ரோடியம்(II) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

ரோடியம்(II) அசிட்டேட்டு (Rhodium(II) acetate) என்பது Rh2(AcO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். மூலக்கூறு வாய்ப்பாட்டிலுள்ள AcO− என்பது அசிட்டேட்டு (CH3CO−2) அயனியை குறிக்கிறது. அடர்பச்சை நிறத்தில் தூளாக உள்ள இச்சேர்மம் நீர் உட்பட முனைவுக் கரைப்பான்களில் இலேசாகக் கரைகிறது. ஆல்க்கீன்களை வளையபுரோப்பேனாக்கும் வினைகளில் ரோடியம்(II) அசிட்டேட்டு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது. டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு,டெட்ராகிசு(அசிட்டேட்டோ)டைரோடியம்(II),ரோடியம் டையசிட்டேட்டு இருபடி,டெட்ராகிசு(μ-அசிட்டேட்டோ)டைரோடியம் போன்ற பெயர்களாலும் ரோடியம் (II) அசிட்டேட்டு அழைக்கப்படுகிறது.

ரோடியம்(II) அசிட்டேட்டு
Rhodium(II) acetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ரோடியம்(II) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு,
டெட்ராகிசு(அசிட்டேட்டோ)டைரோடியம்(II),
ரோடியம் டையசிட்டேட்டு இருபடி,
டெட்ராகிசு(μ-அசிட்டேட்டோ)டைரோடியம்
இனங்காட்டிகள்
15956-28-2 Y
ChemSpider 20370 Y
EC number 240-084-8
InChI
  • InChI=1S/2C2H4O2.Rh/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2 Y
    Key: ITDJKCJYYAQMRO-UHFFFAOYSA-L Y
  • InChI=1S/4C2H4O2.2Rh/c4*1-2(3)4;;/h4*1H3,(H,3,4);;/q;;;;2*+2/p-4
    Key: : SYBXSZMNKDOUCA-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 152122
வே.ந.வி.ப எண் VI9361000
SMILES
  • [OH2+][Rh-3]1234#[Rh-3]([OH2+])([o+]c(C)o1)([o+]c(C)o2)(oc(C)[o+]3)oc(C)[o+]4
பண்புகள்
C8H12O8Rh2
வாய்ப்பாட்டு எடை 441.99 கி/மோல்
தோற்றம் மரகதப் பச்சை தூள்
அடர்த்தி 1.126 கி/செ.மீ3
உருகுநிலை >100 °செல்சியசு
கொதிநிலை சிதைவடையும்
கரையும்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் முனைவு கரிமக் கரைப்பான்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைசாய்வு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Coleparmer MSDS
R-சொற்றொடர்கள் 36/38
S-சொற்றொடர்கள் 15, 26, 28A, 37/39
தீப்பற்றும் வெப்பநிலை குறைவாக தீப்பற்றும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

ரோடியம்(II) அசிடேட்டு பொதுவாக அசிட்டிக் அமிலத்தில் (CH 3 COOH) உள்ள நீரேற்ற ரோடியம்(III) குளோரைடை வெப்பப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது :[1]. ரோடியம்(II) அசிடேட்டு இருமம் ஈந்தணைவி பரிமாற்றத்திற்கு உட்படுகிறது, அசிடேட்டு குழுவை மற்ற கார்பாக்சிலேட்டுகள் மற்றும் தொடர்புடைய குழுக்கள் இடம் மாற்றுகின்றன [2]

Rh2(OAc)4 + 4 HO2CR → Rh2(O2CR)4 + 4 HOAc.

கட்டமைப்பு தொகு

ரோடியம்(II) அசிடேட்டின் கட்டமைப்பில் ஒரு சோடி ரோடியம் அணுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் எண்முக மூலக்கூற்று வடிவத்திலுள்ளன. நான்கு அசிடேட்டு ஆக்சிசன் அணுக்கள், நீர் மற்றும் ஒரு 2.39 ஆங்சிட்ராங் நீளமுள்ள Rh-Rh பிணைப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளன. . நீர் சேர்க்கை பரிமாற்றம் செய்யக்கூடியது, மேலும் பலவிதமான பிற லூயிசு தளங்கள் அச்சு நிலைகளுடன் பிணைக்கப்படுகின்றன[3]. தாமிரம்(II) அசிடேட் டு மற்றும் குரோமியம்(II) அசிடேட் டு சேர்மங்கள் இதே போன்ற கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன.

வேதிப்பண்புகள் தொகு

கொதிநிலை வெப்பநிலையில் இச்சேர்மம் சிதைவடைகிறது. கரிமத் தொகுப்பு வினைகளுக்கு டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு பயன்பாட்டை வெளிப்படுத்திய முன்னோடிகளாக டெய்சி மற்றும் சக ஊழியர்கள் திகழ்ந்தனர். வேதிப் பிணைப்புகளில் செருகல் மற்றும் ஆல்கீன்களின் வளைய புரோப்பேனேற்றம் [4][5] மற்றும் அரோமாட்டிக் அமைப்புகள் உள்ளிட்டவை விரிவாக ஆராயப்படும் வினைகள் ஆகும்[6]. தெரிவு செய்யப்பட்ட ரிபோநியூக்ளியோசைடுகளை அவற்றினுடைய 2 மற்றும் 3 –OH குழுக்களில் பிணைப்பதில் இச்சேர்மம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரோடியம்(II) அசிட்டேட்டு இருபடி தாமிரம்(II) அசிட்டேட்டுடன் ஒப்பிடுகையில் அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது. மேலும் ரிபோநியூக்ளியோசைடுகளிலிருந்து டியாக்சிநியூக்ளியோசைடுகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கு இச்சேர்மம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது[7]. ஏனெனில் ரோடியம்(II) அசிட்டேட்டு நீர் போன்ற சேர்மம் கலந்த நீரிய கரைசல்களில் கரைகிறது. ஆனால் தாமிரம்(II) அசிட்டேட்டு நீர் கலக்காத கரைசல்களில் மட்டும் கரைகிறது.

