லேசிக் (LASIK) அல்லது லாசிக் அல்லது கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (லேசர் உதவிக்கொண்டு இயல்புநிலை கருவிழி திருத்தம் ) என்பது கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் உருப்பிறழ்ச்சி ஆகியவற்றை திருத்துவதற்கான ஒரு வகை ஒளிமுறிவு அறுவை சிகிச்சையாகும்.[1] லேசிக் என்பது லேசர் துணைக்கொண்டு கண் மருத்துவர்களால் செய்யப்படுகிறது.[2] லேசிக் என்பது ஒளிக்கதிர்வளைவு கருவிழியெடுப்பு, பி.ஆர்.கே (ஏ.எஸ்.ஏ, தேர்ச்சியடைந்த மேற்பரப்பு நீக்கல் என்றும் அழைக்கப்படுகிறது) போன்ற அறுவை சிகிச்சைமூலமாக சீர்திருத்தம் செய்யும் செயல்முறைகளை ஒத்தது. எனினும் இதன் மூலம் அதிவேகமான சிகிச்சை பெறுபவர் தேர்ச்சி போன்ற பலன்களும் கிடைக்கப்பெறுகின்றன. லேசிக் மற்றும் பி.ஆர்.கே ஆகிய இரண்டும், பார்வைப் பிரச்சனைகளை அறுவை சிகிச்சை மூலமாக சிகிச்சையளிப்பதில் ஆரமுறை கருவிழித் திறப்பை விட மேம்பட்ட முறைகளின் பிரதிநிதிகளாக விளங்குகின்றன. ஆகவே இது பல நோயாளிகளுக்குத் திருத்தக் கண்கண்ணாடிகள் அல்லது தொடுவில்லை (காண்டாக்ட் லென்ஸ்) ஆகியவற்றை அணிவதற்குப் பதிலான ஏற்ற மாற்றாக அமைகிறது.

தொழில்நுட்பம் தொகு

இந்த லேசிக் நுட்பமானது கொலம்பியாவை சார்ந்த ஸ்பானிய கண்மருத்துவரான யோஸ் பர்ராக்வாரினால் சாத்தியமானது. இவர் சுமார் 1950ஆம் ஆண்டின் போது பொகோடா, கொலம்பியாவிலுள்ள தன்னுடைய சிகிச்சை மையத்தில் முதல் நுண்கருவிழிவெட்டியை (மைக்ரொகிரடோம்) உருவாக்கினார். மேலும் விழிவெண்படலத்தை (கார்னியா) மெல்லியத் துண்டுகளாக வெட்டி அதன் வடிவத்தை மாற்றும் நுட்பமான கெரடொமில்யூசிஸையும் (கருவிழித் திருத்தம்) உருவாக்கினார். நிலையான நெடுங்கால முடிவுகளைப் பெற விழிவெண்படலத்தின் அளவில் எவ்வளவு மாற்றப்படாமல் தக்க வைக்க வேண்டுமென்ற கேள்வியையும் ஆராய்ச்சி செய்தார். தியோடர் எச். மெய்மன் என்பவர் லேசரை உண்டாக்கியிருந்தார்.

பிந்தைய தொழில்நுட்ப மற்றும் செயல்முறை முன்னேற்றங்களில் 1970களில் ஸ்வையடோஸ்லாவ் ஃப்யோடொரோவினால் ரஷ்ஷியாவில் உருவான ஆர்.கே (ஆரவழி கருவிழிவெட்டு) மற்றும் கொலம்பியா பல்கலை கழகத்தில் டாக்டர். ஸ்டீவன் ட்ரோகலால் உருவாக்கப்பட்ட பி.ஆர்.கே (ஒளிக்கதிர்சிதைவு கருவிழிவெட்டு) ஆகியவை அடங்கும். டாக்டர். ஸீட்வன் ட்ரோகல் கூடுதலாக 1973ஆம் ஆண்டில் மணி லால் பௌமிக்கால் காப்புரிமை செய்யப்பட்ட எக்ஸைமர் லேசரை ஒளிமுறிவு அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சாத்தியமான பலன்களைக் குறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஆஃப்தமாலஜியில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். (ஆர்.கே என்ற செயல்முறையில் பொதுவாக நுண்ணளவி (மைக்ரோமீட்டர்) வைரக் கத்தியைக் கொண்டு ஆரவழி விழிவெண்படல வெட்டுகள் செய்யப்படுகின்றன. இது லேசிக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்).

1968 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா பல்கலை கழகத்தின் நார்திராப் கார்பொரேஷன் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி சென்டரில் மணி லால் பௌமிக்கும் அவருடன் ஒரு விஞ்ஞானிகள் குழுவும் ஒரு கார்பன்–டையாக்சைடு லேசரை உருவாக்குவதில் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்களுடைய பணி பிற்பாடு எக்ஸைமர் லேசரென்று அழைக்கப்படும் கருவியாக உருவானது. இவ்வகை லேசரானது ஒளிமுறிவு கண் அறுவை சிகிச்சையின் மூலைக்கல்லாக மாறியது. டாக்டர். பௌமிக் அவருடைய குழுவின் சாதனையை மே மாதம் 1973 ஆம் ஆண்டு கோலராடோவில் உள்ள டென்வரில் நடந்த டென்வர் ஆப்டிக்கல் சொஸைட்டியின் ஒரு கூடுகையில் அறிவித்தார். அவர் பிற்பாடு தன்னுடைய கண்டுபிடிப்பை காப்புரிமைப்படுத்திக் கொண்டார்.

ஒரு நோயாளியுடைய பார்வை அளவீடுகளை மாற்றுவதற்கான பொதுவான பதம் ஒளிமுறிவு அறுவை சிகிச்சையாகும். ரங்கசாமி ஸ்ரீனிவாசனின் பணியிலிருந்து ஒளிமுறிவு அறுவைச் சிகிச்சைகளில் லேசர்களின் அறிமுகம் தொடங்கியது. 1980ஆம் ஆண்டில், ஐ.பி.எம் ஆய்வுக் கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஸ்ரீனிவாசன், ஒரு புற ஊதா எக்ஸைமர் லேசரை சுற்றியிருக்கும் பகுதிக்கு எந்தவித வெப்பஞ்சார்ந்த சேதமும் இல்லாமல் உயிர்த் திசுவை துல்லியமாக பதியவைக்க முடியுமென்றும் கண்டுபிடித்தார். இந்த தோற்றப்பாட்டை அவர் அப்லேடிவ் ஃபோடோடீகம்பொசிஷன் (ஏ.பி.டி) என்று பெயரிட்டார்.[3] கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உருப்பிறழ்ச்சி போன்ற பார்வைப் பிழைகளைத் திருத்துவதற்காக விழிவெண்படலத் திசுவை நீக்க எக்ஸைமர் லேசரை பயன்படுத்தலாம் என்பதை நியுயார்க், கொலம்பியா பல்கலை கழகத்தின், எட்வர்ட் எஸ். ஹார்க்னெஸ் ஐ இன்ஸ்டிடியூட்டின் ஸ்டீஃபன் ட்ராக்கல் எம்.டி முதன் முதலில் முன் மொழிந்தார். டாக்டர். ட்ராக்கல், டாக்டர். சார்ல்ஸ் முன்னர்லின் மற்றும் டெர்ரி கிலாஃபம்முடன் சேர்ந்து வி.ஐ.எஸ்.எக்ஸ் (VISX) இன்கார்பரேடட்டை நிறுவினார். 1989ஆம் ஆண்டில் டாக்டர். மார்கரெட் பீ. மெக்டொனால்ட் எம்.டி ஒரு வி.ஐ.எஸ்.எக்ஸ் லேசர் முறைமையைக் கொண்டு முதல் மனிதக் கண்ணுக்கு சிகிச்சையளித்தார்.[4]

1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி, அமெரிக்க காப்புரிமை அலுவலகம் மூலமாக டாக்டர் கோலம் ஏ. பேமனுக்கு லேசிக்கிற்காக முதல் காப்புரிமையை வழங்கியது, அமெரிக்க காப்புரிமை #4,840,175. இது “விழிவெண்படல வளைவை (கர்வச்சர்) திருத்தியமைப்பதற்கான முறைக்காக” வழங்கப்பட்டது. இதில் “விழிவெண்படலத்தின் ஒரு மடல் (ஃபிளாப்) வெட்டப்பட்டு விழிவெண்படல மெத்தையை (கார்னியல் பெட்) வெளியாக்கும் அறுவை சிகிச்சை அடங்கும். வெளிப்படுத்தப்பட்ட பகுதியானது ஒரு எக்ஸைமர் லேசரைக் கொண்டு தேவையான வடிவத்திற்கு வடிவமைக்கப்படுகிறது. இதன் பின்பு மடல் மூடப்படுகிறது.[சான்று தேவை]

