ரிச்சர்ட் டி சொய்சா

ரிச்சர்ட் டி சொய்சா (Richard Manik de Zoysa, சிங்களம்: රිචඩ් ද සොයිසා, 18 மார்ச் 1958 - 18 பெப்ரவரி 1990) இலங்கையில் இருந்த முன்னணி ஊடகவியாலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் நடிகராவார். இவர் இனம் தெரியாத நபர்களால் இவரது வீட்டில் இருக்கும் போது கடத்தப்பட்டு 1990 பெப்ரவரி 17 அல்லது 18 இல் கொலை செய்யப்பட்டார்[1]. இலங்கையின் தேசிய தொலைக்காட்சிச் சேவையான ரூபவாஹினியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் செயலாற்றிய ரிச்சர்ட் கொலை செய்யப்பட்ட போது உலக ஊடகவியலாளர் சேவையின் கொழும்பு கிளையின் பொறுப்பாளாராக செயற்பட்டுவந்தார்.

ரிச்சர்ட் டி சொய்சா
Richard de Zoysa
பிறப்பு(1958-03-18)18 மார்ச்சு 1958
கொழும்பு, இலங்கை
இறப்பு18 பெப்ரவரி 1990(1990-02-18) (அகவை 31)
இலங்கை
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
தேசியம்இலங்கையர்
கல்விபுனித தோமையர் கல்லுரி, கல்கிசை
பணிஊடகவியலாளர், நடிகர்
பெற்றோர்மனோராணி சரவணமுத்து (தாய்)

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

ரிச்சர்ட் இலங்கையின் பெரும்பான்மை சிங்களத் தந்தைக்கும் சிறுபான்மை தமிழ்த் தாய்க்கும் பிறந்தவராவார். இவர் கொழும்பில் பிறந்து வளர்ந்தார். ரிச்சர்ட் பிரபல ஊடகவியலாளரும் மலேசியாவில் வசித்தவருமான மாணிக்கசோதி சரவணமுத்துவின் மகளும், பிரபல மருத்துவருமான மனோராணி சரவணமுத்துவின் மகன் ஆவார். மகனது மரணத்தின் பின்னர் இவர் மகன்களை இழந்த தாயார் என்ற சங்கத்தை ஆரம்பித்து மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார்.

கொலை தொகு

ரிச்சர்ட் தனது தாயாருடன் வெலிகடவத்த வீடமைப்புத்திட்டத்தில் வசித்து வந்தார். 1990 பெப்ரவரி 17/18இரவில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அங்கிருந்து கடத்திச் சென்றனர்.[1]

தாயார் உடனடியாக வெலிக்கடை காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டார். அடுத்த நாள் பெப்ரவரி 19 1990, ரிச்சர்ட்டின் உடல் கொழும்பில் இருந்து தெற்கே 12மைல் தூரத்தில் மொரட்டுவை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டிருந்தார் அவரது வாயெலும்பில் முறிவு காணப்பட்டது[1]. ரிச்சர்ட்டின் உடலை அவரது நண்பரான, 2006 இல் கடத்தி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அடையாளம் காட்டினார்.

அரசின் நடவடிக்கைகள் தொகு

வைத்தியர் சரவணமுத்து அடுத்த நாள் தனது மகனை கடத்தியவர்களை அடையாளம் காட்டமுடியும் என கூறியிருந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, தொலைக்காட்சியில் வந்த நபர் ஒருவரை அவர் அடையாளம் கண்டார். அவர் ஒரு காவல்துறை அதிகாரியாவார். இது வழக்கில் தெரிவிக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[1]. மாறாக சரவணமுத்துவும் அவரது சட்டதரணி பட்டி வீரகோணும் கொலை அச்சுறுத்தல்களை பெற்றனர்[1]. 2004 இல் வைத்தியர் சரவணமுத்து தனது மகனது கொலையாளர்களை காணாமலேயே காலமானார்.

ஐக்கிய நாடுகள் விருது தொகு

ஐ.நா.வினால் சுதந்திர ஊடகவியலாளருக்கான விருது ஒன்று ரிச்சர்ட் டி சொய்சாவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

நூல்கள் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 UTHR report on Richard De Zoyza’s death

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_டி_சொய்சா&oldid=3293190" இலிருந்து மீள்விக்கப்பட்டது