தெரிவு செய்யப்பட்ட வினையூக்க வினைகள் தொகு

டைரோடியம் டெட்ரா அசிட்டேட்டு ஒரு வினையூக்கியாகவும் பயன்படுகிறது. இதனால் C–H மற்றும் X–H பிணைப்புகளை செருகி சேர்க்கப்படுகிறது. (X = N, S, O).

வளையபுரோப்பேனேற்றம் தொகு

 
டையசோ கார்பனைல் சேர்மங்கள் சிதைவடைதல் வழியாக வளையபுரோப்பேற்றம் நிகழ்கிறது.

அரோமாட்டிக் வளையக் கூட்டு தொகு

 
இரண்டு பகுதிக்கூறு மற்றும் மூன்று பகுதிக்கூறு வினைகளையும் ரோடியம் அசிட்டேட்டு வினையூக்குகிறது.

C–H செருகல் தொகு

 
Rh(II)-வினையூக்கி பல்வேறு கரிமச் சேர்மங்கள் உருவாதலுக்கு காரனமான C–H பிணைப்புகளை செருக பயனுள்ளதாக உள்ளது. .

ஆல்ககால்களின் ஆக்சிசனேற்றம் தொகு

 
அல்லைலிக் மற்றும் பென்சைலிக் ஆல்ககால்கள் தொடர்புடைய கார்பனைல் சேர்மங்களாக ஆக்சிசனேற்றப்படுகின்றன. இவ்வினையில் வினையூக்கியாக Rh2(OAc)4 பயன்படுகிறது.

X–H செருகல் (X = N, S, O) தொகு

 
Rh(II) கார்பினாய்டு அமீன்கள், ஆல்ககால்கள், அல்லது தயோல்கள் ஆகியவற்றுடன் வினைபுரிந்து முறையான மூலக்கூறு அல்லது மூலக்கூற்றிடை X–H பிணைப்பை உருவாக்குகிறது.(X = N, S, O) செருகல் இடைநிலைப் பொருள் உருவாதல் வழியாக நிகழ்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Rempel, G. A.; Legzdins, P.; Smith, H.; Wilkinson, G. (1972). "Tetrakis(acetato)dirhodium(II) and Similar Carboxylato Compounds". Inorg. Synth.. Inorganic Syntheses 13: 90–91. doi:10.1002/9780470132449.ch16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132449. 
  2. Doyle, M. P. (2000). "Asymmetric Addition and Insertion Reactions of Catalytically-Generated Metal Carbenes". in Ojima, Iwao. Catalytic Asymmetric Synthesis (2nd ). New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-29805-2. https://archive.org/details/catalyticasymmet0000unse. 
  3. Cotton, F. A.; Deboer, B. G.; Laprade, M. D.; Pipal, J. R.; Ucko, D. A. (1971). "The crystal and molecular structures of dichromium tetraacetate dihydrate and dirhodium tetraacetate dihydrate". Acta Crystallogr B 27 (8): 1664. doi:10.1107/S0567740871004527. 
  4. Paulissen, R.; Reimlinger, H.; Hayez, E.; Hubert, A. J.; Teyssié, P. (1973). "Transition metal catalysed reactions of diazocompounds. II: Insertion in the hydroxylic bond". Tetrahedron Lett. 14 (24): 2233. doi:10.1016/S0040-4039(01)87603-6. 
  5. Hubert, A. J.; Feron, A.; Warin, R.; Teyssie, P. (1976). "Synthesis of iminoaziridines from carbodiimides and diazoesters : A new example of transition metal salt catalysed reactions of carbenes". Tetrahedron Lett. 17 (16): 1317. doi:10.1016/S0040-4039(00)78050-6. 
  6. Anciaux, A. J.; Demonceau, A.; Hubert, A. J.; Noels, A. F.; Petiniot, N.; Teyssié, P. (1980). "Catalytic control of reactions of dipoles and carbenes; an easy and efficient synthesis of cycloheptatrienes from aromatic compounds by an extension of Buchner's reaction". J. Chem. Soc., Chem. Commun. (16): 765–766. doi:10.1039/C39800000765. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society-chemical-communications_1980_16/page/765. 
  7. Berger, N. A.; Tarien, E.; Eichhorn, G. L. (1972). "Stereoselective Differentiation between Ribonucleosides and Deoxynucleosides by Reaction with the Copper(II) Acetate Dimer". Nature New Biology 239 (95): 237–40. doi:10.1038/newbio239237a0. பப்மெட்:4538853. http://www.nature.com/nature-newbio/journal/v239/n95/abs/newbio239237a0.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்(II)_அசிட்டேட்டு&oldid=3849779" இலிருந்து மீள்விக்கப்பட்டது