லிவர்மோர், கலிபோர்னியா

லிவர்மோர் என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், அலமேடா கவுன்டியில் அமைந்திருக்கும் ஒரு நகரம் ஆகும்.

லிவர்மோர், கலிபோர்னியா

இது சான்பிரான்சிசுகோ வளைகுடா பகுதிக்கு கிழக்கே உள்ளது. 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி  86870 பேர் இந்நகரில் வாழ்கிறார்கள். 

அரசுப்பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகள், பீனிக்ஸ் பல்கலைக்கழகம்[1] எனப் பல கல்வி நிலையங்கள் உள்ளன. அறிவியல் துறை ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஹெர்ட்ஸ் பவுண்டேசன் இந்த ஊரில் உள்ளது. எல். எல் .என்.எல். எனப்படும் லாரன்சு லிவர்மோர் நேசனல் லபாரட்டரியை   1952 இல் அரசு தோற்றுவித்தது. இந்த ஆய்வுக் கூடம் அணு ஆய்வுகளை மேற்கொண்டு நடத்தி வருகிறது.

நூற்றாண்டு விளக்கு என்று அழைக்கப்படுகிற 4 வாட் மின் விளக்கு 1901 ஆம் ஆண்டு முதல் அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கும் விளக்கு லிவர்மோரில் இருப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தி இண்டிபென்டென்ட் என்னும் ஒரு செய்தி நாளிதழ் லிவர்மோரிலிருந்து வெளிவருகிறது.[2]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவர்மோர்,_கலிபோர்னியா&oldid=2360741" இலிருந்து மீள்விக்கப்பட்டது