லாரியன் வெள்ளி சுரங்கங்கள்

கிரேக்கச் சுரங்கம்

லாரியன் சுரங்கங்கள் (mines of Laurion or Lavrion)[1] என்பது கிரேக்கத்தில், ஏதென்சின் மையத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தெற்கே தெற்கு அட்டிகாவில் தோரிகஸ் மற்றும் சௌனியன் முனை ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள பண்டைய சுரங்கங்கள் ஆகும். இந்தச் சுரங்கங்கள் வெள்ளியை உற்பத்தி செய்ததில் மிகவும் பிரபலமானவை. ஆனால் இவை செப்பு மற்றும் ஈயம் கிடைக்கும் இடமாகவும் இருந்தன. இந்த சுரங்கங்களின் பல எச்சங்கள் இன்னும் இப்பகுதியில் உள்ளன.

இச்சுரங்கங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தாமிரம், கலீனா, ஈயத் தாது ஆகியவை அகழப்படும் இடமாக இருந்தது. [1] பாரம்பரிய காலத்தில், இப்பகுதியில் சுரங்கம் மீண்டும் தொடங்கியது. ஏதெனியர்கள் பெருமளவிலான அடிமைகளை சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்தினர். இங்கு எடுக்கப்பட்ட வெள்ளி நகரத்தின் செல்வ வளத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது. [1] கிமு முதல் நூற்றாண்டில் கைவிடப்பட்ட சுரங்கங்கள் 1864 இல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுக்கு வந்தன 1978 வரை பிரெஞ்சு மற்றும் கிரேக்க நிறுவனங்களால் வெட்டப்பட்டன.

தெற்கு அட்டிகாவின் வரைபடம், லாரியனில் உள்ள சுரங்கங்களின் இருப்பிடங்களைக் காட்டுகிறது.
லாரியன் சுரங்கத்தில் சலவை மேசை
லாரியன் சுரங்கப் பகுதியில் உள்ள பல சுரங்க இடங்களைக் கொண்ட தோரிகோசில் அமைந்துள்ள ஒரு சுரங்கப் பாதை.

வரலாறு தொகு

பண்டைய காலம் தொகு

கிமு 354 இல் அவரது வேஸ் அண்ட் மீன்ஸ் என்ற படைப்பில் வெள்ளி சுரங்கங்களைப் பற்றி செனபோன் எழுதியுள்ளார்: [2]

இந்த சுரங்கங்கள் மிக நீண்ட காலமாக செயல்பாட்டில் உள்ளன என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. எந்த வகையிலும், இங்கு முதலில் வேலை துவங்கப்பட்ட காலத்தை நிர்ணயிக்க யாராலும் முடியாது.

உண்மையில், சுரங்க அகழ்வு வெண்கலக் காலத்திலிருந்து தொடர்கிறது: இந்த சகாப்தத்தின் பொருட்களில் இருக்கும் ஈயத்தின் ஐசோடோபிக் பகுப்பாய்வுகள், அவை லாரியன் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட உலோகத்திலிருந்து பெருமளவில் செய்யப்பட்டன என்பதைக் குறிக்கிறது. [3]

லாரியனில் சுரங்கப் பணிகளுக்கான ஆரம்ப சான்றுகள் கிமு 3200 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் இருந்து வருகிறது [4] கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து சுரங்கம் மிகவும் குறிப்படத்தக அளவில் தொடங்கியது. ஐந்தாம் நூற்றாண்டில் இது ஏதென்சுக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தது. [5] முன்னர் மேற்பரப்பில் உலோகங்கள் எடுக்கப்பட்டது போல்லலாமல் இந்த காலகட்டத்தில், குறிப்பாக ஆழமான சுரங்கங்கள் கொண்டு அகழத் தொடங்கினர். [6]பிசிசுட்ரேடசுவின் சர்வாதிகார ஆட்சியின் போது ஏதென்சின் கனிம வளங்கள் முறையாக அகழ்வது தொடங்கப்பட்டது. அங்கு அடிமைகள், சங்கிலியால் பிணைக்கப்பட்டு, நிர்வாணமாக முத்திரை குத்தப்பட்டவர்களாக இருந்தனர். எண்ணெய் விளக்குகளின் ஒளியைக் கொண்டு சுரங்கங்களின் உள்ளளே வேலை செய்தனர்.  பதிவு செய்யப்படாத எண்ணிக்கையில் குழந்தைகளும் பணியில் இருந்தனர். இது ஒரு பரிதாபகரமான, ஆபத்தான மற்றும் குறுகிய கால வாழ்க்கையாக இருந்தது.

இந்த சுரங்கங்களின் கண்டுபிடிப்பினால் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் தொடக்கத்தில், ஏதெனிய அரசு 3,000 டன் வெள்ளியை தன்வசம் வைத்திருந்தது. [6] ஏதென்சுன் குடிமக்களிடையே இந்தச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, 200 கப்பல்களைக் கட்டுவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தெமிஸ்ட்டோக்ளீஸ் முன்மொழிந்தார். இது கிமு 480 இல் சலாமிஸ் போரில் பாரசீகத்துக்கு எதிரான கடற்படை போர்த்தொடரை நடத்தி வெற்றியை ஈட்ட பயன்படுத்தப்பட்டது. [6] ஈயம், பாதரசம், இங்குலிகம், சிவப்பு சுண்ணாம்பு, காவிக்கல் ஆகியவை வெள்ளிச் சுரங்கத்தில் துணைப் பொருட்களாக கிடைத்தன. அவை இன்னும் நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருந்தன. [7] கிமு 479 இல் பாரசீகர்கள் ஏதென்சை விட்டு வெளியேறிய பிறகு, நகரத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டியிருந்தது. [8] அடுத்த நூற்றாண்டில் ஏதென்சின் பெரிய மறுகட்டமைப்பிற்கு உதவும் எண்ணற்ற பல்வேறு நீர் பகிர்மான குழாய்கள் மற்றும் நிறுத்தத் திருகுகளை உருவாக்க சுரங்கங்களில் இருந்து ஈயம் கொண்டு வரப்பட்டது. [7]

பெலோபொன்னேசியப் போரின் விளைவாக (கிமு 431-404) குடிமக்கள், அடிமைகள் போன்றோரின் இழப்பு போன்றவற்றால் ஏற்பட்ட ஆட்கள் இழப்பால் சுரங்கங்கள் மூடப்பட்டன. இது ஏதென்சின் பொருளாதார நெருக்கடியையும், பிரேயஸ் துறைமுகத்தின் உள்கட்டமைப்பில் சேதத்தையும் கூட்டியது. [9]

நவீன காலத்தில் தொகு

லாரியனில் சுரங்கங்கம் 1864 இல் மீண்டும் தொடங்கியது. புதுப்பிக்கப்பட்ட சுரங்கமானது மீதமுள்ள ஈயம் மற்றும் வெள்ளிக்கான பண்டைய கசடுகளை பதப்படுத்துதல் மற்றும் புதிய தாதுக்களை பிரித்தெடுத்தல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருந்தது. நவீன காலத்தில் லாரியன் பகுதியில் துத்தநாகத் தாது சுரங்கம் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இது 1864 இல் மீண்டும் செயல்படுத்தப்பட்டதிலிருந்து 1930 வரை வெட்டப்பட்டது. 1950 களில் இரும்புத் தாதுவும் வெட்டப்பட்டது. 1978 இல் இலாபகரமான சல்பைட் இருப்பு தீரும் வரை வெள்ளி மற்றும் பிற உலோகங்களை அகழ்ந்தபடி சுரங்கங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தன. [10] .

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Sakoulas, Thomas. "Lavrion Ancient Silver Mines". ancient-greece.org.Sakoulas, Thomas. "Lavrion Ancient Silver Mines". ancient-greece.org.
  2. Xenophon, On Revenues
  3. Stos-Gale, Z. A.; Gale, N. H. (1982). "The Sources of Mycenaean Silver and Lead". Journal of Field Archaeology 9 (4): 467–485. https://archive.org/details/sim_journal-of-field-archaeology_winter-1982_9_4/page/467. 
  4. "Il y a près de 5 000 ans, l'exploitation de l'argent sur les rives de la mer Égée".
  5. Wood, J. R.; Hsu, Y-T.; Bell, C. (2021). "Sending Laurion Back to the Future: Bronze Age Silver and the Source of Confusion". Internet Archaeology 56 (9). doi:10.11141/ia.56.9. 
  6. 6.0 6.1 6.2 Bressan, David. "How The Mines Of Laurion Saved Ancient Greece And Made Western Civilization Possible". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.Bressan, David. "How The Mines Of Laurion Saved Ancient Greece And Made Western Civilization Possible". Forbes. Retrieved 2020-10-26.
  7. 7.0 7.1 Kampmann, Ursula (13 October 2009). "The Laurion silver | CoinsWeekly" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  8. Bressan, David. "How The Mines Of Laurion Saved Ancient Greece And Made Western Civilization Possible". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
  9. Carugati, Federica (2020). "Democratic Stability: A Long View". Annual Review of Political Science 23: 59–75. doi:10.1146/annurev-polisci-052918-012050. 
  10. Skarpelis, Nikos; Argyraki, Ariadne (2009). "Geology and Origin of Supergene Ore at the Lavrion Pb-Ag-Zn Deposit, Attica, Greece". Resource Geology 59 (1): 1–14. doi:10.1111/j.1751-3928.2008.00076.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1344-1698.