுற்று போட்டிகளுக்குப் பிறகு 11-3 என்ற ஈர்க்கக்கூடிய சாதனையைச் செய்திருந்தது; இதில் தொடர்ந்த 5-ஆட்ட வெற்றி உள்ளடங்கியுள்ளது மற்றும் 6-ஆட்டங்களில் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாத சாதனையை நிகழ்த்தி தொடர் வெற்றி வாய்ப்பைப் பெற்றது. மேலும் புள்ளிகளின் அட்டவணையில் முதல் இடத்தைப் பிடித்தது. மேலும் அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 65 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணியானது. ஷேன் வார்னேவின் அணித்தலைமையும் பயிற்சியும் எதிர் அணியினர் உட்பட அனைவராலும் பாராட்டப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது[8][10].[12] மேலும், ராயல்ஸ் அணியின் பல விளையாட்டு வீரர்களும் நிலையாக நன்றாக விளையாடினர். டெல்லி டேர்டெவில்ஸ்க்கு எதிரான இறுதியாட்டத்தில் ராயல்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

பந்தயப் போட்டிகளின் வெற்றியாளர்கள் தொகு

2008ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் முதல் ஐபிஎல் பந்தயப் போட்டிகளின் வெற்றியாளர் ஆனது. ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் இருந்த போது சொஹைல் தன்வீர் ஆட்டத்தின் இறுதி ரன்னை எடுத்தார் அதனால் போட்டியின் வெற்றியாளரை பவுல் அவுட் முறையில் தீர்மானிக்கப்படுவது தடுக்கப்பட்டது.

ஒவ்வொரு வீரரும் அணியின் பிரதிநிதியும் பதக்கங்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்டனர் மேலும் அணியினருக்கு DLF இந்தியன் பிரிமியர் லிக் கோப்பையுடன் US$ 1.2 மில்லியன் தொகை காசோலையும் பரிசாக வழங்கப்பட்டது. ராயல்ஸ் வீரர்களில் பலரும் அவர்களது திறமைகளுக்காக பந்தயப் போட்டிகளில் வழங்கப்பட்ட தனி விருதுகளையும் பெற்றனர்; இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை யூசூஃப் பதான் உரிமையாக்கிக் கொண்டார், சொஹைல் தன்வீர் பந்தயப் போட்டிகளை இறுதி செய்து பர்ப்பிள் கோப்பையை சொந்தமாக்கிக் கொண்டார். மேலும் (ஐபிஎல் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்) ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

2009 ஐபிஎல் பருவம் தொகு

2009ஆம் ஆண்டு பருவத்தின் போது ராயல்ஸ் அணிக்கு ஒரு நல்ல தொடக்கம் அமையவில்லை. 2008ஆம் ஆண்டில் இரண்டாவதாக வெளியேறிய ராயல் சேலஜ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான அவர்களது முதல் விளையாட்டில், ராயல்ஸ் பந்தய போட்டிகளின் வரலாற்றில் மிகவும் குறைந்த ரன்களை எடுத்தது. யூசூஃப் பதான் மெதுவாக அவரது வேகமான அதிரடி ஆட்டத்தை தொடங்கியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு எதிரான வெற்றிகளைப் ராஜஸ்தான் பெற்றது. இது ராயல்ஸுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் நம்பிக்கையை அளித்தது. இருந்தபோதிலும், நிலையில்லாத ஆட்டம் முக்கிய காரணியானது; சொந்த நாட்டு மக்களுக்கு முன்பாக விளையாடும், முந்தைய பருவத்தில் 441 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டார், அவரும் ஸ்வப்னில் ஆஸ்நோட்கர் இருவரும் இணைந்து பலமான மற்றும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. முந்தைய ஆண்டின் நட்சத்திரங்களான சொஹைல் தன்வீர் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அணியில் இல்லாததும் முக்கிய காரணமாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆன பிரச்சனைகளால் தன்வீர் இந்த பருவத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை, மேலும் யுஏஇ யில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியாவிற்காக விளையாட வாட்சன் அழைக்கப்பட்டிருந்தார். கைஃப்பின் பேட்டிங் அணிக்கு பேட்டிங்கிற்கு உதவியாக இருக்கும் என நினைத்து முகமது கைஃப் இந்தியாவிற்கு மறுபிரவேசம் செய்தது அணியில் எடுக்கப்பட்ட மோசமான தீர்மானம் எனப் பலர் எண்ணினர். டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ராயல்ஸ் தோல்வியடையந்ததைத் தொடர்ந்து அறையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினர்.

