லென் அட்டன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

லென் அட்டன் (Len Hutton,12.06.1903, யோர்க்சயர், இங்கிலாந்து - (06.09.1990) முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இங்கிலாந்து அணி சார்பாக 1937 இல் நியூசிலாந்துக்கு எதிராக தன் முதல் ரெஸ்ட் போட்டியை லோர்ட்ஸ் ஆடுகளத்தில் விளையாடிய அட்டன் பெற்ற ஓட்டங்கள் வெறும் 0 மற்றும் 1. அடுத்த போட்டியில் தன் முதல் சத்தைப் பெற்றார். அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 1938 இல் ஓவல் மைதானத்தில் டொன் பிரட்மன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 13 மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 364 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தில் ஆடிய அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 579 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ரெஸ்ட் வரலாற்றில் இன்று வரை மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.

லென் ஹட்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லென் ஹட்டன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 603)சூன் 26 1937 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 25 1955 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 79 513
ஓட்டங்கள் 6971 40140
மட்டையாட்ட சராசரி 56.67 55.51
100கள்/50கள் 19/33 129/179
அதியுயர் ஓட்டம் 364 364
வீசிய பந்துகள் 260 9740
வீழ்த்தல்கள் 3 173
பந்துவீச்சு சராசரி 77.33 29.51
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 1/2 6/76
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
57/– 401/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com, ஆகத்து 14 2007

போரில் காயம் தொகு

இரண்டாம் உலக யுத்த காலத்தில் அட்டன் காயமடைந்தார். சத்திரசிகிச்சை காரணமாக அவரது இடது கை வலது கையை விடச் சற்றுக் கட்டையானதாகியது. ஆயினும் போர் முடிந்தபின் அட்டன் மீண்டும் விளையாடத் தொடங்கினார். 1950 இல் ஓவல் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளிற்கெதிராக ஆட்டமிழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்றார். 1952 இல் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்ற போது அட்டன் இங்கிலாந்து அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அணித்தலைமைப் பொறுப்பேற்ற முதல் தொழில்முறை வீரர் அட்டன் தான்.

1958 இல் ஹட்டனுக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

அட்டன் ஜூன் 1916, 23 அன்று பிறந்தார். இவர் மொராவியன் சமூகத்தினைச் சேர்ந்த ஹென்றி அட்டன் மற்றும் அவரது மனைவி லில்லி ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் இளையவர் ஆவார். [1] இவரது குடும்பத்தில் பலர் உள்ளூர் துடுப்பாட்ட வீரர்களாக இருந்ததனால் துடுப்பாட்டத்தின் மீது இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. [2] இவர் 1921 முதல் 1930 வரை படித்த லிட்டில்மூர் கவுன்சில் பள்ளியின் விளையாட்டு மைதானத்திலும், ஜூனியராக சேர்ந்த புட்ஸி செயின்ட் லாரன்ஸ் துடுப்பாட்ட சங்கத்திலும் பயிற்சி பெற்றார். தனது 12 ஆவது வயதில், புட்ஸி செயின்ட் லாரன்ஸின் இரண்டாவது அணி சார்பாக தனது முதல் போட்டியில் அறிமுகமானார். யார்க்ஷயர் மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஹெர்பர்ட் சுட்க்ளிஃப் ஆகியோரைச் சந்திக்க உள்ளூர்வாசிகள் அவரை ஊக்குவித்தனர்.[3]

பிப்ரவரி 1930 இல் ஹெடிங்லேயில் உள்ள கவுண்டியின் உட்புற பயிற்சி கொட்டகைக்குச் சென்றார். [4] இளம் வீரர்களை மதிப்பிடும், பயிற்றுவிக்கும் முன்னாள் யார்க்ஷயர் துடுப்பாட்ட வீரரான ஜார்ஜ் ஹர்ஸ்ட்,இவர் ஏற்கனவே போதுமான மட்டையாடும் திறனைப் பெற்றிருந்ததாக கருதினார். [5] யார்க்ஷயர் விரைவு வீச்சாளரான பில் போவ்ஸ் இவரின் பந்துவீசும் திறனால் ஈர்க்கப்பட்டார். மேலும், அட்டனின் நுட்பத்தில் உள்ள ஒரு சிறிய குறைபாட்டை சரிசெய்ய உதவினார். [6] தொழில்முறை துடுப்பாட்டத்தில் விளையாட முடிவு செய்த அட்டன், தனது பெற்றோரின் வற்புறுத்தலால் வணிகத்தினையும் கற்றுக் கொண்டார்.1930 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய டான் பிராட்மேன் ஹெடிங்லே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 334 ரன்கள் எடுத்த போட்டியினை இவரில் நேரில் பார்த்தார். பின்னர் அந்தச் சாதனையினை அவரே முறியடித்தார். [4] அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஹட்டன் புட்ஸி இலக்கணப் பள்ளியில் சேர்ந்தார், அங்கு அவர் ஒரு வருடம் தொழில்நுட்ப வரைதல் மற்றும் அளவு வேலைகளை கற்று ஒரு உள்ளூர் கட்டிட நிறுவனமான ஜோசப் வெரிட்டியில் தனது தந்தையுடன் சேர்ந்தார். ஒரு தொழில்முறை துடுப்பாட்ட வீரரான பிறகு, அட்டன் 1939 வரை நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார். [7] [8]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

முன்னாள் யார்க்ஷயர் துடுப்பாட்ட வீரர் ஃபிராங்க் டென்னிஸின் சகோதரியான டோரதி மேரி டென்னிஸை, அட்டன் செப்டம்பர் 16, 1939 அன்று ஸ்கார்பாரோவிற்கு அருகிலுள்ள வைகேஹாமில் மணந்தார். டோரதி தனது சகோதரருடன் கலந்து கொண்ட ஒரு பருவகால நடனத்தில் இவர்கள் சந்தித்தனர். [9] இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அதில் ரிச்சர்ட், பின்னாளில் 1942 ஆம் ஆண்டில் யார்க்ஷயர் மற்றும் இங்கிலாந்து அணிக்காக துடுப்பாட்ட விளையாடினார்.[10]

போரின்போதும் அதற்குப் பின்னரும், அட்டன் ஒரு காகித உற்பத்தியாளருக்காக பணியாற்றினார், [11] 1949 ஆம் ஆண்டில் கிரிக்கெட் இஸ் மை லைஃப், [12] நினைவுக் குறிப்புகளைத் தயாரிக்க அட்டன் ஒரு பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தாமஸ் மல்ட்டுடன் இணைந்து பணிபுரிந்தார். மேலும், அவர் விளையாடும் போது நியூஸ் ஆஃப் தி வேர்ல்டுக்காக எழுதினார். [13] துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அட்டன் 1961 வரை ஒளிபரப்பில் பணியாற்றினார், [14]

சான்றுகள் தொகு

  1. Howat, pp. 4–6.
  2. "Len Hutton (Cricketer of the Year 1938)". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1938. பார்க்கப்பட்ட நாள் 3 May 2010.
  3. Howat, p. 7.
  4. 4.0 4.1 Howat, p. 7.
  5. Hill, p. 170.
  6. Howat, p. 8.
  7. Howat, Gerald M. D. (September 2004). "Hutton, Sir Leonard (1916–1990)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 15 August 2010.
  8. Howat, p. 8.
  9. Howat, p. 23.
  10. Howat, p. 55.
  11. Howat, p. 60.
  12. Howat, pp. 84–85
  13. Howat, p. 183.
  14. Howat, pp. 169–70.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லென்_அட்டன்&oldid=3007170" இலிருந்து மீள்விக்கப்பட்டது