ரோகில்லாக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ரோகில்லாக்கள் அல்லது ரோகில்லா பதான்கள் (Rohilla Pathans (பஷ்தூ: روهیله, உருது: روہیلہ, இந்தி: रोहिला), அல்லது ரோகில்லா ஆப்கானியர்கள் (Rohilla Afghan), இந்தியாவில் வாழும் உருது மொழி பேசும் ஆப்கானிய பஷ்தூன் மக்கள் ஆவர். இம்மக்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தின் பரேலி மாவட்டம், ஷாஜகான்பூர் மாவட்டம், இராமப்பூர் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர். இம்மக்கள் பஷ்தூ, உருது, இந்தி மொழிகள் பேசுகின்றனர்.

ரோகில்லாக்கள்
மொத்த மக்கள்தொகை
(2 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா ஆப்கானித்தான் பாக்கித்தான் ஐக்கிய அமெரிக்கா கனடா ஆத்திரேலியா மியான்மர் சுரிநாம் கயானா டிரினிடாட் மற்றும் டொபாகோ பிஜி மொரிசியசு தென்னாப்பிரிக்கா.
மொழி(கள்)
போஜ்புரி, அவதி, உருது, பஷ்தூ மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
இசுலாம், இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஷ்தூன் மக்கள் * உத்திரப் பிரதேச பதான்கள் * பிகார் பதான்கள் * பஞ்சாப் பதான்கள் * ராஜஸ்தன் பதான்கள் * குஜராத் பதான்கள்

வரலாறு தொகு

ஆப்கானித்தான் நாட்டு பஷ்தூன் மக்களின் வழித்தோன்றல்களே, இந்தியாவின் ரோகில்லாக்கள் ஆவார்.முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் போது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர், அவத் மற்றும் ரோகில்கண்ட் பகுதிகளில் ஆப்கானிய ரோகில்லா இன மக்கள் குடியேறி கூடுதலாக வாழ்கின்றனர்.[1] [2]

1947 இந்தியப் பிரிவினையின் போது இந்திய ரோகில்லா இன மக்கள், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் கராச்சி நகரத்தில் குடியேறினர்.

மூன்றாம் பானிபட் போரில் ரோகில்லாக்கள் தொகு

மராத்தியப் பேரரசுக்கும், ஆப்கானித்தானின் துராணிப் பேரரசுக்கும் இடையே கிபி 1761ல் பானிபட்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் 40,000 ரோகில்லா படைகள், ஆப்கானிய துராணிப் படைகளுடன் இணைந்து மராத்தியப் படைகளுக்கு எதிராக போரிட்டனர்.[3] போரில் மராத்தியர்கள் தோல்வியடைந்ததால், இந்தியாவில் ரோகில்லா இன மக்களின் அரசியல் செல்வாக்கு கூடியது.

ராம்பூர் இராச்சியத்தை நிறுவுதல் தொகு

 
ராம்பூர் இராச்சியத்தின் கொடி
 
நவாப் முகம்மது கான் பாங்கஷ், 1730

இந்தியாவில் கம்பெனி ஆட்சியினர், ரோக்கில்லாக்கள் ஆண்ட ராம்பூர் இராச்சியத்தை மட்டும் விட்டு விட்டு, ரோகில்கண்ட் பகுதியின் மற்ற அனைத்து இந்திய மன்னராட்சிப் பகுதிகளை, பிரித்தானிய இந்திய அரசில் இணைத்துக் கொண்டனர்.

ராம்பூர் இராச்சிய நவாபுகள் ஆட்சித் தொடக்கம் ஆட்சி முடிவு
1 அலி முகம்மது கான் 1719 15 செப்டம்பர் 1748
2 பைசுல்லா கான் 15 செப்டம்பர் 1748 24 சூலை1793
3 ஹபீஸ் ரகமத் கான் - அரசப் பிரதிநிதி 15 செப்டம்பர் 1748 23 ஏப்ரல்1774
4 முகம்மது அலி கான் பகதூர் 24 சூலை 1793 11 ஆகஸ்டு 1793
5 குலாம் முகமது கான் பகதூர் 11 ஆகஸ்டு 1793 24 அக்டோபர் 1794
6 அகமது அலி கான் பகதூர் 24 அக்டோபர் 1794 5 சூலை 1840
7 நசுருல்லா கான் - அரசப் பிரதிநிதி 24 அக்டோபர் 1794 1811
8 முகமது சையத் கான் பகதூர் 5 சூலை 1840 1 ஏப்ரல் 1855
9 யூசுப் அலி கான் பகதூர் 1 ஏப்ரல் 1855 21 ஏப்ரல் 1865
10 கல்ப் அலி கான் பகதூர் 21 April 1865 23 March 1887
11 முகம்மது முஸ்தாக் அலி கான் பகதூர் 23 March 1887 25 February 1889
12 அமீது அலி கான் பகதூர் 25 பிப்ரவரி 1889 20 சூன் 1930
14 அசிமுத்தின் கான் - அரசப் பிரதிநிதி 25 பிப்ரவரி 1889 4 ஏப்ரல் 1894
15 ராஜா அலி கான் பகதூர் - 1948ல் ராம்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 20 சூன் 1930 6 மார்ச் 1966

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 தொகு

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857ன் போது, கான் பகதூர் கான் தலைமையில் ஆப்கானிய ரோகில்லா பஷ்தூன் படைவீரர்கள், கிழக்கிந்திய கம்பெனிப் படைகளுக்கு எதிராக போராடினர்கள்.[4] சிப்பாய் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தால், பல ரோகில்லா படைவீரர்கள், சுரினாம், குயானா போன்ற இந்தோ-கரிபியன் தீவுகளுக்கு நாடு கடததப்பட்டனர்.[4]

1857 -1947களுக்கு இடையில் ரோகில்லாக்கள் தொகு

தற்காலத்தில் ரோகில்லா மக்கள், வட இந்தியாவில் பல பிரதேசங்களில் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக உத்திரப் பிரதேச பதான்கள், பிகார் பதான்கள், பஞ்சாப் பதான்கள், ராஜஸ்தன் பதான்கள், குஜராத் பதான்கள், கராச்சி பதான்கள் எனப் பல பிரிவினர்களாக பரவி வாழ்கின்றனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Pathans of Uttar Pradesh
  2. People of India Uttar Pradesh Volume XLII Part Three edited by A Hasan & J C Das page 1139 to 1141 Manohar Publications
  3. Ahmad Shah Abdali (died 1772) adopted the title of Durr-i Dowran (pearl of pearls), which gave the name to the dynasty he established, the Durrani, which lasted in Afghanistan until 1973
  4. 4.0 4.1 HISTORY OF MY PEOPLE: The Afghan Muslims of Guyana பரணிடப்பட்டது 12 மார்ச்சு 2013 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க தொகு

  • Gulistán-I Rahmat of Nawáb Mustajáb Khán.
  • Hastings and the Rohilla War by John Strachey. Author(s) of Review: Sidney James Owen The English Historical Review, Vol. 8, No. 30 (Apr., 1893), pp. 373–380

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகில்லாக்கள்&oldid=3190939" இலிருந்து மீள்விக்கப்பட்டது