ஐக்கிய அமெரிக்காவிற்கு லேசிக் முறை வருவதற்கு முன் அது மற்ற நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) எக்ஸைமர் லேசரின் சோதனையைத் தொடங்கியது. முதல் முறையாக லேசரானது விழிவெண்படலத்தின் மேற்பரப்பின் வடிவத்தை மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இது பி.ஆர்.கே என்றழைக்கப்பட்டது. டாக்டர். ஜோசஃப் டெல்லோ ரஸ்ஸோ விசக்ஸ் லேசரை சோதித்து அங்கீகாரம் பெற்ற முதல் பத்து எஃப்.டீ.ஏ ஆராய்ச்சியாளர்களில் ஒருவராவார். அமெரிக்காவின் பத்து மையங்களில் விசக்ஸ் லேசரை சோதிக்க எஃப்.டீ.ஏ வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து அறுவை மருத்துவர்களுக்கு டாக்டர். பல்லிக்காரிஸ் 1992ஆம் ஆண்டு லேசிக் கோட்பாட்டை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

டாக்டர். பல்லிக்காரிஸ் ஒரு மடல் (ஃப்ளாப்) என்றழைக்கப்படும் ஒரு படுகையின் மேல் மேற்பரப்பானது தூக்கிவைக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு பர்ராக்குவர் உருவாக்கின நுண்ணளவி கருவிழிவெட்டியைக் (மைக்ரோகெரடோம்) கொண்டு பி.ஆர்.கே செய்வதின் பலன்களை முன்மொழிந்தார். ஒரு மடலும் பி.ஆர்.கேவும் சேர்ந்து லேசிக் என்ற அஃகுபெயரானது. இது பார்வையில் உடனடி மேம்பாடுகளைக் காண்பித்து பி.ஆர்.கேயை விட மிகக் குறைந்த வலியும் அசௌகரியமும் உண்டாகியதால் குறைந்த காலத்திலேயே மிகவும் பிரபலமானது.

இன்று 1991 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, அதிக வேகமான லேசர்கள், இன்னும் பெரிய புள்ளிப் பரப்பளவுகள், கத்தியற்ற மடல் கீறல்கள், அறுவை சிகிச்சையின் போதான பாகிமெட்ரி மற்றும் அலைமுகப்பு உகப்புப்பாடு மற்றும் வழிநடுத்தப்பட்ட யுக்திகளின் வாயிலாக இந்த செயல்முறையின் நம்பகத்தன்மை வெகுவாக மேம்பட்டிருக்கிறது. என்றாலும், எக்ஸைமர் லேசர்களுடைய அடிப்படை குறைவுகளினிமித்தமும் கண் நரம்புகளின் விரும்பப்படாத சேதத்தினிமித்தமும் “சாதாரண” லேசிக்கிற்கு மாற்றை கண்டுபிடிக்க பல ஆராய்ச்சிகள் தோன்றியிருக்கின்றன. அவற்றில், லேசெக் (LASEK), எபி-லேசிக், சப்-பௌமன்ஸ் கருவிழி திருத்தம் அதாவது மெல்லிய-மடல் லேசிக், அலைமுகப்பு-வழிநடத்தப்பட்ட பி.ஆர்.கே மற்றும் நவீன கண்ணக வில்லைகள் ஆகியவை உட்படும்.

லேசிக் எதிர்காலத்தில் இழைவேலை நீக்கம் (இண்ட்ராஸ்ட்ரோமல் அப்லேஷன்) மூலமாக மாற்றப்படலாம்.[5] இது அனைத்து-ஃபெம்டோசெகண்ட் திருத்தம் (ஃபெம்டோசெகண்ட் லெண்டிக்யூல் எக்ஸ்டிராக்ஷன், எஃப்.எல்.ஐ.வி.சி அல்லது இண்ட்ராகோர் போன்ற) அல்லது விழிவெண்படலத்தில் பெரிய கீறல்கள் செய்வதால் அதை பலனிழக்கச் செய்து சூழ்ந்துள்ள திசுக்களுக்கு குறைவான சக்தி செல்வதைத் தவிர்க்கும் மற்ற யுக்திகளைக் கொண்டு இது செய்யப்படலாம். 20/10 (இப்போது டெக்னோலஸ் என்றழைக்கப்படுவது) ஃப்மெடெக் (FEMTEC) லேசரானது அண்மையில் கீறலற்ற இண்ட்ராகோர் (IntraCOR) நீக்கத்துக்காக பல நூறு மனித கண்களில் பயன்படுத்தப்பட்டு பிரஸ்பையோபியாவில் மிக வெற்றிகரமான முடிவுகளைப் பெற்றுள்ளது.[6] மேலும் கிட்டப்பார்வைக்கும் மற்ற கோளாறுகளுக்கும் சோதனைகள் சென்றுகொண்டிருக்கின்றன.[7]

செயல்முறைகள் தொகு

அறுவை சிகிச்சைக்கு முன்பான காலத்தில் பல அவசியமான ஆயத்தங்கள் இருக்கின்றன. அறுவைச் சிகிச்சையில் கண்ணுக்கு மேலே ஒரு மெல்லிய மடலை உண்டாக்கி, அதன் கீழிருக்கும் திசுவை மறுவடிவமைக்க உதவி செய்ய அதை மடக்குதல் ஆகியவை உட்படும். இந்த மடல் வேற்றிடத்தில் மாற்றப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின்னான காலத்தில் குணமடைய விட்டுவிடப்படுகிறது.

சிகிச்சைக்கு முன்பு தொகு

மென்மையான தொடுவில்லைகளை அணிபவர்கள் அறுவை சிகிச்சைக்கு 5 முதல் 21 நாட்களுக்கு முன்பிலிருந்து அவைகளை அணிய வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மென்மையல்லாத தொடுவில்லைகளை அணிபவர்கள் குறைந்தப்பட்சம் ஆறு வாரங்களுடன் மென்மையல்லாத தொடுவில்லைகள் அணியப்பட்ட ஒவ்வொரு மூன்று வருடங்களுக்குக் கூடுதலாக ஒவ்வொரு ஆறு வாரங்கள் அணிதல் நிறுத்தப்பட வேண்டுமென்று ஒரு தொழில்துறை சம்பந்தப்பட்ட நிறுவனம் பரிந்துரைக்கிறது.[8] அறுவை சிகிச்சைக்கு முன், சிகிச்சை பெறுபவருடைய விழிவெண்படலங்களுடைய தடிமானத்தை நிர்ணயிக்க ஒரு பாக்கிமீட்டரினால் அளக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் மேடு பள்ளங்கள் ஒரு டோபோகிராஃபர் மூலமாக அளக்கப்படுகின்றன. குறைந்த-சக்தி லேசர்கள் மூலமாக, ஒரு டோபோகிராஃபர் விழிவெண்படலத்தின் ஒரு இடக்கிடப்பியல் (டோபோகிராஃபிக்) வரைபடத்தை உண்டாக்குகிறது. இந்த செயல்முறை உருப்பிறழ்ச்சியையும் விழிவெண்படலத்தின் வடிவத்தின் அசாதாரணங்களையும் கண்டுபிடிக்கிறது. இந்த தகவல்களைப் பயன்படுத்தி, அறுவை மருத்துவர் அறுவை சிகிச்சையின்போது எடுக்கப்பட வேண்டிய விழிவெண்படல திசுவின் அளவையும் இடங்களையும் கணக்கிடுகிறார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க சிகிச்சை பெறுபவர் பொதுவாக ஒரு ஆண்டிபையாட்டிக் பரிந்துரைக்கப்பட்டு அதை தானே எடுத்துக்கொள்கிறார்.

அறுவை சிகிச்சை தொகு

சிகிச்சை பெறுபவர் விழித்துக்கொண்டு அசையக்கூடிய நிலையிலேயே அறுவை சிகிச்சையானது செய்யப்படுகிறது. எனினும், சிகிச்சை பெறுபவர் சில நேரங்களில் ஒரு லேசான மயக்க மருந்து (வேலியம் போன்ற) மற்றும் உணர்ச்சி நீக்கும் கண் சொட்டுகள் பெறுகிறார்.

லேசிக் மூன்று படிகளில் செய்யப்படுகிறது. முதல் படியானது விழிவெண்படலத் திசுவின் ஒரு மடலை உண்டாக்குவதாகும். இரண்டாவது படியானது இந்த மடலுக்குக் கீழே இருக்கும் விழிவெண்படலத்தை மறுவடிவமைப்பதாகும். இறுதியாக, மடலானது மாற்றிடம் செய்யப்படுகிறது.

மடல் உண்டாக்குதல் தொகு

கண்ணை ஓரிடத்தில் நிறுத்த ஒரு விழிவெண்படல உறிஞ்சு வளையமானது பொருத்தப்படுகிறது. இந்த செயல்முறையில் இந்த படி சில நேரங்களில் சிறிய இரத்த நாளங்கள் வெடித்து, இரத்தக்கசிவு அல்லது கண்ணின் வெள்ளைப் பகுதியில் (விழிவெண்படலத்தில்) கண்சவ்வடி இரத்த ஒழுக்கு ஏற்படுகிறது. இது ஆபத்தற்ற பக்க விளைவாயிருந்து பல வாரங்களுக்குள் நிவிர்த்தியடைகிறது. அதிகரித்த உறிஞ்சுதலினால் சிகிச்சையளிக்கப்பட்ட கண்ணில் நிலையற்ற பார்வை மழுங்கல் ஏற்படுகிறது. கண்ணசைவு நிறுத்தப்பட்டபின் மடல் உண்டாக்கப்படுகிறது. இந்த செயல்முறையானது ஒரு உலோகக் கத்தியைக்கொண்டு, ஒரு பொறிமுறை நுண்கருவிழிவெட்டியைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. அல்லது ஒரு ஃபெமடோசெகண்ட் லேசர் நுண்கருவிழிவெட்டியைக் (இண்டிராலேசிக் (உட்புற லேசிக்) என்று அழைக்கப்படும் செயல்முறை) கொண்டு செய்யப்படுகிறது. இது விழிவெண்படலத்தில் நுண்ணிய நெருக்கமாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் குமிழ்களை உண்டாக்குகிறது.[9] இந்த மடலின் ஒரு முனையில் ஒரு கீல் வைக்கப்படுகிறது. மடலானது பின்னாக மடக்கப்படுகிறதினால், விழிவெண்படலத்தின் மையப்பகுதியாகிய இழையவலை (ஸ்ட்ரோமா) வெளிப்படுத்தப்படுகிறது. மடலை தூக்கி பின்னாக மடக்குவது சில நேரங்களில் அசௌகரியத்தை விளைவிக்கலாம்.

