லூனா-2 (Luna 2 அல்லது E-1A தொடர்) நிலாவை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் இரண்டாவது விண்கலமாகும். இதுவே நிலவில் தரையிறங்கிய முதலாவது விண்கலமாகும். செப்டம்பர் 13, 1959 அன்று நிலவின் மேற்பரப்பில் மாரே இம்பிரியம் எனப் பெயரிடப்பட்டுள்ள பகுதிக்கு கிழக்கே ஆர்க்கிமிடீஸ், ஆட்டோலைகஸ் பெருவாய்கள் அருகே மோதியது.[1]

லூனா 1 போன்றே வடிவமைக்கப்பட்ட லூனா 2 அலைவாங்கிகள் நீட்டிக்கொண்டிருக்கும் ஓர் கோள வடிவ விண்கலமாகும். இதன் அளவியல் கருவிகளும் லூனா 1ஐப் போன்றே ஒளிர் மின் எண்ணிகள், கைகர் துகள் அளவிகள், ஓர் காந்த ஆற்றல் மானி, செரன்கோவ் உணரிகள், மற்றும் நுண்விண்கற்கள் உணரிகளைக் கொண்டிருந்தன. லூனா 2 வில் உந்துகை அமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Luna 2". NASA - NSSDC.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூனா_2&oldid=3788005" இலிருந்து மீள்விக்கப்பட்டது