ராஜ்யலட்சுமி

இந்திய நடிகை

ராஜ்யலட்சுமி சாந்து என்பவர் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1] இவர் 1980 களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கு திரைப்படமான சங்கராபரணம் படத்தில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டார், இதில் இவர் தனது பதினைந்து வயதில் சந்திர மோகனுடன் கதாநாயகியாக நடித்தார். சங்கரபாரணத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்யலட்சுமி, என். டி. ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சங்கர், மோகன்லால், திலீப், ஜிதேந்திரா, மம்முட்டி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறையின் அனைத்து பகுதிகளிலும் பல முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் அவ்வப்போது தோன்றுகிறார்.[2]

சங்கராபரணம் ராஜ்யலட்சுமி
பிறப்பு18 திசம்பர் 1964 (1964-12-18) (அகவை 59)
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980-1990
2003-தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
கே. ஆர். கிருஷ்ணன்
(1990 - தற்போதுவரை)
பிள்ளைகள்ரோகித்
ராகுல்

குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ராஜ்யலட்சுமி 1964 திசம்பர் 18 அன்று ஆந்திராவின் தெனாலியில் பிறந்தார். தனது குழந்தை பருவத்திலேயே நாடகக் குழுவில் இருந்த தனது தாயுடன் சிறிய நாடகங்களில் நடித்துள்ளார். 1980 இல் சங்கராபரணத்தில் "சாரதா" என்ற பாத்திரத்தில் நடித்தார்.

1990 ஆம் ஆண்டில் கே. ஆர். கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு ரோகித் கிருஷ்ணன் மற்றும் ராகுல் கிருஷ்ணன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வசிக்கிறார்.

திரைப்படவியல் தொகு

தமிழ் தொகு

தொலைக்காட்சித் தொடர்கள் தொகு

ஆண்டு தலைப்பு அசல் தலைப்பு பாத்திரம் அலைவரிசை மொழி
1991 பெண் சுஜாதா தூர்தர்ஷன் தமிழ்
2007-2010 மேகலா மேகலா திலகா சன் தொலைக்காட்சி தமிழ்
2009 கண்மணியே கண்மணியே
2011–2012 பிரிவோம் சாந்திப்போம் 1 பிரிவோம் சாந்திப்போம் 1 தனம் விஜய் தொலைக்காட்சி
2013 பிரிவோம் சாந்திப்போம் 2 2 இல்
2012–2014 பிள்ளை நிலா பிள்ளை நிலா நீலவேனி சன் தொலைக்காட்சி
2012–2014 பார்த்த ஞாபகம் இல்லையோ கலைஞர் தொலைக்காட்சி
2013–2015 தெய்வமகள் தெய்வமகள் சம்பூர்ணம் சுந்தரம் சன் தொலைக்காட்சி
2014 அம்மா అమ్మ ஜெமினி தொலைக்காட்சி தெலுங்கு
2017–2019 ராஜா ராணி ராஜா ராணி லட்சுமி ராஜசேகர் விஜய் தொலைக்காட்சி தமிழ்
2017–2019 அழகு அழகு தேவி மணிமறன் சன் தொலைக்காட்சி
2019 கண்ணுலு மூசினா நீவே ஜெகதம்பா ஸ்டார் மா தெலுங்கு
2020 - தற்போது பாக்யலட்சுமி பாக்யலட்சுமி ஈஸ்வரி விஜய் தொலைக்காட்சி தமிழ்

குறிப்புகள் தொகு

  1. http://www.thehindu.com/features/cinema/grill-mill-rajalakshmi/article931302.ece
  2. "Face to Face-Tv9-Telugu". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 14 November 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்யலட்சுமி&oldid=3226713" இலிருந்து மீள்விக்கப்பட்டது