லேசர் மறுவடிவமைப்பு தொகு

விழிவெண்படல இழையவேலையை மறுவடிவமைக்க இந்த செயல்முறையின் இரண்டாவது படியில் ஒரு எக்ஸைமர் லேசர் (193 என்.எம்) பயன்படுத்தப்படுகிறது. லேசரானது பக்கத்திலுள்ள இழையவேலையை சேதப்படுத்தாமல் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் திசுவை ஆவியாக்குகிறது. திசுவை நீக்க அனலுடன் எரிப்பது அல்லது வெட்டுதல் எதுவும் ஈடுபடுவதில்லை. நீக்கப்படும் திசுவானது பல மைக்ரோமீட்டர்கள் தடியுள்ளதாயிருக்கின்றன. ஆழமான விழிவெண்படல இழையவேலையில் லேசர் நீக்கத்தை செய்வதனால் அதிக துரித பார்வை மீட்சி மற்றும் முந்தைய யுக்தியான, ஒளிக்கதிர்வளைவு கருவிழியெடுப்பை (பி.ஆர்.கே) விடக் குறைந்த வலியை அளிக்கிறது.

இரண்டாவது படியின்போது, சிகிச்சை பெறுபவரின் பார்வை மடல் தூக்கப்படும்போது மிகவும் மங்கலாகிவிடுகிறது. லேசருடைய ஆரஞ்சு நிற வெளிச்சத்தைச் சுற்றி வெள்ளை வெளிச்சத்தை மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். இதனால் லேசான நிலைபுல தடுமாற்றம் ஏற்படலாம்.

தற்போது, உற்பத்தி செய்யப்படும் எக்ஸைமர் லேசர்கள் சிகிச்சை பெறுபவருடைய கண்ணின் நிலையை வினாடிக்கு 4000 முறை வரை பின் தொடரும் கண் கண்காணிப்பு அமைப்பை பயன்படுத்துகின்றன. இவை லேசர் துடிப்புகள் சிகிச்சை மையத்தில் துள்ளியமான இடத்திற்கு செலுத்தப்பட உதவி செய்கின்றன. பொதுவாக துடிப்புகள் 10 முதல் 20 நேனோவினாடிகளில் சுமார் ஒரு மில்லிஜூல் (எம்ஜே) துடிப்பு சக்தியாக இருக்கின்றன.[10]

மடலை மறுநிலைப்படுத்துதல் தொகு

லேசரானது இழையவேலை படலத்தை மறுவடிவமைத்தப்பின், லேசிக் மடலானது சிகிச்சைப் பகுதிக்கு மேல் அறுவை மருத்துவர் மூலமாக மிகவும் கவனமாக மறுநிலைப்படுத்தப்படுகிறது. அப்போது அவர் காற்றுக் குமிழ்கள், சிதைபொருள் மற்றும் கண்ணில் சரியாக பொருந்துகின்றதா ஆகியவற்றைச் சோதிக்கிறார். குணமடைதல் முடிவடையும்வரை மடலானது இயற்கையான ஒட்டற்பண்பினால் அதன் நிலையில் தங்குகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னான கவனிப்பு தொகு

சிகிச்சை பெறுபவர்கள் பொதுவாக ஒரு ஆண்டிபையாடிக் மருந்து நியமனமும் அழற்சியெதிர்ப்பு கண் சொட்டுகளும் அளிக்கப்படுகின்றனர். இவை அறுவை சிகிச்சை முடிவடையும் வாரங்களில் தொடரப்படுகின்றன. சிகிச்சை பெறுபவர்கள் பொதுவாக அதிக நேரம் தூங்கவும் பளிச்சென்ற வெளிச்சங்களிலிருந்து பாதுகாக்க ஒரு ஜோடி இருள் கவசங்களும் அளிக்கப்படுகின்றனர். மேலும் தூங்கும் போது கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்கவும் உலர் கண்களைக் குறைக்கவும் பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்படுகின்றனர். கண்களை ஈரப்படுத்த அவர்கள் பாதுக்காப்புப் பொருளற்ற கண்ணீர் உபயோகிக்கவும் பரிந்துரைக்கப்பட்ட சொட்டு மருந்துகளுக்கான வழிமுறைகளை பின்பற்றவும் வேண்டும். சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க ஒழுங்கான சிகிச்சைக்குப் பின்னான கவனிப்பில் முக்கியத்துவத்தை அறுவை மருத்துவர்கள் போதுவான அளவு சிகிச்சை பெறுபவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேல்நிலைப் பிறழ்ச்சிகள் தொகு

பார்வைக் கூர்மையை மட்டும் சோதிக்கும் பாரம்பரிய கண் பரிசோதனையினால் நோயறியப்பட முடியாத பார்வைக் கோளாறுகள், மேல்நிலை பிறழ்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. தீவிரமான பிறழ்ச்சிகள் குறிப்பிடத்தக்க பார்வைக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும். நட்சத்திரபிரகாசங்கள், பன்முகத் தோற்றம், ஒளிவட்டங்கள், இரட்டைப் பார்வை மற்ற பிற சிகிச்சைக்குப்பின்னான சிக்கல்கள் பிறழ்ச்சிகளில் உட்படும்.

மேல்நிலைப் பிறழ்ச்சிகளைத் தூண்டக்கூடியதால் லேசிக்கைக் குறித்தான கரிசனைகள் இருக்கத்தான் செய்கிறது. லேசிக் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருப்பது, அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவ ரீதியில் குறிப்பிடத்தக்க பார்வைக் கோளாறு உண்டாவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவியிருக்கிறது. விழிப்பாவையின் அளவுக்கும் பிறழ்ச்சிகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.[11] விழிப்பாவையின் அளவு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, பிறழ்ச்சிகளுக்கான அபாயமும் அவ்வளவு அதிகமாக இருக்கிறது. விழிவெண்படலத்தில் தொடப்படாத பகுதிக்கும் மறுவடிவமைக்கப்பட்ட பகுதிக்கும் இருக்கும் முறைகேட்டின் காரணமாக இந்த தொடர்பு ஏற்படுகிறது. விழிப்பாவையானது லேசிக் மடலைவிட சிறியதாக இருப்பதால் பகல்நேரம் லேசிக்கிற்குப் பின்னான பார்வை ஏற்புடையதாயிருக்கிறது. இரவு நேரத்தில் லேசிக் மடலின் ஓரங்களின் வழியாய் ஒளிப்புகத்தக்கதாக விழிப்பாவை விரியக்கூடியதால் பல பிறழ்ச்சிகள் ஏற்படலாம். ஒளி மூலங்களைச் சுற்றி ஒளிவட்டங்கள் தோன்றுவது அவற்றுள் ஒன்றாகும். விழிப்பாவையின் அளவில்லாமல் மேல்நிலைப் பிறழ்ச்சிகள் ஏற்படுவதற்கு இதுவரை அறியப்படாத காரணங்கள் உள்ளன.

கண் மருத்துவர்கள் போதுமான செயல்முறைகளைப் பின்பற்றாத அரிய நேரங்களில், முக்கியமான முன்னேற்றங்களுக்கு முன், மோசமான ஒளி சூழ்நிலைகளில் நிறவேற்றுமை உணர்திறன் அற்றுப் போகுதல் போன்று செயலிழக்கச் செய்யும் அறிகுறிகளை சிலர் உணரக்கூடும்.

காலப்போக்கில், மற்ற பிறழ்ச்சிகளிலிருந்து பெருவாரியான கவனம் கோளப் பிறழ்ச்சிக்கு சென்றிருக்கிறது. லேசிக்கும் பி.ஆர்.கேவும் கோளப் பிறழ்ச்சியை உண்டாக்கக் கூடும். லேசர் சிகிச்சை மையத்திலிருந்து வெளிப்புறம் செல்வதால் குறைத்திருத்தம் நேரக்கூடியதால் இவ்வாறு எண்ணப்படுகிறது. இது பெருவாரியான திருத்தங்களில் பெரிய பிரச்சனையாகும். லேசர்கள் இந்தத் தன்மைக்கு சரிசெய்யும்படி நிரலொழுங்கு செய்யப்பட்டால், குறிப்பிடத்தக்க எவ்வித கோளப்பிறழ்ச்சியும் நேரிடாது என்று முன்மொழியும் கோட்பாடுகளும் உள்ளன. சில மேல்நிலைப் பிறழ்ச்சிகளுடைய கண்களில், அலைமுகப்பு-உகப்பாடுசெய்யப்பட்ட லேசிக் (அலைமுகப்பு-வழிநடத்தப்பட்ட லேசிக்கிற்கு பதிலாக) எதிர்கால நம்பிக்கையாக இருக்கலாம்.[சான்று தேவை]

மேல்நிலைப் பிறழ்ச்சிகள் வேவ்ஸ்கேனில் மைக்ரோமீட்டர்களில்(µm) அறுவை சிகிச்சைக்கு முன்னான பரிசோதனையில் அளக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்திருக்கிற மிகச் சிறிய லேசர் கதிர்வீச்சு கூட ஆயிரமடங்கு பெரிதாக 0.65மிமீட்டராக உள்ளது. ஆகவே இந்த செயல்முறையிலேயே குறைபாடுகள் உள்ளுற காணப்படுகின்றன. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் சிறிதளவு இயற்கையாக-விரிக்கப்பட்ட விழிப்பாவைகளிலும் குறைவான வெளிச்சத்தில் ஒளிவட்டம், கண்கூச்சம் மற்றும் நட்சத்திரபிரகாசங்களை உணர்கின்றனர்.

அலைமுகப்பு-வழிநடத்தப்பட்ட லேசிக் தொகு

அலைமுகப்பு-வழிநடத்தப்பட்ட லேசிக்கானது[12] லேசிக் அறுவைச் சிகிச்சையின் ஒரு வேறுபாடாகும். இதில் விழிவெண்படலத்தில் சக்தியை ஒருமுகப்படுத்தும் ஒரு எளிய திருத்தத்தை செய்வதற்குப் பதிலாக (பொதுவாக லேசிக்கில் செய்யப்படுவதைப் போல்), கண் மருத்துவர் இடம்தகுந்து வேறுபடும் திருத்தத்தை செய்கிறார். இதில் அவர் கணினி-இயக்கப்பட்ட எக்ஸைமர் லேசரை வழிநடத்துகிறார். இதற்கென்று அவர் ஒரு அலைமுகப்பு உணர்க்கருவியின் அளவுகளை பயன்படுத்திக்கொள்கிறார். பார்வையில் இன்னும் துல்லியமான ஓர் கண்ணை அடைவதே இதன் நோக்கமாகும். என்றாலும் இறுதி முடிவானது குணமடையும்போது நேரிடும் மாற்றங்களைக் கணிக்கும் மருத்துவரின் வெற்றியைப் பொருத்தே இருக்கிறது. வயது முதிர்ந்த சிகிச்சை பெறுபவர்களில், நுண்ணியப் பொருட்களின் சிதறல்கள் ஒரு பெரும்பங்கு வகித்து அலைமுகப்பு திருத்தத்தின் பலனைவிட மேலோங்குகிறது. எனவே அப்படிப்பட்ட செயல்முறைகளில் “மேற்பார்வை” எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பெறுபவர்கள் ஏமாற்றமடையலாம். எனினும், அறுவை மருத்துவர்கள் முந்தைய முறைகளை விட இந்த முறையில் பொதுவாக சிகிச்சை பெறுபவர்கள் மேலும் திருப்தியடைவதாகக் கோருகின்றனர். அதிலும் முந்தைய முறைகளில் கண்ணில் கோளக பிறழ்ச்சியினால் ஏற்படும் பார்வைத் தோற்றமாகிய “ஒளிவட்டங்கள்” குறைந்ததாகக் கூறினர். ஐக்கிய அமெரிக்க விமானப்படை அவர்களுடைய அனுபவத்தின்படி, டபுள்யு.எஃப்.ஜி-லேசிக் “மேம்பட்ட பார்வை முடிவுகளை” அளிப்பதாகக் கூறினர்[13] .

லேசிக் அறுவை சிகிச்சை முடிவுகள் தொகு

லேசிக் அறுவை சிகிச்சை குறித்து நோயாளிகள் மன நிறைவோடு இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், பல நோயாளிகள் மன நிறைவோடு இருப்பதாகத் தெரிய வந்தது. மனநிறைவு புள்ளி விவரம் 92 முதல் 98 சதவிகிதமாக இருந்தது.[14][15][16][17] 2200 நோயாளிகளின் மன நிறைவை நேரடியாகப் பார்க்கும் 19 ஆய்வுகள் உட்பட கடந்த 10 வருடங்களில் உலகில் பிரபலமான பல மருத்துவ பத்திரிக்கைகளில் வெளியான 3,000 வெளியீடுகளை மார்ச் 2008ல் அமெரிக்க கண்புறை மற்றும் முறிவு அறுவை சிகிச்சைக்கான அமெரிக்க குழுமம் மெடா ஆய்வு செய்தது. இதில் உலக அளவில் லேசிக் நோயாளிகளில் 95.4 சதவிகிதத்தினருக்கு மன நிறைவு இருந்தது தெரிய வந்தது.[18]

பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொகு

பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றி வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பொருள் விளக்கத்துக்குட்பட்டவையாகும். 2003ல் யுனைடட் கிங்டமில் உள்ள மருத்துவர்களுக்கு அதிகபட்ச காப்பீடு தொகை அளிக்கும் நிறுவனமான மெடிகல் டிஃபன்ஸ் யூனியன், (எம்.டி.யு) நுண் கதிர் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் காப்பீடு கோருவது 166 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறியது. ஆனால், இந்த காப்பீடு கோரப்பட்டவைகளில் சில நோயாளிகளின் நடைமுறைக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புகளால் கோரப்பட்டவையே அன்றி தவறான அறுவை சிகிச்சையினால் அல்ல என்று எம்.டி.யு கூறுகிறது.[19] ஆப்தால்மாலஜி என்ற மருத்துவ பத்திரிக்கையில் 2003ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளில் 18 சதவிகிதத்தினருக்கும், சிகிச்சை செய்யப்பட்ட கண்களில் 12 சதவிகிதத்தினருக்கும் மறு சிகிச்சை தேவைப்பட்டதாகக் கூறுகிறது.[20] அதிகப்படியான ஆரம்பகால திருத்தங்கள், சிதறல் பார்வை மற்றும் வயதாகுதல் ஆகியவை லேசிக் சிகிச்சைக்கான ஆபத்தான காரணிகள் என ஆசிரியர்கள் முடிவுக்கு வந்தனர்.

2004ல், பிரித்தானிய தேசிய உடல்நல சேவையின் உடல்நல மற்றும் மருத்துவ சிறப்புக்கான தேசிய கழகம் (என்.ஐ.சி.ஈ), என்.ஹெச்.எஸுக்குள் லேசிக் சிகிச்சை அளிக்கப்படுவதைப் பற்றிய விதிமுறைகளை வழங்குவதற்கு முன்னர் நான்கு தோராயமயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின்[21][22] படிப்படியான பகுப்பாய்வை மேற்கொண்டது.[23] இந்த முறையின் செயல்திறன் பற்றி என்.ஐ.சி.ஈ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது “முறிவு பிரச்சனைகளுக்கு லேசிக் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு தற்போதுள்ள சான்றுகள், அது லேசான அல்லது மிதமான கிட்டப்பார்வை உடைய நோயாளிகளில் மட்டும் அதிக பலனளிப்பதாகக் கூறுகிறது. இந்த முறையின் பாதுகாப்பு குறித்து என்.ஐ.சி.ஈ வெளியிட்ட அறிக்கையில், காலப்போக்கில் இந்த முறையின் பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளன மற்றும் தற்போதுள்ள சான்றுகள், கணக்கீடு மற்றும் ஆய்வுக்காக சம்மதம் பெற போதுமான சிறப்பு ஏற்பாடுகள் இன்றி என்.ஹெச்.எஸுக்குள் இதனை உபயோகிப்பது முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள ஒரு ஆசிரியராவது மற்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் தலை சிறந்த கதிர் சிதைவு அறுவை சிகிச்சை நிபுணர்கள், என்.ஐ.சி.ஈ மிகப்பழமையான மற்றும் சரியாக ஆய்வு செய்யப்படாத தகவலை ஆதாரமாகக் கொண்டுள்ளது என கருத்து தெரிவிக்கின்றனர்.[24][25]

லேசிக் முறையால் ஏற்படும் தொற்று அபாயத்தை விட தொடுவில்லை போடுவதால் ஏற்படும் தொற்று அபாயம் அதிகம் என்பது புள்ளியியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை குறித்து 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று வெப்.எம்.டி (WebMD) அறிக்கை அளித்தது.[26] 30 வருடங்கள் கண் தொடுவில்லை உபயோகிப்பவர்களில் நூறில் ஒருவருக்கு தீவிரமான கண் தொடுவில்லை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 2,000த்தில் ஒருவருக்கு தொற்றின் காரணமாக குறிப்பிடத்தக்க அளவிற்கு கண்பார்வை மங்குதலும் ஏற்படலாம். ஆய்வாளர்கள் லேசிக் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 10,000த்தில் ஒருவருக்கு தான் குறிப்பிடத்தக்க அளவு கண் பார்வை பறிபோகுதல் ஏற்படலாம் என கணக்கிட்டுள்ளனர்.

நோயாளியின் மனநிறைவின்மை தொகு

லேசிக் சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பயனடைந்த சில நோயாளிகள் கண் பார்வை பிரச்சனைகள் அல்லது அறுவை சிகிச்சைக்குத் தொடர்புடைய உடல் வலி ஆகியவற்றுடன் கூடிய குறைவான வாழ்க்கைத் தரம் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். லேசிக் முறையினால் பிரச்சனைகளுக்கு ஆளான நோயாளிகள் பல இணைய தளங்களை உருவாக்கி அதில் விவாதங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதன் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இதில் முந்தைய நோயாளிகள் மற்றும் சிகிச்சை முறை செய்து கொள்ளப்போகும் நோயாளிகள் அனைவரும் அறுவை சிகிச்சை குறித்து விவாதங்கள் நடத்துகின்றனர். 1999ல், ஆர்.கே நோயாளியான ரோன் லிங்க்[27] லேசிக் பிரச்சனை மற்றும் மற்ற கதிர்சிதைவு அறுவை சிகிச்சைகளால் பிரச்சனைகளுக்கு ஆளானவர்களுக்கு உதவும் வகையில் நியூயார்க் நகரில்[28] சர்ஜிகல் ஐஸ்[29] என்பதை தொடங்கினார்[30]. அனுபவம் நிறைந்த மற்றும் புகழ்பெற்ற மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைக்கு முன், முழுமையான விரித்தலுடன் கூடிய கண் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், எதிர்மறையான விளைவுகளைத் தடுக்க அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிக்கு தகுந்த அறிவுரைகளும் வழங்கப்படுகிறது.

நல்ல பலன்களுக்கு, அமெரிக்க கடல் படையின் கதிர் சிதைவு அறுவை சிகிச்சை திட்டத்தை மேற்பார்வையிட்டவரும், அமெரிக்க கடற்படையில் உள்ளவர்களுக்கு லேசிக் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு சம்மதம் தெரிவிக்கும் கடற்படையின் முடிவில் ஓரளவு தாக்கம் விளைவித்த ஆய்வை நடத்தியவருமான ஸ்டீவன் சி. ஸ்கேலாம் ஒரு வழி முறையைக் கூறுகிறார். அவர் “முழுமையான லேசர் கதிர் லேசிக்” மற்றும் “அலைமுகப்பு வழிநடத்தப்பட்ட” மென்பொருளின் கூட்டை நோயாளிகள் பெற வேண்டும் என பரிந்துரைக்கிறார்.[31][32]

லேசிக் பற்றிய எஃப்.டி.ஏ இணையதளத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பது: “ஒரு கதிர் சிதைவு முறையை ஏற்றுக்கொள்வதற்கு முன் உங்களது கலாச்சார மற்றும் நம்பிக்கை அடிப்படையில் அதில் உள்ள அபாயங்கள் மற்றும் பயன்களை மதிப்பிட வேண்டும். மேலும் நண்பர்கள் ஏற்கெனவே இம்முறையை கையாண்டிருக்கும் அல்லது மருத்துவர்கள் ஊக்கப்படுத்தும் காரணங்களுக்காக இதனை ஏற்கக் கூடாது”.[33] இதனைத் தொடர்ந்து, முறையை செய்துகொள்ளப்போகும் நோயாளிகள் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்சனைகள் குறித்தும் முழுமையாக புரிந்து வைத்திருப்பது அவசியம். ஏனெனில் மனநிறைவு என்பது எதிர்பார்ப்புகளோடு நேரடி தொடர்புடையதாக உள்ளது.

எஃப்.டி.ஏ, 1998-2006 வரையிலான கால அளவில், லேசிக் குறித்த 140 எதிர்மறையான அறிக்கைகளைப் பெற்றுள்ளது.[34]

சாத்தியமான சிக்கல்கள் தொகு

 
கண்சவ்வடி இரத்த ஒழுக்கென்பது லேசிக்கிற்கு பின்பான பொதுவான மற்றும் சிறிய சிக்கலாகும்.

“கண்கள் உலர்ந்து போகுதல்” என்பது கதிர் சிதைவு சிகிச்சையினால் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்க கண்சிகிச்சை ஆய்வு பத்திரிக்கையில், 36.6 சதவிகிதத்தினருக்கு லேசிக் முறை அறுவை சிகிச்சைக்கு பின்னர் கண் உலர்ந்து போகுதல் ஏற்படுகிறது எனக் கூறியுள்ளது.[35] எஃப்.டி.ஏ (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) இணையதளத்தில் "உலர் கண்கள்” (கண்கள் உலர்ந்து போகுதல்) நிரந்தரமானது எனக் குறிப்பிடுகிறது.[36]

கண்கள் உலர்ந்து போகுதல் ஏற்படும் வாய்ப்பு அதிகப்படியாக இருப்பதனால் ஒரு முறையான அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவும் பின்னதாகவும் கண்கள் உலர்ந்து போவதற்கான சிகிச்சை அளிக்கப்படுவது அவசியமாக உள்ளது. செயற்கை கண்ணீர், மருந்துகள் மூலம் ஏற்படும் கண்ணீர் மற்றும் அடைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை உட்பட கண்கள் உலர்ந்து போகுதலுக்கும் பல வகையான சிகிச்சைகள் உள்ளன. இந்த அடைப்பை ஏற்படுத்துதல் கண்களின் இயற்கையான வழியில் ஒரு கொலாசென் செருகியைப் பொருத்தி செய்யப்படுகிறது. கண்கள் உலர்ந்து போகுதலுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், கண் பார்வையில் பாதிப்பையும் லேசிக் அல்லது பி.ஆர்.கே முறையின் செயல்பாட்டை குறைவையும் செய்யலாம். மேலும், “தீவிர உலர் கண்கள்” ஏற்பட்டு அதிகப்படியான வலி மற்றும் கண் பார்வை பறிபோகுதல் ஆகியவை கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில உலர் கண்கள் மேற்கூறிய சிகிச்சை முறைகள் மூலம் சரியான முறையில் சரி செய்ய இயலாதவை என்பதையும், லேசிக் சிகிச்சை செய்துகொள்ளப் போகும் நோயாளி கண்கள் உலர்ந்து போகுதல் என்பது நிரந்தர விளைவாக ஏற்படலாம், இதனை குணப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்

லேசிக் சிகிச்சைக்கு பின்னர் ஒரு நோயாளிக்கு பாதிப்பளிக்கக் கூடிய பக்க விளைவுகளாவன: ஒளிவட்டங்கள், இரட்டைப் பார்வை (இரட்டிப்பு), நிறவேற்றுமை உணர்திறன் குறைதல் (கூச்சப்பார்வை) மற்றும் கண் மறைத்தல். இது போன்ற விளைவுகள் ஏற்படும் அபாயம், அறுவை சிகிச்சைக்கு முன்னர் இருக்கும் குறைப்பார்வையின் அளவு மற்றும் மற்ற அபாய காரணிகளைப் பொறுத்தது.[37] இந்த காரணத்துக்காக, அனைத்து நோயாளிகளுக்கும் ஏற்படக்கூடிய அபாயங்களை மட்டும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதைவிட, ஒவ்வொரு தனி நபருக்கும் ஏற்படக்கூடிய அபாயங்களை கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.[38] கீழ்வருபவை லேசிக் முறையால் ஏற்படுகிறது என்று அதிகபட்சமாக அறிவிக்கப்பட்ட பிரச்சனைகளாகும்:[39][40]

  • அறுவை சிகிச்சை மூலம் ஏற்பட்ட உலர் கண்கள்
  • அதிக திருத்தம்[41] அல்லது குறைவான திருத்தம்
  • மிகக் குறைந்த வைட்டமின் டி அளவு – சூரிய உணர்திறன்
  • பார்வைக் கூர்மையில் மாற்றங்கள்
  • இரவில் வெளிச்சங்களை சுற்றி ஒளிவட்டங்கள்[42] அல்லது நட்சத்திர பிரகாசம்[43] தோன்றுதல்
  • ஒளி உணர்திறன்
  • நிழல் உருவங்கள்[44] அல்லது இரட்டை பார்வை
  • கண் மடிப்புகளில் சுருக்கங்கள் (நிறமிக் கோடுகள்)[45]
  • விழி வில்லை மைய விலக்கு அகற்றுதல்
  • மடிப்புச் சிதறல் அல்லது மடிப்புகளுக்கடியில் வளர்ச்சி
  • லேசான பட்டன் போன்ற மடிப்புகள் [46]
  • தூண்டப்பட்ட சிதறல் பார்வை
  • கருவிழி தளர்வு
  • மிதப்பவைகள்
  • தோலிழமம் அரிப்பு
  • வெளிப்புற விழிஅறை விலகுதல்[47]
  • கருவிழித் தளும்பு[48]

லேசிக் முறையினால் ஏற்படும் பிரச்சனைகளை அறுவைசிகிச்சைக்கு முன், அறுவை சிகிச்சையின் இடையே, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மற்றும் அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களுக்குப் பின் என்ற வகையில் பிரித்துள்ளனர்.[49]

அறுவைசிகிச்சையின் போது ஏற்படும் பிரச்சனைகள் தொகு

  • மடிப்பு பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு 0.244% என அனுமானிக்கப்படுகிறது.[50] மடிப்பு பிரச்சனைகள் (இடம் மாறிய மடிப்புகள் அல்லது தக்க இடத்தில் மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் மடிப்பில் ஏற்படும் சுருக்கங்கள், பரவலான மடிப்பு நிலை விழிப்பாவை அழற்சி மற்றும் மேற்தோல் வளர்தல் போன்றவை) மடிப்பு நிலை விழிப்பாவை அறுவை சிகிச்சைகளில் பொதுவாக ஏற்படுபவையாகும்.[51] ஆனால் மிக அரிதாக மட்டுமே பார்வைக் கோளாறுகள் ஏற்படும். இது போன்ற மைக்ரோகெரடோம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க மருத்துவருக்கு அனுபவம் இருந்தால் தடுக்கலாம்.[52] இது போன்ற முறைகளை பயன்படுத்துபவர்களின் கருத்துப் படி, இது போன்ற அபாயங்களைத் தவிர்க்க உட்புற லேசிக் மற்றும் மைக்ரோகெரடோம் அல்லாத முறைகளை கையாளலாம் எனக் கூறுகின்றனர். இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த உட்புற லேசிக் முறைக்கென சில பிரச்சனைகள் இருக்கலாம்.
  • தவறிபோன மடிப்பு (விழிப்பாவை மடிப்பு கருவிழியிலிருந்து பிரிதல்) என்பது பொதுவாக ஏற்படும் பிரச்சனையாகும். அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே இந்த பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் நோயாளிகள் வீட்டிற்குச் சென்று தூங்க வேண்டும் என்று அறுவுறுத்தப்படுவர். தூங்கும் போது மடிப்பு இடறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்கு பல இரவுகளுக்கு உபயோகிக்கும் வகையில் இரவு கண்ணாடி அல்லது கண் கவசங்கள் வழங்கப்படும். மடிப்பு காய்வதற்கு குறைந்த நேரமே தேவைப்படும் என்பதால் வேகமான அறுவை சிகிச்சை மிகவும் வேகமாக செய்யப்படுகிறது. இதனால் இந்த பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு கணிசமாகக் குறையும்.
  • மடிப்பு இடமுகப்பு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றின் மருத்துவ முக்கியத்துவம் இன்னும் அறியப்படவில்லை.[53] சிறு பிளவுடைய அணு உயிர் நுண்ணோக்கி உபயோகித்து சோதனை செய்யப்பட்ட கண்களில் 38.7% கண்களில் வெவ்வேறு அளவு மற்றும் எதிரொளிப்புத் திறன் கொண்ட பொருட்களும், ஒருகுவியமுள்ள அணு உயிர் நுண்ணோக்கி உபயோகித்து பார்க்கப்படும் போது 100% கண்களில் பொருட்கள் தெரிந்தன என ஒரு ஃபின்லாந்து நாட்டு ஆய்வு கண்டுபிடித்தது.[53]

அறுவைசிகிச்சை முடிந்தவுடனேயே ஏற்படும் பிரச்சனைகள் தொகு

  • பல ஆராய்ச்சி ஆய்வுகளின் படி கண்கள் உலர்ந்து போகுதல் ஏற்படும் வாய்ப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. அறுவை சிகிச்சைக்கு 6 மாதங்களுக்குப் பிறகு 50% சதவிகிதம் நோயாளிகள் கண்கள் உலர்ந்து போகுதலுக்கான அறிகுறிகளை உணர்ந்தனர் என்று ஹோவனேஷியன் மற்றும் மற்றவர்கள் நடத்திய ஆய்வில் அறிவிக்கப்பட்டது[54].
  • பரவலான விழிப்பாவை மடிப்பு அழற்சி (டி.எல்.கே)[55], சஹாரா மணல் நிலைப்பாடு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏற்படும் வாய்ப்பு 2.3% என கணிக்கப்பட்டுள்ளது.[56] கீழே உள்ள கருவிழி இழையவலை மற்றும் லேசிக் மடிப்புக்கிடையேயான இடமுகப்பில் இரத்த வெள்ளை அணுக்களை சேகரித்தல் அடங்கிய அழற்சி விளைவிக்கின்ற முறை தான் டி.எல்.கே ஆகும். இது பொதுவாக ஸ்டீராய்டு கண் சொட்டு மருந்துகள் உபயோகித்து குணப்படுத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் மருத்துவரால் மடிப்பை உயர்த்தி சேகரிக்கப்பட்டுள்ள செல்களை அகற்ற வேண்டியிருக்கும்.
  • சிகிச்சையைத் தொடர்ந்து தொற்று ஏற்படும் வாய்ப்பு 0.4 சதவிகிதம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[56] கருவிழி மடிப்புக்குக் கீழ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நோயாளிக்கு ஒரு மரபு நிலை கூம்புகருவிழி இருந்தாலும் கூட கருவிழி அறுவை சிகிச்சைக்குப் பின் மெலிவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலை அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டாலும், பல அரிதான நோயாளிகளில் (5,000த்தில் ஒருவர்)[சான்று தேவை] இந்த நிலை வாழ்வின் பிற்பகுதி வரை (இடை-40கள் வரை) செயலற்று இருக்க வாய்ப்புகள் உள்ளன. இது நடக்குமாயின், நோயாளிக்கு வளையாத வாயு உடைய ஊடுறுவத்தக்க தொடுவில்லை, இழையவலைக்குள் கருவிழி வளையங்கள் (இண்டாக்ஸ்),[57] ரிபோஃப்ளாவினோடு[58] கூடிய கருவிழி கொல்லாஜன் தொடர்புகள் அல்லது கருவிழி மாற்று சிகிச்சை ஆகியவை தேவைப்படலாம்.
  • தொடர்ந்து இருக்கக்கூடிய கண்கள் உலர்ந்து போகுதல் ஆசிய மக்களின் கண்களில் 28% நிகழக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், காகேசியன் கண்களில் 5% வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கண்ணீர் உருவாக்கத்திற்கு கருவிழியில் உள்ள நரம்பு மண்டலங்கள் மிகவும் முக்கியமானவையாகும். லேசிக்கிற்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் சுப்பாசல் நரம்பு மண்டலங்கள் பாதியாகக் குறைந்திருக்கும்.[59] சில நோயாளிகள் நாட்பட்ட குறைந்த அடிமட்ட நனைதல் கண்ணீர் உற்பத்தியை ஓரளவிற்கு ஈடு செய்ய எதிர்வினை கண்ணீர் அனுபவிக்கிறார்கள்.
  • கண்சவ்வடி இரத்த ஒழுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு 10.5% என கணிக்கப்பட்டுள்ளது[56] (சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி இது கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இனம் மற்றும் இடக்காரணிகளால் இந்த முடிவுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை).

அறுவை சிகிச்சைக்குப் பின் தாமதமாக ஏற்படும் பிரச்சனைகள் தொகு

  • தோல் மேற்புற செல் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு 0.1% என கணிக்கப்பட்டுள்ளது.[56]
  • லேசிக் செய்துகொண்டவர்களால் கூறப்பட்ட மற்றொரு பொதுவான பிரச்சனை கண்கூச்சமாகும்.[14]
  • அதிகமான வெளிச்சத்தை சுற்றி ஒளிவட்டம் அல்லது நட்சத்திரப்பிரகாசங்கள் ஏற்படுவது என்பது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிக்கும் மற்ற பகுதிக்கும் இடையேயான முறைகேட்டினால் ஏற்படுகிறது. கண் பாவை முழு அளவில் விரிந்து காணப்படும் போது அதன் முழு அளவையும் இணைத்துக்கொள்ளும் படி அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமல்ல. மேலும் மடிப்புகளின் ஓரங்களின் மூலம் கண் பாவைக்குள் ஒளி சென்றடையும் வண்ணம் அது விரிந்து காணப்படும்.[60] பகல் நேரங்களில் கண்விழி அதன் ஓரங்களை விடச் சிறியதாக இருக்கும். தற்போதைய உபகரணங்கள் பெரிய கண்விழி உடையவர்களுக்கு உகந்ததாக இருக்கும். பொறுப்பான மருத்துவர்கள் இதனை பரிசோதனையின் போது கண்டிப்பாக சோதிப்பர்.
  • தாமதமான மடிப்பு இடம் மாறுதல் லேசிக் முறைக்குப் பின் ஒன்று முதல் 7 வருடங்களுக்குப் பின் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.[61]
  • உலர் கண்கள் அல்லது நோயின் தீவிரம் அதிகமுள்ள நோயாளிகளுக்கு நாட்பட்ட உலர் கண்கள் ஏற்படும். லேசிக் அறுவை சிகிச்சையின் போது நரம்புகள் வெட்டப்படுவதனால் (70% கண்விழி நரம்புகள் வெட்டப்படுகின்றது) கண்களின் ஈரத் தண்மை பாதிப்படைகிறது மற்றும் நரம்புகள் அறுவை சிகிச்சைக்கு முன்னிருந்த நிலையை அடையவே முடியாமல் கூட போகலாம். இதன் விளைவாக நோயாளிக்கு நிரந்தமாகவே கண்கள் உலர்ந்து போகலாம்.