விளையாட்டு வீரர்கள் தொகு

விளையாட்டு வீரர்களுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் குறைந்த விலையுடைய உரிமையைக் கொண்டதாக இருந்தது. இந்த அணி குறிப்பிடும் படியான எந்த ஒரு வீரரையும் கொண்டிருக்கவில்லை, இதனால் உரிமையில் பன்மடங்கு தொகை மிச்சமானது. எனினும் ஏல விற்பனையின் போது வியப்பூட்டும் விதமாக மிகவும் குறைந்த அளவு உரிமையையே இந்த அணி பெற்றிருந்தது, மேலும் முடிவாக ஐபிஎல் கமிட்டி நிர்ணயித்த குறைந்த ஏலத்தொகையான $3.3 மில்லியன் தொகையை எட்டவில்லை என்பதால் இந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.[5] ராஜஸ்தான் ராயல்ஸிற்காக $675,000 அளவு தொகைக்கு இந்திய மைய வரிசை பேட்ஸ்மேன் முகமது கைஃப் எடுக்கப்பட்டார், இதுவே இந்த அணியால் எடுக்கப்பட்ட அதிக ஏலத்தொகையாகும். ஷேன் வார்னே அணியின் பயிற்சியாளராகவும் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2008 பருவத்தின் போது ராயஸ் அணியினர் தனித்தன்மையுடன் விளங்கினர் ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரரை இவர்களது அணி மட்டுமே கொண்டிருந்தது, ஹேம்ப்ஷைரின் ஆல் ரவுண்டரான டிமிட்ரி மஸ்கரென்ஹஸ் இங்கிலாந்து திரும்புவதற்கு முன்பு 11 மே இல் ஜெய்ப்பூரில் டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் பங்கு கொண்டார். ஜஸ்டின் லேன்கர் மற்றும் மோர்ன் மோர்கல் போன்ற வீரர்களையும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுத்திருந்தது, ஆனால் கண்ட்ரி கிரிக்கெட்டுக்கு மாறாக இதை விளையாட அவர்கள் மறுத்தனர்.[18][20] [6] முந்தைய ஆண்டில் அணியில் இருந்த ஏழு இந்திய வீரர்கள் 2009 பருவத்தில் இந்த பருவத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். பேட்ஸ்மேனான முகமது கைஃப் மற்றும் பிற ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அடையாளம் காணப்படாத தினேஷ் சலூன்கே, பரஸ் தொக்ரா, அனுப் ரெவந்கர், ஸ்ரீதீப் மங்கெலா, அசரஃப் மக்தா மற்றும் அசார் மல்லிக் ஆகியோர் இதில் அடங்குவர்.[7]

