ரூபெல் ஒசைன்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

முகம்மது ரூபெல் ஒசைன் (Mohammad Rubel Hossain, வங்காள மொழி: মোহাম্মদ রুবেল হোসেন; பிறப்பு: 1 சனவரி 1990) வங்காளதேசத்து துடுப்பாட்ட வீரர். நடுத்தர விரைவுப் பந்து வீச்சாளரான இவர் தனது முதலாவது ஒரு-நாள் பன்னாட்டுப் போட்டியை, 2009 சனவரி 14 இல் இலங்கைக்கு எதிராக விளையாடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதலாவது தேர்வுப் போட்டியை 2009 சூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இருபது20, 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளிலும் இவர் பங்குபற்றியுள்ளார்.

ரூபெல் ஒசைன்
Rubel Hossain
রুবেল হোসেন
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது ரூபெல் ஒசைன்
பிறப்பு1 சனவரி 1990 (1990-01-01) (அகவை 34)
பாகர்கட், குல்னா, வங்காளதேசம்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 56)9 சூலை 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு12–16 நவம்பர் 2014 எ. சிம்பாப்வே
ஒநாப அறிமுகம் (தொப்பி 94)14 சனவரி 2009 எ. இலங்கை
கடைசி ஒநாப13 மார்ச் 2015 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்34
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007/08–இன்றுசிட்டகொங் பிரிவு
2012-இன்றுசிட்டகொங் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 22 57 39 92
ஓட்டங்கள் 195 83 345 141
மட்டையாட்ட சராசரி 9.28 6.38 8.84 5.87
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 45* 17 45* 18*
வீசிய பந்துகள் 3600 2,594 5768 4280
வீழ்த்தல்கள் 32 75 62 134
பந்துவீச்சு சராசரி 73.34 32.46 61.98 28.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 2 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/166 6/26 5/60 6/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 10/– 16/– 22/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 6 2014

சாதனைகள் தொகு

தேர்வுப் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் தொகு

# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு முடிவு
1 5/166 5   நியூசிலாந்து செடான் பூங்கா அரங்கம் ஆமில்டன் நியூசிலாந்து 2010 தோல்வி

ஒரு-நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் தொகு

# ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு முடிவு
1 6/26 41   நியூசிலாந்து சேர்-இ பங்க்ளா டாக்கா வங்காளதேசம் 2013 வெற்றி

குற்றச்சாட்டுகள் தொகு

நசுநீன் அக்தார் என்னும் நடிகை தன்னை ரூபெல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக காவல்துறையினரிடம் குற்றஞ்சாட்டியதை அடுத்து, ரூபெல் கைது செய்யப்பட்டார். 2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மூன்று நாட்களின் பின்னர் இவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக வங்காளதேச அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிகளில் அவ்வணி தெரிவு செசெய்யப்பட்டதை அடுத்தும், இப்போட்டியில் ஒசைனின் சிறந்த பங்களிப்புகளையும் அடுத்து, நசுனீன் தனது குற்றச்சாட்டுகளைத் திரும்பப்பெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-22. பார்க்கப்பட்ட நாள் 2015-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபெல்_ஒசைன்&oldid=3569874" இலிருந்து மீள்விக்கப்பட்டது