மற்றவை தொகு

லேசிக் மற்றும் மற்ற லேசர் கதிர்சிதைவு சிகிச்சைகள் (அதாவது பி.ஆர்.ஏ, லேசெக் மற்றும் எபி-லேசெக்) கண்விழியின் வடிவத்தை மாற்றும். இந்த மாற்றங்களால், குளோகோமா (பசும்படலம்) சோதனை மற்றும் சிகிச்சைக்கு அவசியமான கண்களுக்குள் உள்ள அழுத்தத்தை துல்லியமாக உங்கள் பார்வை சோதனை செய்யும் நபர் மற்றும் கண் மருத்துவர் கணிப்பதற்கு கடினமாகிறது. கண்புறை அறுவை சிகிச்சை செய்யப்படும் போது கண்களுக்குள் அணிவிக்கப்படும் வில்லைக்கான கணக்கெடுத்தலையும் இந்த மாற்றங்கள் பாதிக்கிறது. கண் மருத்துவர்கள் இதனை “கதிர்சிதைவு ஆச்சரியம்” என்கின்றனர். நீங்கள் உங்கள் மருத்துவரிடம் அறுவை சிகிச்சைக்கு முன், அறுவை சிகிச்சையின் போது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் உங்கள் கண்களின் சரியான அளவீடுகளை அளித்தால் சரியான கண்களுக்குள்ளான அழுத்தம் மற்றும் கண்களுக்குள் பொருத்தப்படும் வில்லையின் ஆற்றல் ஆகியவற்றை கணக்கிட முடியும்.

லேசிக் தொழில்நுட்பத்தில் பல வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும்,[62][63][64] நீண்ட கால பிரச்சனைகள் பற்றிய உறுதியான ஆதாரங்கள் இன்னும் சரியாகக் கூறப்படவில்லை. லேசிக் கண் அறுவை சிகிச்சை நிரந்தரமானதான காரணத்தினால் தெளிவில்லாமை, ஒளிவட்டம் அல்லது கூச்சப்பார்வை போன்ற பிரச்சனைகள் நிரந்தரமானவையாக மாற சிறிதளவு வாய்ப்புள்ளது.

கருவிழித் தளும்பு ஏற்படுதலின் வாய்ப்பு 0.2 சதவிகிதத்திலிருந்து[48] 0.3 சதவிகிதம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[65] விழித்திரை அகலல் என்பதற்கான வாய்ப்பு 0.36 சதவிகிதமாக கணிக்கப்பட்டுள்ளது.[65] கருவிழிப்படல நாள ஊட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 0.33% எனக் கணிக்கப்பட்டுள்ளது.[65] கருவிழிப்படல அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு 0.18% எனக் கணிக்கப்பட்டுள்ளது.[66]

இழையவலை அகற்றப்படுவதன் காரணமாக லேசிக் முறைக்குப் பின்னர் கருவிழி பொதுவாக மெலிந்து காணப்பட்டாலும், கதிர் சிதைவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருவிழியின் வடிவத்தை சிதைக்காமல் இருக்க கருவிழியை அதிகபட்ச தடிப்புடன் வைத்திருக்க முனைவர். லேசிக் முறை செய்து கொண்ட நோயாளிகளின் கண்களுக்கு, அதிக உயரத்தில் காணப்படும் சுற்றுச்சூழல் அழுத்தம் மிகவும் ஆபத்தானது என உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால், மலை ஏறுபவர்கள் சிலர், அதிக உயரங்களில் கிட்டப்பார்வையில் உள்ள பாதிப்பை உணர்ந்திருக்கின்றனர்.[67][68]

வயதான காலத்தில் செய்யப்படும் கருவிழி திருத்தம் கருவிழியின் அதிக பட்ச அலைமுகப்பு பிறழ்ச்சி ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.[69][70] இந்த அதிக பட்ச பிறழ்ச்சியை பொதுவான கண் கண்ணாடிகள் சரி செய்வதில்லை.

சிறியமடிப்புகள் (மைக்ரோஃபோல்டிங்க்), லேசிக் முறையின் தவிர்க்க முடியாத பிரச்சனையாக கருதப்படுகிறது. ஆனால் இதன் மருத்துவ முக்கியத்துவம் மிகவும் குறைவானது.[53]

கண் இமை அழற்சி அல்லது கண் முசி வரிசை கசங்குதலோடு கூடிய கண் இமைகள் வீங்குதல், லேசிக் முறைக்குப் பிறகு கண்விழி வீங்குதல் அல்லது தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.[சான்று தேவை]

படிக்கும் கண்ணாடிகள் அல்லது இருபார்வை கண்ணாடிகள் தேவைப்படும் வயதில் (நடு அல்லது இறுதி நாற்பது வயது) உள்ள மயோபிக் (கிட்டப்பார்வை) உடைய மக்களுக்கு கதிர் சிதைவு லேசிக் அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் கூட படிக்கும் கண்ணாடிகள் தேவைப்படலாம். கண்கண்ணாடிகள் இல்லாமலேயே பார்க்கக்கூடிய மக்களை விட கிட்டப்பார்வை உடையவர்களுக்கு வயதான போது படிக்கும் கண்ணாடிகள் அல்லது இருபார்வை கண்ணாடிகள் தேவைப்படும். ஆனால் லேசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் கண் கண்ணாடி தேவைப்பாடாதவர்களுக்கு அந்த பயன் இல்லாமல் போகலாம். இது ஒரு பிரச்சனை அல்ல மாறாக கண் சிகிச்சையின் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விதியாகும். இந்த குழுவினருக்கு படிக்கும் கண்ணாடிகள் சுத்தமாக தேவைப்படாத வகையில் செய்யும் முறைகள் இல்லை என்றாலும், இதன் தேவையை லேசிக் முறையில் “சிறிது ஒற்றைப்பார்வை” என்ற மாற்றம் செய்வதன் மூலம் கண் கண்ணாடிகளின் தேவையை குறைக்கலாம். இந்த முறை, தூரப்பார்வையை சரி செய்யும் லேசிக் முறையைப் போலவே செய்யப்படும். இதில் அதிக ஆளுமை உடைய கண்னை தூரப்பார்வைக்கு உகந்தவாரு வைத்து விட்டு ஆதிக்கமற்ற கண்ணை நோயாளியின் படிக்கும் கண்ணாடிக்குத் தக்கவாறு வைப்பர். இதனால் நோயாளி இரட்டைப் பார்வை கண்ணாடி அணிந்துள்ளது போன்ற அனுபவத்தைப் பெறுவார். பெரும்பாலான நோயாளிகள் இந்த முறையை சிறந்த முறையில் ஏற்றுக்கொள்கின்றனர். கிட்ட மற்றும் தூரப்பார்வைக்கு இடையே எந்த மாற்றத்தையும் உணரவில்லை. ஆனால் ஒரு சில நோயாளிகள் ஒற்றைப் பார்வை தாக்கத்திற்கு பழக்கப்படுவதில் கடினத்தை உணர்கின்றனர். ஒற்றைப்பார்வை தாக்கத்தை பிரதிபலிக்கும் தொடுவில்லைகளை அறுவை சிகிச்சைக்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பயன்படுத்தி சோதனை செய்துகொள்ளலாம். சமீப காலத்தில் கதிர் வீச்சு சிகிச்சையில் சிறிது மாற்றத்தோடு ப்ரெஸ்பிலேசிக் என்ற முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூரப்பார்வை இருக்கும் போதே படிக்கும் கண்ணாடி தேவைப்படுவதை அகற்றவோ குறைக்கவோ முடியும்.

லேசிக்கிற்கு பிறகு கார்னியல் கெரட்டோசைட்கள் (நார்முன்செல்கள்) ஏற்படும் எண்ணிக்கை குறைவதாகக் கூறும் அறிக்கைகள் பல உள்ளன.[71]

அறுவை சிகிச்சையை பாதிக்கும் காரணிகள் தொகு

பொதுவாக, கருவிழியில் இரத்தஒட்டம் இருக்காது. ஏனெனில் அது சரியான முறையில் செயலாற்ற ஒளிபுகும் வகையில் இருக்க வேண்டும். அதன் செல்கள் கண்ணீர் படலத்திலிருந்து பிராண வாயுவை ஏற்கும் வகையில் இருக்க வேண்டும். ஆக, குறைந்த அளவு பிராண வாயுவை ஏற்கக் கூடிய விழி வில்லைகள் சில சமயங்களில் கருவிழி நாள ஊட்டக்குறை ஏற்படக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, கண்விழிக்குள் இரத்த குழாய் வளருதல். இதன் காரணமாக வீக்கம் இருக்கும் காலம் மற்றும் ஆறும் காலம் ஆகியவற்றின் கால அளவு அதிகரிக்கும். மேலும், அதிகபட்ச இரத்தப்போக்கு காரணமாக அறுவை சிகிச்சையின் போது சிறிது வலியும் ஏற்படலாம்.

