ரிங்கு ராச்குரு

ரிங்கு ராச்குரு (Rinku Rajguru) ( 3 ஜூன் 2001) இவர் மராத்தி மொழி திரைப்பட நடிகையாவார்.[2][3] 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சைராட் என்ற திரைப்படதில் சிறப்பாக நடித்து புகழைப்பெற்றார். இவருக்கு கதாநாயகனாக அறிமுக நாயகன் ஆகாஸ் தோசார் என்பவர் நடித்துள்ளார்.[4] தற்சமயம் இவர் மகாரஷ்டிரா மாநிலம், சோலாபூர் அக்லுஜ்[5] என்ற இடத்தில் உள்ள ஜிஜமதா கன்ய பிரசாலா பள்ளியில் 10 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார்.[6][7]சாய்ராட் படத்தின் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே இவரை 2013 ஆம் ஆண்டு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் 63 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த சிறிய வயது நடிகை என்பதற்காக இந்திய ஜனாதிபதியிடம் விருது பெற்றார்.[8] இவரின் அப்பா, அம்மா ஆகிய இருவரும் ஆசிரியர்களாக வேலை செய்கிறார்கள். இவரது ஆசை மருத்துவராக படிக்க வேண்டும் என்பதாகும்.[9][10]சாய்ராட் திரைப்படம் 4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டாலும் இந்தியாவில் 50 கோடியும், வெளிநாடுகளில் 100 கோடிகளும் வசூல் செய்து சாதனை செய்துள்ளதால் இவருக்கு இப்படத்தின் தாரிப்பாளர் ஊக்க தொகையாக 5 கோடி கொடுத்து பாராட்டியுள்ளார். இதேபோல் இவருடன் நடித்த ஆகாஸ் தோசாருக்கும் 5 கோடி ஊக்க தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.[11] இந்த செய்தியை பின்னர் இவர் மறுத்தார்.[12]

ரிங்கு ராச்குரு
சைராட் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
தாய்மொழியில் பெயர்மராத்தி: रिंकू राजगुरू
பிறப்பு2000/2001 (அகவை 22–23)[1]
அக்லுச், மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016 முதல்

திரைப்படம் தொகு

வருடம் தலைப்பு மொழி கதாபாத்திரம் குறிப்புகள்
2016 சைராட் மராத்தி அர்ச்சனா பட்டேல் சிறப்பு ஜூரி விருது 63 வது தேசிய திரைப்பட விருதுகள்.

விருதுகள் தொகு

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Atulkar, Preeti (29 March 2016). "I'm enjoying this moment to the fullest: Rinku Rajguru". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  2. "Sairat: Rinku Rajguru on winning the National Award and much more".
  3. "Sairat amasses Rs 25.50 cr in first week". The Times of India. 8 May 2016.
  4. "Sairat Movie Review". The Times of India.
  5. 15-yr-old Rinku, aka Sairat’s Archie: Maharashtra’s latest film sensation[தொடர்பிழந்த இணைப்பு] Thr Indian Express May 19, 2016
  6. https://www.youtube.com/watch?v=onvkllwM-OI
  7. "Rinku Rajguru school result - Maharashtra Times". Maharashtra Times.
  8. National Awards: Rinku Rajguru from Nagraj Manjule’s Sairat gets a SPECIAL MENTION![தொடர்பிழந்த இணைப்பு] May 3, 2016
  9. Preeti Atulkar (4 May 2016). "Anurag Kashyap praises Sairat". The Times of India.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
  11. sets box office on fire: Rinku Rajguru and Akash Thosar get bonus of Rs 5 crore each[தொடர்பிழந்த இணைப்பு] India Today May 20, 2016
  12. [1] தி டைம்ஸ் ஆப் இந்தியா 20 ஜூன் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிங்கு_ராச்குரு&oldid=3602570" இலிருந்து மீள்விக்கப்பட்டது