ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (Rajiv Gandhi National Institute of Youth Development, RGNIYD), திருப்பெரும்புதூர், தமிழ்நாடு நாடாளுமன்ற சட்டம் எண்.35/2012இன்படி 1993இல் நிறுவப்பட்ட பொதுத்துறை கல்வி நிறுவனமாகும். இது இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவையின் கீழ் இது செயல்படுகின்றது.

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
राजीव गांधी राष्ट्रीय युवा विकास संस्थान
100x
வகைபொது
உருவாக்கம்1993
பணிப்பாளர்முனைவர். இலதா பிள்ளை
அமைவிடம், ,
வளாகம்42 ஏக்கர்கள்
இணையதளம்rgniyd.gov.in

இந்த நிறுவனத்தில் இளைஞர் மேம்பாட்டிற்கான பட்ட மேற்படிப்பு திட்டங்களையும் ஆய்வுத் திட்டங்களையும் நல்குகின்றது. மாநில முகமைகளுக்கும் இளைஞர் அமைப்புகளுக்கும் பயிற்சி திட்டங்களையும் ஒருங்கிணைக்கின்றது. நாடு முழுவதும் விரிவாக்கப் பணிகளிலும் பரப்புரை முயற்சிகளிலும் பங்கேற்கின்றது.

நாட்டின் இளைஞர் தொடர்பான நடவடிக்கைகளுக்கான முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது. நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவ கேந்திர சங்காதன் மற்றும் பிற இளைஞர் அமைப்புகளுடன் பயிற்சி திட்டங்களை வகுப்பதில் பங்கேற்கின்றது. ஊரக, நகரிய மற்றும் பழங்குடி பகுதிகளில் இளைஞர் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் பயிற்சிகளுக்கு மைய முகமையாகவும் உள்ளது.

வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகள் தொகு

  • கணினி அறிவியல் (தரவு அறிவியல்]] (Data Science)
  • கணினி அறிவியல் (செயற்கை நுண்ணறிவு)
  • கணினி அறிவியல் (கணினி குற்றம்)
  • கணிதம்
  • உளவியியல்
  • ஆங்கிலம்
  • சமூகவியல்
  • மேம்பாட்டுக் கல்வி
  • பொது நிர்வாகம்
  • இளைநர் மற்றும் சமுதாய மேம்பாடு (M.S.W.)

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு