லிமாசோல் (Limassol, கிரேக்க மொழி: Λεμεσός; துருக்கியம்: Limasol அல்லது Leymosun) is a city on the southern coast of சைப்பிரசின் தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இது சைப்பிரசின் மிகப்பெரும் நகரங்களில் இரண்டாவதாக உள்ளது. நகரிய மக்கள்தொகை 160,000-176,700 ஆகும்.[1][2] 2011 கணக்கெடுப்பின்படி 101,000 மக்கள் வாழும் லிமாசோல் நகராட்சி நாட்டின் மிகப்பெரும் நகராட்சியாகும். [3]

லிமாசோல்
Λεμεσός / Limasol
Skyline of லிமாசோல்
நாடு சைப்பிரசு
மாவட்டம்லிமாசோல் மாவட்டம்
அரசு
 • மேயர்ஆந்திரியாசு கிறிஸ்தூ (உ.ம.மு.க)
பரப்பளவு
 • நகரம்34.87 km2 (13.46 sq mi)
மக்கள்தொகை (2011)
 • நகரம்1,01,000[3]
 • நகர்ப்புறம்1,60,000−1,76,700[1][2]
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு3010–3150
இணையதளம்www.limassolmunicipal.com.cy

சைப்பிரசின் மிகப்பெரும் துறைமுகமான லிமாசோல் துறைமுகம் நடுநிலக் கடல் பகுதியில் மிகுந்த போக்குவரத்துள்ள துறைமுகமாகவும் விளங்குகின்றது. தவிரவும் சுற்றுலா, வணிகம், சேவை மையங்கள் முதன்மையாக உள்ளன. ஆழமான பண்பாட்டு வழக்கங்களுக்காகவும் லிமாசோல் அறியப்படுகின்றது. இங்கு சைப்பிரசு தொழினுட்பப் பல்கலைகழகம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு இங்குள்ள பல அருங்காட்சியகங்களும் தொல்லியல் களங்களும் விருந்தாக உள்ளன. பழைய நகரத்தின் அண்மையில் கடற்கரை உள்ளது. அங்கிருந்து 500 மீட்டர்கள் (1,600 அடிகள்) தொலைவில் பண்டைக்கால கோட்டை உள்ளது.

இரண்டு பண்டைய நகரங்கள், அமாத்துசு,கூரியன் இடையே கட்டப்பட்டுள்ளது; பைசாந்திய ஆட்சியில் இது நியாபோலிசு (புது நகரம்) என்று அழைக்கப்பட்டது. லிமாசோல் கோட்டை மற்றும் பழைய நகரத்தைச் சுற்றிலும் லிமாசோலின் வரலாற்று மையம் உள்ளது. இன்று நகரம் நடுநிலக் கடலோரத்தில் பரவியுள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் பிரித்தானிய கடல்கடந்த ஆட்புலமான அக்ரோத்திரி அமைந்துள்ளது.

மெர்சரின் வாழ்நிலைத் தர கருத்துக் கணிப்பில் உலகளவில் பிராத்திஸ்லாவாவிற்கும் தாலினுக்கும் இடையே 87வது இடத்தில் உள்ளது.[4]

ஒளிப்படத் தொகுப்பு தொகு


மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 World Urban Areas - Demographia, 2013
  2. 2.0 2.1 "Intercultural city: Limassol, Cyprus". Council of Europe.
  3. 3.0 3.1 Population Census - Key Figures பரணிடப்பட்டது 2018-06-12 at the வந்தவழி இயந்திரம் - Statistical Service of Cyprus
  4. "2012 Quality Of Living Worldwide City Rankings –Survey" (PDF), International HR Adviser, no. 52 (Winter 2012), pp. 33–36, archived from the original (PDF) on 2013-12-03, பார்க்கப்பட்ட நாள் 2016-03-30 {{citation}}: C1 control character in |title= at position 48 (help)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லிமாசோல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமாசோல்&oldid=3352042" இலிருந்து மீள்விக்கப்பட்டது