ரிச்சர்ட் மேடன்

ரிச்சர்ட் மேடன் (ஆங்கில மொழி: Richard Madden) (பிறப்பு: 18 சூன் 1986) என்பவர் இசுக்கொட்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் தனது நடிப்பு பயணத்தை இவரது 11 வயதில் ஆரம்பித்தார். பின்னர் இவர் இசுக்கொட்லாந்து ராயல் கன்சர்வேட்டரியில் மாணவராக இருந்தபோது பல மேடையில் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார். இவர் 2007 ஆம் ஆண்டில் ஷேக்ஸ்பியரின் குளோப் நிறுவனத்துடன் இணைந்து ரோமியோ ஜூலியட் என்ற மேடை நாடகத்தில் ரோமியோவாக நடித்தார். அதை தொடர்ந்து 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கேம் ஆஃப் துரோன்ஸ் என்ற கற்பனை நாடகத் தொடரில் ராப் இசுடார்க் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ரிச்சர்ட் மேடன்
பிறப்பு18 சூன் 1986 (1986-06-18) (அகவை 37)
எல்டர்ஸ்லீ
இசுக்கொட்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை
துணைவர்ஜென்னா கோல்மன் (2011–இன்று வரை)

2015 ஆம் ஆண்டு சிண்ட்ரெல்லா என்ற திரைப்படத்திலும், 2019 இல் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ராக்கெட்மேன் என்ற படத்திலும் மற்றும் 1917[1] என்ற காவியப் போர் படத்தில் ஒரு சிப்பாயாகவும் நடித்துள்ளார். இவரை 2020 ஆம் ஆண்டில் டைம் இதழ் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பட்டியலிட்டது.

2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'இக்காரிசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ரிச்சர்ட் மேடன் 18 ஜூன் 1986 ஆம் ஆண்டு எல்டர்ஸ்லீ இசுக்கொட்லாந்தில் பிறந்தார். இவரது தாயார் பேட் ஒரு வகுப்பறையில் உதவியாளராக பணிபுரிகின்றார். இவரது தந்தை ரிச்சர்ட் தீ சேவையில் பணிபுரிகின்றார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உண்டு.[4][5]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2000 கோம்ளிசிட்டி இளம் ஆடம்
2010 சட்ரூம் ரிப்ளே
2015 சிண்ட்ரெல்லா பிரின்ஸ் கிட்
2015 பாஸ்டில் டே

தொலைக்காட்சி தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1999–2000 பர்மி ஆன்ட் பூமேரங் செபாஸ்டியன் சிம்ப்கின்ஸ் 20 அத்தியாயங்கள்
2009 ஹோப் ஸ்பிரிங்ஸ் டீன் மெக்கன்சி 8 அத்தியாயங்கள்
2011–2013 கேம் ஆஃப் துரோன்ஸ் ரோப் ஸ்டார்க் 21 அத்தியாயங்கள்
2011 சிறேன்ஸ் ஆஷ்லே க்ரீன்விக் 6 அத்தியாயங்கள்
2012 பிர்ட்சொங் கேப்டன் மைக்கேல் வெயிர் 2 அத்தியாயங்கள்
2014 க்லோண்டிகே பில் ஹேஸ்கல் 3 அத்தியாயங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. Wilkinson, Alissa (30 December 2019). "Why Sam Mendes made 1917 look like it was shot in a single, continuous take". Vox. Archived from the original on 8 January 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  2. Catherine, Shoard (2 January 2020). "First transgender Marvel superhero coming 'very soon'". The Guardian. Archived from the original on 7 January 2020. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
  3. Rubin, Rebecca (3 April 2020). "'Black Widow,' 'Eternals,' 'Indiana Jones 5' and More Disney Films Get New Release Dates". Variety. Archived from the original on 3 April 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2020.
  4. Nathanson, Hannah (1 April 2011). "Game of Thrones is good news for Brit stars". London Evening Standard. http://www.thisislondon.co.uk/lifestyle/article-23937373-game-of-thrones-is-good-news-for-brit-stars.do. பார்த்த நாள்: 1 April 2011. 
  5. "Richard Madden Biography". Tvguide.com. 28 November 2012. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_மேடன்&oldid=3304234" இலிருந்து மீள்விக்கப்பட்டது