லூக்கா மோத்ரிச்

குரோஷியன் கால்பந்து வீரர்

லூக்கா மோத்ரிச் (Luka Modrić[3][4] பிறப்பு 9 செப்டம்பர் 1985) குரோவாசிய தொழில்முறை கால்பந்து விளையாட்டாளர். எசுப்பானியக் கழகமான ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் மோத்ரிச் குரோவாசியா தேசிய அணியின் அணித்தலைவராவார்.[5] மோத்ரிச் முதன்மையாக நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)#நடுக்கள வீரர்; இருப்பினும் தாக்கும் நடுக்களத்தினராகவோ காப்பு நடுக்களத்தினராகவோ, அல்லது பின்னாலிருந்து ஆட்டத்தை நிர்ணயிப்பவராகவோ விளையாடுகின்றார்.[6] மோத்ரிச் உலகளவில் மிகச்சிறந்த நடுக்கள விளையாட்டாளர்களில் ஒருவராக பரவலாக ஏற்கப்படுகிறார்.

லூக்கா மோத்ரிச்
Luka Modrić

2018 உலகக் கோப்பையின்போது குரோவாசியா அணியில் லூக்கா மோத்ரிச்
சுய தகவல்கள்
முழுப் பெயர்லூக்கா மோத்ரிச்[1]
பிறந்த நாள்9 செப்டம்பர் 1985 (1985-09-09) (அகவை 38)[1]
பிறந்த இடம்சதர், யுகோசுலேவிய சோசலிச கூட்டுக் குடியரசு
உயரம்1.72 மீ[2]
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ரியல் மாத்ரிட்
எண்10
இளநிலை வாழ்வழி
1996–2001சதர்
2002–2003டைனமோ சாக்ரெப்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2003–2008டைனமோ சாக்ரெப்94(26)
2003–2004→ சிரின்சுக்கி (கடன்)22(8)
2004–2005→ இன்டர் சாப்ரெசிக் (கடன்)18(4)
2008–2012டொட்டேன்ஹாம் ஆட்சுபர்127(13)
2012–ரியல் மாட்ரிட்166(9)
பன்னாட்டு வாழ்வழி
2001குரோவாசியா U152(0)
2001குரோவாசியா U172(0)
2003குரோவாசியா U187(0)
2003–2004குரோவாசியா U1911(2)
2004–2005குரோவாசியா U2114(2)
2006–குரோவாசியா108(14)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 19 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 21 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

கழக ஆட்டங்கள் தொகு

சதர் நகரில் பிறந்த மோத்ரிச் 2002இல் டைனமோ சாக்ரெப் கழகத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சாக்ரெபில் தொடர்ந்து முன்னேறிவந்த மோத்ரிச் 2005இல் தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று லீக் கோப்பைகளை வென்று 2007ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டாளர் பட்டம் வென்றார். 2008இல் ஆங்கில பிரீமியர் லீக் கழகமான டொட்டான்காம் ஆட்சுபரில் இணைந்தார். அவ்வணி 50 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு 2010–11 போட்டியில் காலிறுதி எட்ட பெரிதும் உதவியாக இருந்தார்.[7][8]

2011–12 பருவத்திற்குப் பிறகு டொட்டானகாம் ஆட்சுபரிலிருந்து விலகி ரியல் மாட்ரிட் அணிக்கு £30 மில்லியன் கட்டணத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[9] Modrić signed a five-year contract with the Spanish club.[9] அங்கு பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி மேற்பார்வையில் தன் திறனை வளர்த்துக்கொண்டு தங்கள் அணி லா டெசிமா வெல்லவும் 2013–14 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவின் பருவத்தின் சிறந்த அணி விருது பெறவும் பங்களித்தார். 2016 முதல் 2018 வரை மூன்று வாகையர் கூட்டிணைவு வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். இந்த மூன்று ஆண்டுகளிலுமே பருவத்தின் சிறந்த அணி விருதையும் 2016இல் லா லீகாவின் "சிறந்த நடுக்கள வீரர்" விருதையும் வென்றார். 2017இல் யூஈஎஃப்ஏ வழங்கும் சிறந்த நடுக்கள வீரர் விருது பெற்றார்.

பன்னாட்டுப் போட்டிகள் தொகு

மோத்ரிச் குரோவாசியாவிற்காக முதன்முதலில் மார்ச் 2006இல் அர்கெந்தீனாவிற்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார்.[7] அது முதல் குரோவாசியா பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் ஆடி வருகிறார். 2006, 2014, மற்றும் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தனது முதல் பன்னாட்டு போட்டி கோலை இத்தாலிக்கு எதிராக அடித்துள்ளார். யூஈஎஃப்ஏ ஐரோ 2008இல் போட்டியின் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பெருமைபெற்ற இரண்டாவது குரோவாசியர் இவராவார்.[10]

21 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி
குரோவாசியா தேசிய அணி[11]
ஆண்டு தோற்றங்கள் கோல்கள்
2006 12 2
2007 10 1
2008 11 3
2009 3 1
2010 8 0
2011 9 1
2012 9 0
2013 10 0
2014 11 2
2015 4 0
2016 8 1
2017 8 1
2018 5 2
மொத்தம் 108 14

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Hugman, Barry J., தொகுப்பாசிரியர் (2010). The PFA Footballers' Who's Who 2010–11. Mainstream Publishing. பக். 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84596-601-0. https://archive.org/details/pfafootballerswh0000unse_v9b9. 
  2. "Player Profile". realmadrid.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
  3. "Lȗka". Hrvatski jezični portal (in செர்போ-குரோஷியன்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2018. Lȗka
  4. "mȍdar". Hrvatski jezični portal (in செர்போ-குரோஷியன்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2018. Módrić
  5. "Luka Modrić named as new Croatia captain". Croatia Week. பார்க்கப்பட்ட நாள் 28 August 2016.
  6. Jonathan Wilson (writer) (27 May 2016). "Luka Modric: The elegant maestro dictating from deep". Eurosport. http://www.eurosport.com/football/champions-league/2015-2016/luka-modric-the-elegant-maestro-dictating-from-deep_sto5611605/story.shtml. பார்த்த நாள்: 15 July 2017. 
  7. 7.0 7.1 Justin Sherman (9 October 2017). "The making of Luka Modrić from war-torn Croatia to the world's best midfielder". These Football Times. https://thesefootballtimes.co/2017/10/09/the-making-of-luka-modric-from-war-torn-croatia-to-the-worlds-best-midfielder/. பார்த்த நாள்: 20 October 2017. 
  8. "Redknapp thrilled as Tottenham reach Champions League". BBC.co.uk. 6 May 2010.
  9. 9.0 9.1 "Luka Modric: Real Madrid sign midfielder from Tottenham". BBC. 27 August 2012. https://www.bbc.co.uk/sport/0/football/19389191. பார்த்த நாள்: 27 August 2012. 
  10. "EURO 2008 team of the tournament". 16 May 2016. 
  11. "Luka Modric". National Football Teams. Benjamin Strack-Zimmerman. பார்க்கப்பட்ட நாள் 14 August 2008. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்கா_மோத்ரிச்&oldid=3739714" இலிருந்து மீள்விக்கப்பட்டது