ராஜ்குமார் சேதுபதி

இந்திய நடிகர்

ராஜ்குமார் சேதுபதி ஒரு  தென்னிந்திய நடிகராவார். பெரும்பாலும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கிறார். சுமார் 50 மலையாள படங்களில் நடித்துள்ளார். எம்.பாஸ்கர் இயக்கிய சூலம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] 1981 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான த்ரிஷ்ணா வில் மம்முட்டியுடன் நடித்தார். 1982 ஆம் ஆண்டில் பி.வேணு இயக்கிய ராஜா என்ற  மலையாள திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடித்தார்.

ராஜ்குமார் சேதுபதி
பிறப்புசென்னை
செயற்பாட்டுக்
காலம்
1980–1988
2013-தற்போதும்
பெற்றோர்சண்முக ராஜேஸ்வர சேதுபதி, லீலா ராணி
வாழ்க்கைத்
துணை
ஸ்ரீபிரியா
(1988- தற்போதும்)
பிள்ளைகள்ஸ்நேகா, நாகர்ஜுன்


பின்னணி தொகு

ராஜ்குமார் சென்னையில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படத் தாயரிப்பாளரான சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலா ராணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தமிழ் நடிகை லதா இவரது மூத்த சகோதரியாவார். தென்னிந்திய திரைப்பட கூடத்தில் இரண்டு ஆண்டுகள் நடிப்பு சார்ந்த படிப்புகளை முடித்துள்ளார். 1988ல் நடிகை ஸ்ரீபிரியாவை மணந்தார்.இந்த தம்பதிகளுக்கு  மகள் சினேகா மற்றும் மகன் நாகார்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2013 ல் வெளியான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தை  இவரது மனைவி ஸ்ரீபிரியா இயக்கினார்.

மலையாள திரைப்படங்கள் தொகு

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம்
1981 த்ரிஷ்னா
1981 பூச்ச சன்யாசி
1981 பார்வதி மஹேந்திர வர்மா
1982 அரஞ்ஞானம் ராஜேஷ்
1982 ஆச லால்
1982 ஆக்ரோசம்
1982 கலுமரம்
1982 பூவிரியும் புலரி ஜானி
1982 இன்னில்லெங்கில் நாள
1982 எனிக்கும் ஒரு திவசம் ஹம்சா
1982 ஒடுக்கம் தொடக்கம்
1982 அனுராக கோடதி ரவி
1982 வரன்மாரே அவஸ்யமுண்டு
1983 ரதிலயம்
1983 ஆஸ்தி கிருஷ்ணமூர்த்தி
1983 பூகம்பம்
1983 பரஸ்பரம் ஈசாக்
1983 காட்டறிவி
1983 ஹலோ மெட்ராஸ் கேர்ல்
1983 ஒன்னு சிறிக்கு ராஜு
1983 மஹாபலி
1983 தாளம் தெட்டிய தாரத்து
1984 உன்னி வந்த திவசம்
1984 கிருஷ்ணா குருவாயூரப்பா
1984 தத்தம்ம போச்சா போச்சா
1984 வெப்ராளம்
1984 விகடகவி
1984 ஜீவிதம் சந்திரன்
1984 கரிம்பு
1984 பூமரத்தே பெண்ணு ஆனந்த்
1985 கரிநாகம்
1986 இத்ரமாத்ரம் ரவி
1988 பீகரன்
1988 அதிர்த்திகள்

தமிழ் திரைப்படங்கள் தொகு

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம்
1980 சூலம்
1980 உச்சக்கட்டம்
1983 காஷ்மீர் காதலி
1983 உண்மைகள்
1983 வில்லியனூர் மாதா
1984 அன்புள்ள ரஜினிகாந்த்
1985 ஜெயின் ஜெயபால்
1986 ஆயிரம் பூக்கள் மலரட்டும்
1987 காதல் பரிசு

தெலுங்கு திரைப்படங்கள் தொகு

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம்
1984 மானசவீனா

தயாரித்த படங்கள் தொகு

வருடம் திரைப்படம்
2013 மாலினி 22 பாளையங்கோட்டை
2015 பாபநாசம் (திரைப்படம்)

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்குமார்_சேதுபதி&oldid=2952054" இலிருந்து மீள்விக்கப்பட்டது