வீரர்கள் பட்டியல் தொகு

  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
18 மனன் வோரா   18 மார்ச்சு 1993 (1993-03-18) (அகவை 30) வலது-கை வலது-கை மிதம் 2019 20 லட்சம்
43 ஷாசங்க் சிங்   21 நவம்பர் 1991 (1991-11-21) (அகவை 32) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 20 லட்சம்
49 ஸ்டீவ் சிமித்   2 சூன் 1989 (1989-06-02) (அகவை 34) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 12 கோடி தலைவர்; வெளிநாட்டு வீரர்
பன்முக வீரர்கள்
5 ரியான் பராக்   10 நவம்பர் 2001 (2001-11-10) (அகவை 22) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 20 லட்சம்
6 மகிபால் லொம்ரோர்   16 நவம்பர் 1999 (1999-11-16) (அகவை 24) இடது-கை மந்த இடது-கை வழமைச் சுழல் 2018 20 லட்சம்
37 ஷ்ரேயாஸ் கோபால்   4 செப்டம்பர் 1993 (1993-09-04) (அகவை 30) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 20 லட்சம்
55 பென் ஸ்டோக்ஸ்   4 சூன் 1991 (1991-06-04) (அகவை 32) இடது-கை வலது-கை மித-வேகம் 2018 12.5 கோடி வெளிநாட்டு வீர்ர்
N/A ராகுல் தெவாத்தியா   20 மே 1993 (1993-05-20) (அகவை 30) இடது-கை வலது-கை நேர் திருப்பம் 2020 3 கோடி
இலக்குக் கவனிப்பாளர்கள்
8 சஞ்சு சாம்சன்   11 நவம்பர் 1994 (1994-11-11) (அகவை 29) வலது-கை 2018 8 கோடி
63 ஜோஸ் பட்லர்   8 செப்டம்பர் 1990 (1990-09-08) (அகவை 33) வலது-கை 2018 4.4 கோடி வெளிநாட்டு வீர்ர்
பந்து வீச்சாளர்கள்
22 ஜோப்ரா ஆர்ச்சர்   1 ஏப்ரல் 1995 (1995-04-01) (அகவை 28) வலது-கை வலது-கை மித-வேகம் 2018 7.2 கோடி வெளிநாட்டு வீர்ர்
77 வருண் ஆரோன்   29 அக்டோபர் 1989 (1989-10-29) (அகவை 34) வலது-கை வலது-கை வேகம் 2019 2.4 கோடி
N/A அங்கித் ராஜ்பூத்   4 திசம்பர் 1993 (1993-12-04) (அகவை 30) வலது-கை வலது-கை மித-வேகம் 2020 3 கோடி
N/A மயங்க் மார்கன்டே   11 நவம்பர் 1997 (1997-11-11) (அகவை 26) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2020 20 லட்சம்

நிர்வாகம் தொகு

  • உரிமையாளர்(கள்) – எமர்ஜிங் மீடியா, ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
  • CEO – மனோஜ் படேல்
  • மேலாளர் (செயல்பாடுகள்) – ஷாம்ஷர் சிங்
  • தலைவர் – TBA

பந்தய ஏற்பாடுகள் மற்றும் முடிவுகள் தொகு

ஒட்டுமொத்த முடிவுகள் தொகு

முடிவுகளின் சுருக்கம்
வெற்றிகள் தோல்விகள் முடிவு அறிவிக்கப்படாதது வெற்றி %
2008 13 3 0 81%
2009 6 7 1 43%
மொத்தம் 19 10 1 63%

