ரோகன் போபண்ணா

ரோகன் போபண்ணா (Rohan Bopanna, கன்னடம்: ರೋಹನ್ ಬೋಪಣ್ಣ, பிறப்பு: 4 மார்ச் 1980) இந்திய டென்னிசு விளையாட்டு வீரர் ஆவார். இரட்டையர் ஆட்டங்களில் இவர் பங்கெடுக்கின்றார். 2024 ஆத்திரேலியத் திறந்த சுற்று இரட்டையர் ஆட்டத்தில் மேத்தியூ எப்டனுடன் இணைந்து விளையாடி தனது முதலாவது பெருவெற்றித் தொடரை வென்றதன் மூலம் இரட்டையர் ஆட்டங்களில் உலகத் தர வரிசையில் 1-ஆம் இடத்தைப் பிடித்தார். தனது 43-ஆவது அகவையில் முதல் தர வரிசையைப் பெற்ற வயதில் கூடிய டென்னிசு ஆட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[4][5] 2010இல், யூ. எசு. ஓப்பனில் ஐசம்-உல்-அக் குரேசியுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் இரண்டாமிடத்தை எட்டினார்.[6] இந்திய டேவிசுக் கோப்பை அணியில் 2002இலிருந்து தொடர்ந்து இடம் பெற்றுள்ளார்.[7]

ரோகன் போபண்ணா
Rohan Bopanna
2019 விம்பிள்டன் போட்டிகளில் போபண்ணா
நாடு இந்தியா
வாழ்விடம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
பிறப்பு4 மார்ச்சு 1980 (1980-03-04) (அகவை 44)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
உயரம்1.93 m (6 அடி 4 அங்) (6 அடி 4 அங்)
தொழில் ஆரம்பம்2003
விளையாட்டுகள்வலக்கை
பரிசுப் பணம்$6,277,586[1][2]
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்15–33 (31.25% ஏடிபி உலகச் சுற்று, பெருவெற்றித் தொடர், டேவிசுக் கோப்பை)
பட்டங்கள்0
அதிகூடிய தரவரிசைஇல. 213 (23 சூலை 2007)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்தெ2 (2006, 2007, 2008)
பிரெஞ்சு ஓப்பன்தெ1 (2006)
விம்பிள்டன்தெ2 (2006)
அமெரிக்க ஓப்பன்தெ2 (2007)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்504–367 (57.86%)[1]
பட்டங்கள்24
அதியுயர் தரவரிசைஇல. 1 (29 சனவரி 2024)[3]
தற்போதைய தரவரிசைஇல. 1 (29 சனவரி 2024)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2024)
பிரெஞ்சு ஓப்பன்அரையிறுதி (2022)
விம்பிள்டன்அரையிறுதி (2013, 2015, 2023)
அமெரிக்க ஓப்பன்இறுதி (2010, 2023)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour Finalsஇறுதி (2012, 2015)
ஒலிம்பிக் போட்டிகள்2R (2012)
கலப்பு இரட்டையர்
சாதனைகள்55–42 (56.7%)
பட்டங்கள்1
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்இறுதி (2018, 2023)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2017)
விம்பிள்டன்காலிறுதி (2011, 2012, 2013, 2017)
அமெரிக்க ஓப்பன்அரையிறுதி (2015)
ஏனைய கலப்பு இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்அரையிறுதி – 4-ஆவது (2016)
அணிப் போட்டிகள்
டேவிசுக் கோப்பை22–27
(ஒற்றையர் 10–17, இரட்டையர் 12–10)
ஒப்மேன் கோப்பை6–6
(ஒற்றையர் 0–6, இரட்டையர் 6–0)
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் டென்னிசு
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 சகார்த்தா இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 ஆங்சூ கலப்பு இரட்டையர்
ஆபிரிக்க-ஆசியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 ஐதராபாது இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 ஐதராபாது அணி
இற்றைப்படுத்தப்பட்டது: 28 சனவரி 2023.

போபண்ணா தமது 11வது அகவையிலேயே விளையாடத் தொடங்கினார். இரட்டையர் ஆட்டங்களில் தமது வாழ்நாளின் மிக உயரிய தரவரிசையெண்ணை சூலை 22, 2013இல் அடைந்தார்; தொழில்முறை டென்னிசு விளையாட்டளர்களின் சங்கம் இவருக்கு தரவெண் 3 வழங்கியது. இவரும் பாக்கிதானிய விளையாட்டாளர் குரேசியும் 2007 இல் இணைந்து பல வெற்றிகளை ஈட்டினர். இதனால் இவர்களுக்கு இந்தோபாக் எக்சுபிரசு என்ற செல்லப்பெயர் ஏற்பட்டது. 2010 இல் இந்த இணையர் விம்பிள்டன் காலிறுதி, யூ.எசு. ஓப்பனில் இரண்டாமிடம், மற்றும் ஐந்து ஏடிபி கோப்பைகளை வென்றனர். ஜோகன்னசுபெர்கு ஓபனையும் வென்றனர். 2010 ஆம் ஆண்டு டேவிசு கோப்பை போட்டியில் இந்தியா பிரேசிலை வெல்வதற்கு போபண்ணா பெரும் பங்காற்றினார். இதனால் 1988க்குப் பிறகு இந்தியா முதன்முறையாக உலக குழு போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.[8]

