ராவ் ரமேஷ் (Rao Ramesh) ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் காம்யம் (2008) மற்றும் மாவீரன் (2011) திரைப்படம் ஆகியவற்றில் நடித்துள்ளார்.[1][2][3]

தொழில் வாழ்க்கை தொகு

ராவ் ரமேஷ் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ராவ் கோபால் ராவ் (தெலுங்கு திரைப்படங்களில் முத்திரை பதித்த வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்) மற்றும் ராவ் கமலா குமாரி (ஹரி கதா, இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை நாடோடிக் கதைகள் சொல்லும் விதத்தில் சொல்பவர்) ஆகியோருக்கு  ஸ்ரீகாகுளத்தில் பிறந்தார். இவர் சென்னையில் வளர்ந்தவராதலால் தமிழை பல்வேறு வட்டார வழக்குகளில் பேச வல்லவராக இருந்தார். அவரது தொடக்க கால பள்ளி வாழ்க்கை சென்னை, தி. நகரில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தார். பின்னர், இவர் தனது தகவல் தொடர்பியலில் பட்டப்படிப்பை முடிக்கும் முன்பாக, ஒளிப்படவியலில் நிபுணத்துவம் பெற்றார். இவர் தனது ஒளிப்படத்துறை நாட்களில், இவர் சென்னையில் உள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க நுாலகங்களில் எண்ணிலடங்கா மணி நேரங்களை செலவழித்துள்ளார். இவர் பிறகு தொழிற்துறை ஒளிப்படக்கலையை பெங்களூரூவுக்குச் செல்லும் முன்பாக  கே. ராகவேந்திர ராவ் என்பவரின் சகோதரர் கே. எஸ். பிரகாச ராவ், ஒளிப்பதிவாளரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.[4] வாழ்க்கையின் இந்த நிலையைச் சுற்றிலும், லூகாசு தொழிலக ஒளி & தந்திரவியல் குழுமத்தின் தீவிர விசிறியாக இருந்து அதனால் அதில் சேரவும் விரும்பினார். இந்த இலட்சியத்தை அடைவதற்காக, இவர் ஒளிப்படத்துறையில் சிறப்பு நுட்பங்களை கற்றுக்கொள்வதற்காக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க இருந்தார். இருப்பினும், பல சொந்தக் காரணங்களால் இவை சாத்தியப்படவில்லை. 1994 ஆம் ஆண்டு ராவ் கோபால் ராவின் இறப்பிற்குப் பிறகு, ரமேஷ் ராவ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு தனது குடும்ப விவகாரங்களைக் கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்த 7 ஆண்டுகளில், இவர் ஒரு வெறிபிடித்த வாசகராக இருந்தார். புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் வாசித்தார். அவரது விருப்பத்திற்குரியவராக தெலுங்கு கவிஞர் சி. நாராயண ரெட்டி (புனைபெயர் சினாரே) ஆவார். இவரது எழுத்துக்களை முழுவதுமாக மனப்பாடம் செய்து வைத்திருந்தார். இந்த நேரத்தில் அவர் இயக்க விரும்பிய இரண்டு திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும் முயற்சியிலிருந்தார். ஆனால், இவரது தாயார் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இவருக்குள்ள ஆளுமையின் காரணமாக நடிப்புத் தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, இவரது தந்தையின் அடியொற்றி நடக்கும் பொருட்டும், நல்ல உச்சரிப்பைக் கொண்டிருந்தமைக்காகவும் நடிப்பைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்பட்டார். இவர், தொடக்கத்தில் கண்டசாலா ரத்னகுமாரின் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், தயாரிப்புப் பணிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டன. ராவ் ரமேஷ்Rao Ramesh then got an பாலகிருஷ்ணாவின் சீம சிம்ஹம் (2002) படத்தில், சிம்ரனுக்கு சகோதரனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வில்லன் நடிகர்களில் தனி முத்திரை பதித்த நடிகரின் மகனாக இருந்தபோதும் கூட, வேறு வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதன் பிறகு இவர் சென்னைக்குத் திரும்பி “பவித்ர பந்தம்”, மற்றும் ”காலவாரி கோடாலு” போன்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். நான்கரை ஆண்டுகளில் 1000 அத்தியாயங்களில் நடித்து முடித்தார். பல தொலைக்காட்சி நடிகர்கள் தங்களுக்கு இரவல் குரலைப் பதிவு செய்யும் போது கூட இவர் தனக்கான வசனங்களுக்குத் தானே ஒலி வடிவம் கொடுத்தார். இதன் காரணமாக, தனது திறமைகளை கூர் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

நடித்த திரைப்படங்களின் பட்டியல் தொகு

தெலுங்கு தொகு

  • சீம சிமஹம் (2002)
  • ஒக்கடுனாடு (2007)
  • கம்யம் (2008)
  • கொத பங்காரு லோகம் (2008)
  • ஆவக்காய் பிரியாணி (2008)
  • டொங்கல பண்டி (2008)
  • ஃபிட்டிங் மாஸ்ர் (2009)
  • கிக் (2009)
  • மகாதீரா (2009)
  • வில்லேஜ் டு வினாயகுடு (2009)
  • இங்கோசாரி (2010)
  • லீடர் (2010)
  • ஆகாச ராமண்ணா (2010)
  • வருடு (2010)
  • மரியாதை ராமண்ணா (2010)
  • ஓம் சாய் ராம் (2016)
  • ஓம் நமோ வெங்கடேசாய (2017)
  • யுத்தம் சரணம் (2017)
  • ஈகோ (2017)
  • அஞ்யாதவாசி(2018)

தமிழ் தொகு

  • ஈசன் (2010)
  • சாகசம் (2016)

மேற்கோள்கள் தொகு

  1. Srivathsan Nadadhur. "Ramesh Varma plays true to the script". The Hindu. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  2. Sangeetha Devi Dundoo. "Sher review Kalyan Ram". The Hindu. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  3. "Rao Ramesh makes a mark". The Times of India.
  4. "Rao Ramesh - Telugu Cinema interview - Telugu film actor".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவ்_ரமேஷ்&oldid=3925633" இலிருந்து மீள்விக்கப்பட்டது