2008 பருவம் தொகு

எண். நாள் எதிரணி இடம் முடிவு
1 19 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது
2 21 எப்ரல் கிங்ஸ் XI பஞ்சாப் ஜெய்ப்பூர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது, MoM – ஷேன் வாட்சன் – 76* (49)
3 24 ஏப்ரல் டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM – யூசுப் பதான் – 2/20 (2 ஓவர்கள்) மற்றும் 61 (28)
4 26 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூர் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM – ஷேன் வாட்சன் – 2/20 (4 ஓவர்கள்) மற்றும் 61* (41)
5 1 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெய்ப்பூர் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, MoM – ஸ்வாப்நில் ஆஸ்னோட்கர் – 60 (34)
6 4 மே சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெய்ப்பூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM – சொஹைல் தன்வீர் – 6/14 (4 ஓவர்கள்)
7 7 மே மும்பை இண்டியன்ஸ் நாவி மும்பை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
8 9 மே டெக்கான் சார்ஜர்ஸ் ஜெய்ப்பூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM – யூசூஃப் பதான் – 68 (37)
9 11 மே டெல்லி டேர்டெவில்ஸ் ஜெய்ப்பூர் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM – ஷேன் வாட்சன் – 2/21 (4 ஓவர்கள்) மற்றும் 74 (40)
10 17 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜெய்ப்பூர் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, MoM – கிரேம் ஸ்மித் – 75* (49)
11 21 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM – யூசூஃப் பதான் – 1/14 (2 ஓவர்கள்) மற்றும் 48* (18)
12 24 மே சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
13 26 மே மும்பை இண்டியன்ஸ் ஜெய்ப்பூர் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM – சொஹைல் தன்வீர் – 4/14 (4 ஓவர்கள்)
14 28 மே கிங்ஸ் XI பஞ்சாப் மொஹாலி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
15 30 மே டெல்லி டேர்டெவில்ஸ் (அரையிறுதி #1) மும்பை 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, MoM – ஷான் வாட்சன் – 52 (29) மற்றும் 3/10 (3 ஓவர்கள்)
16 1 ஜூன் சென்னை சூப்பர் கிங்ஸ் (இறுதி) நவி மும்பை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது,MoM – யூசூஃப் பதான் – 56 மற்றும் 3/22 (4 ஓவர்கள்), MoS – ஷான் வாட்சன் – 472 ரன்கள் மற்றும் 17 விக்கெட்டுகள், பர்ப்பில் கேப் ஹோல்டர் - சொஹைல் தன்வீர் தொடக்க DLF IPL T-20 பந்தயப் போட்டிகளை 01/06/2008 இல் ராயல்ஸ் வென்றது .

2009 பருவம் தொகு

எண். தேதி எதிரணி இடம் முடிவு
1 18 ஏப்ரல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப் டவுன் 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
2 21 ஏப்ரல் மும்பை இண்டியன்ஸ் டர்பன் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது
3 23 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப் டவுன் வென்றது (சூப்பர் ஓவரில்), MoM - யூசூஃப் பதான் 42 (21), 18* (4) சூப்பர் ஓவரில்
4 26 ஏப்ரல் கிங்ஸ் XI பஞ்சாப் கேப் டவுன் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
5 28 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் பிரிட்டோரியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது MoM - யூசூஃப் பதான் 62* (30)
6 30 ஏப்ரல் சென்னை சூப்பர் கிங்ஸ் பிரிட்டோரியா 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
7 2 மே டெக்கான் சார்ஜர்ஸ் எலிசபெத் துறைமுகம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது MoM -யூசூஃப் பதான் 24(17),1/19
8 5 மே கிங்ஸ் XI பஞ்சாப் டர்பன் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, MoM - கிரேம் ஸ்மித் 77(44)
9 7 மே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிரிட்டோரியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது, MoM - அமித் சிங் 4/19
10 9 மே சென்னை சூப்பர் கிங்ஸ் கிம்பர்லே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது
11 11 மே டெக்கான் சார்ஜர்ஸ் கிம்பர்லே 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
12 14 மே மும்பை இண்டியன்ஸ் டர்பன் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, MoM - ஷேன் வார்னே 3/24(4 ஓவர்கள்)
13 17 மே டெல்லி டேர்டெவில்ஸ் ப்ளோம்ஃபோன்டெயின் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
14 20 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டர்பன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது

குறிப்புகள் தொகு

  1. "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019. 
  2. 2.0 2.1 "ராஜஸ்தான் ராயல்ஸ் அறிமுக விருந்து". Archived from the original on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2009-12-20.
  3. "IPL preview". Setana Sports. 2008-04-16. Archived from the original on 2008-04-18. பார்க்கப்பட்ட நாள் 2008-05-27.
  4. "Match 3". Cricinfo. 2008-04-19. பார்க்கப்பட்ட நாள் 2008-05-27.
  5. "Jaipur franchise to be penalised". Cricinfo.
  6. "Morne will play for Yorkshire". Cricinfo. 2008-03-14.
  7. "Rajasthan cut Kaif from final squad". www.cricinfo.com. 2009-04-15.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜஸ்தான்_ராயல்ஸ்&oldid=3569735" இலிருந்து மீள்விக்கப்பட்டது