தொழில் புள்ளிவிபரங்கள் தொகு

ஆண்கள் இரட்டையர் தொகு

சுற்று 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019 2020 2021 2022 2023 2024 SR வெ–தோ
பெருவெற்றித் தொடர்கள்
ஆத்திரேலியத்
திறந்த சுற்று
A A 3R 2R 1R 3R 3R 2R 3R 2R 3R 2R 3R 1R 1R 1R 1R 1R வெ 1 / 17 22–16
பிரெஞ்சு ஓப்பன் A A 1R 1R 2R QF 1R 1R 2R 3R QF 3R QF 3R 1R QF SF 1R 0 / 16 23–16
விம்பிள்டன் Q1 Q1 2R A QF 1R 2R SF 2R SF 3R 2R 2R 1R NH 1R A SF 0 / 13 22–13
அமெரிக்க ஓப்பன் A A 1R A F SF 1R 3R 1R QF 2R 2R QF 3R QF 3R 1R F 0 / 15 29–15
வெற்றி–தோல்வி 0–0 0–0 3–4 1–2 9–4 9–4 3–4 7–4 4–4 10–4 8–4 5–4 9–4 3–4 2–3 4–4 4–3 9–4 6–0 1 / 60 96–60
ஆண்டிறுதி வாகைகள்
ATP இறுதி தெரிவாகவில்லை RR F DNQ F தெரிவாகவில்லை SF 0 / 4 8–8
ஆண்டிறுதித் தரவரிசை 120 66 78 83 16 11 12 13 30 9 28 18 37 38 39 43 19 3 $6,277,586

முக்கிய இறுதிப் போட்டிகள் தொகு

பெருவெற்றித் தொடர் தொகு

இரட்டையர்: 3 (1 பதக்கம்) தொகு

முடிவு ஆண்டு வாகை தரை இணையர் எதிராளிகள் ஆட்ட எண்ணிக்கை
தோல்வி 2010 அமெரிக்கத் திறந்த சுற்று கடினம்   ஐசாம்-உல்-அக் குரேசி   பாப் பிரையன்
  மைக் பிரையன்
6–7(5–7), 6–7(4–7)
தோல்வி 2023 அமெரிக்கத் திறந்த சுற்று கடினம்   மேத்தியூ எப்டென்   ரஜீவ் ராம்
  ஜோ சலிசுபரி
6–2, 3–6, 4–6
வெற்றி 2024 ஆத்திரேலியத் திறந்த சுற்று கடினம்   மேத்தியூ எப்டென்   சிமோன் பெலெலி
  அந்திரேயா வவசோரி
7–6(7–0), 7–5

கலப்பு: 3 (1 பதக்கம்) தொகு

முடிவு ஆண்டு வாகை தரை இணையர் எதிராளிகள் ஆட்ட எண்ணிக்கை
வெற்றி 2017 பிரெஞ்சு ஓப்பன் களிமண்   கேப்ரியேலா தப்ரோவ்சுக்கி   அன்னா-லேனா குரோன்ஃபெல்டு
  இராபர்ட் பாஃரா
2–6, 6–2, [12–10]
தோல்வி 2018 ஆத்திரேலியத் திறந்த சுற்று கடினம்   டிமியா பாபோசு   கேப்ரியேலா தப்ரோவ்சுக்கி
  மத்தே பாவிச்
6–2, 4–6, [9–11]
தோல்வி 2023 ஆத்திரேலியத் திறந்த சுற்று கடினம்   சானியா மிர்சா   லூயிசா இசுடெபனி
  ரஃபாயெல் மாத்தோசு
6–7(2–7), 2–6

ஒலிம்பிக்கு இறுதிப் போட்டிகள் தொகு

கலப்பு இரட்டையர் தொகு

முடிவு ஆண்டு வாகை தரை இணையர் எதிராளிகள் ஆட்ட எண்ணிக்கை
4-ஆம் இடம் 2016 இரியோ டி செனீரோ கடினம்   சானியா மிர்சா   லூசி கிராதிச்கா
  ராதெக் இசுதெப்பானெக்
1–6, 5–7

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Rohan Bopanna". ATP World Tour. Archived from the original on 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  2. "Career prize money" (PDF). Archived (PDF) from the original on 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2023.
  3. "Rankings Doubles" இம் மூலத்தில் இருந்து 30 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221130110128/https://www.atptour.com/en/rankings/doubles. 
  4. "India's Rohan Bopanna on nearing men's doubles No 1 at 43 years old".
  5. "Rohan Bopanna becomes oldest man to win major title at Australian Open". ATP Tour (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  6. "Year by Year". US Open. பார்க்கப்பட்ட நாள் 2011-11-12.
  7. "Scorecards - 2010". Davis Cup. பார்க்கப்பட்ட நாள் 2011-11-12.
  8. "Davis Cup: Somdev, Bopanna lead India to World Group". Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 20 September 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகன்_போபண்ணா&oldid=3878469" இலிருந்து மீள்விக்கப்பட்டது