சில கண் வில்லைகள் (குறிப்பாக தற்போதைய ஆர்.ஜி.பி மற்றும் மிருதுவான சிலிகான் ஹைரோஜெல் வில்லைகள்) அதிக பிராணவாயு ஏற்புத்திறன் உள்ள பொருட்களால் செய்யப்படுவதால் கண்விழி நாள ஊட்டக்குறை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகிறது. ஆயினும், லேசிக் முறை செய்துகொள்ளும் நோயாளிகள் தங்களது கண் வில்லைகளை குறைவாகப் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்படுகின்றனர். பொதுவாக லேசிக் கண் சிகிச்சைக்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பு கண் வில்லைகள் அணியாதிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

வயதிற்கான அனுசரிப்புகள் தொகு

கண் பார்வை திருத்தும் அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை அளிக்கிறது. 40 மற்றும் 50களில் உள்ள லேசிக் முறை செய்துகொள்ள விருப்பப்படும் நோயாளிகள் உள்ளேயே பொருத்தப்படும் வில்லைகளுக்காக மதிப்பீடு செய்யப்படுவதையும் பற்றி சிந்திக்க வேண்டும். கண் புறையின் முதல் அறிகுறிகள் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை மற்றும் பலப்பார்வை வில்லைகளின் உட்பொருத்துதலைப் பற்றியும் சிந்திக்கலாம்.[72]

18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு லேசிக் முறை செய்யப்படுவதற்கு எஃப்.டி.ஏ ஒப்புதல் அளித்துள்ளது.[73] மிக முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு வருடத்திற்கு அந்த நபரின் கண் பரிந்துரைகள் ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும்.

மேலும் காண்க தொகு

  • தானியங்கு மடிப்புநிலை கருவிழியமைப்பு
  • கண் அறுவை சிகிச்சை
  • லேசெக் (லேசர் உதவிகொண்டு துணை-தோல் மேல்புற செல் கருவிழியெடுத்தல்) அல்லது பி.ஆர்.கே (ஒளிக்கதிர்வளைவு கருவிழியெடுப்பு)
  • ஆர கருவிழிதிறப்பு
  • கதிர்சிதைவு பிழை
  • கதிர்சிதைவு அறுவை சிகிச்சை
  • அலைமுகப்பு

குறிப்புதவிகள் தொகு

  1. கருவிழி மாற்று அறுவை சிகிச்சை
  2. "லேசிக்" பரணிடப்பட்டது 2010-07-22 at the வந்தவழி இயந்திரம் அயேட்னா இண்டெலிஹெல்த் இன்க். 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி அணுகப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-03. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  4. எக்ஸைமர் லேசர் நீக்கம் – மனித கண் மார்கரெட் பீ. மெக்டொனால்ட், எம்.டீ; ஹெர்பர்ட் ஈ. கௌஃப்மன், எம்.டீ; ஜோனதன் எம். ஃப்ராண்ட்ஸ், எம்.டீ; ஸ்டூவர்ட் ஷாஃப்னர், எம்.டீ; பயார்டோ சால்மெரான், எம்.டீ; ஸ்டீஃபன் டீ. க்ளைஸ், பி.ஹெச்.டீ நியு ஆர்லீன்ஸ், லூசியானா ஆர்கைவ்ஸ் ஆஃப் ஆப்தமாலஜி. 1989;107(5):641-642.
  5. http://irvaronsjournal.blogspot.com/2008/10/intrastromal-ablation-technology-whose.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-02. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-02. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-09-26. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-09-26. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  10. காப்புரிமை: புற ஊதா திடப்பொருள் நிலை லேசர்
  11. "லேசிக் ஒளிவட்டம் மற்றும் நட்சத்திரபிரகாசம்; விழிப்பாவை அளவின் முக்கியத்துவம்”. யு.எஸ்.ஏ.ஐஸ்
  12. ஐ.ஆர்.ஓ.சி . பரணிடப்பட்டது 2009-06-02 at the வந்தவழி இயந்திரம்Institut für Refraktive und Ophthalmo-Chirurgie பரணிடப்பட்டது 2009-06-02 at the வந்தவழி இயந்திரம்
  13. [18] ^ 17
  14. 14.0 14.1 Tahzib NG, Bootsma SJ, Eggink FA, Nabar VA, Nuijts RM (October 2005). "Functional outcomes and patient satisfaction after laser in situ keratomileusis for correction of myopia". J Cataract Refract Surg 31 (10): 1943–51. doi:10.1016/j.jcrs.2005.08.022. பப்மெட்:16338565. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0886-3350(05)00671-1. 
  15. Saragoussi D, Saragoussi JJ (September 2004). "[Lasik, PRK and quality of vision: a study of prognostic factors and a satisfaction survey"] (in French). J Fr Ophtalmol 27 (7): 755–64. doi:10.1016/S0181-5512(04)96210-9. பப்மெட்:15499272. http://www.masson.fr/masson/MDOI-JFO-09-2004-27-7-0181-5512-101019-ART3. 
  16. Bailey MD, Mitchell GL, Dhaliwal DK, Boxer Wachler BS, Zadnik K (July 2003). "Patient satisfaction and visual symptoms after laser in situ keratomileusis". Ophthalmology 110 (7): 1371–8. doi:10.1016/S0161-6420(03)00455-X. பப்மெட்:12867394. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0161-6420(03)00455-X. 
  17. McGhee CN, Craig JP, Sachdev N, Weed KH, Brown AD (April 2000). "Functional, psychological, and satisfaction outcomes of laser in situ keratomileusis for high myopia". J Cataract Refract Surg 26 (4): 497–509. doi:10.1016/S0886-3350(00)00312-6. பப்மெட்:10771222. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0886-3350(00)00312-6. 
  18. லேசிக்கிற்குப் பின்பான வாழ்க்கைத் தரத்தைப் பற்றிய ஆய்வு http://www.medicalnewstoday.com/articles/103194.php பரணிடப்பட்டது 2010-10-01 at the வந்தவழி இயந்திரம்
  19. பிபிசி செய்திகள்/உடல் நலம்/ லேசர் கண் அறுவை சிகிச்சைப் புகார்களின் எண்ணிக்கை உயர்வு
  20. Hersh PS, Fry KL, Bishop DS (April 2003). "Incidence and associations of retreatment after LASIK". Ophthalmology 110 (4): 748–54. doi:10.1016/S0161-6420(02)01981-4. பப்மெட்:12689897. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0161-6420(02)01981-4. 
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27.
  22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27.
  23. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-27.
  24. ஆங்கிலேய லேசிக் அறிக்கைப் பிழை நிறைந்ததென்று ஆய்வாசிரியர் கூறுகிறார் பரணிடப்பட்டது 2011-06-08 at the வந்தவழி இயந்திரம். செய்தி வெளியீடு]
  25. "ஈ.எஸ்.சீஆர்.எஸ் ஐரோப்பிய கண்புரை மற்றும் ஒளிமுறிவு அறுவை மருத்துவர்கள் சமூகம். வலையகம்" (PDF). Archived (PDF) from the original on 2006-06-28. பார்க்கப்பட்ட நாள் 2006-06-28.
  26. லேசிக் அறுவை சிகிச்சை: தொடுவில்லைகளைவிட பாதுகாப்பானதா?
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-05-22. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  29. புதிய இணையத்தளம் லேசர் கண் அறுவை சிகிச்சையின் குறைகளை விவரிக்கின்றது http://www.post-gazette.com/healthscience/19991012hlasik4.asp
  30. http://www.nj.com/healthfit/ledger/index.ssf?/news/ledger/stories/021102lasik.html பரணிடப்பட்டது 2011-06-05 at the வந்தவழி இயந்திரம் இங்கே
  31. http://www.foxnews.com/story/0,2933,352548,00.html
  32. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-29. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  33. "யு.எஸ் எஃப்.டீ.ஏ/சி.டீ.ஆர்.எச்: லேசிக் - இதன் அபாயங்கள் என்ன? எனக்கேற்ற மருத்துவரை நான் எப்படி கண்டுபிடிப்பது?". Archived from the original on 2009-05-13. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  34. லேசிக் அறுவை சிகிச்சை: வென் தன் ஃபைன் பிரிண்ட் அப்ளைஸ் டு யு ஏப்பி எலின் எழுதியப் புத்தகம், த நியுயார்க் டைம்ஸ், மார்ச் 13, 2008.
  35. De Paiva CS, Chen Z, Koch DD, et al. (March 2006). "The incidence and risk factors for developing dry eye after myopic LASIK". Am. J. Ophthalmol. 141 (3): 438–45. doi:10.1016/j.ajo.2005.10.006. பப்மெட்:16490488. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002-9394(05)01083-4. 
  36. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-13. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  37. Pop M, Payette Y (January 2004). "Risk factors for night vision complaints after LASIK for myopia". Ophthalmology 111 (1): 3–10. doi:10.1016/j.ophtha.2003.09.022. பப்மெட்:14711706. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0161-6420(03)01213-2. 
  38. "லேசிக்கிற்குப் பின்பு ஒளிவட்டங்கள், நிறவேற்றுமை உணர்விழத்தல், கண் கூச்சம் மற்றும் நட்சத்திரபிரகாசங்கள் தோன்றுவதன் தனித்தனி அபாயக் காரணிகள்" operationauge.com
  39. "ஒளிமுறிவு அறுவை சிகிச்சைகளின் மிகவும் பொதுவான சிக்கல்கள்" பரணிடப்பட்டது 2013-01-17 at the வந்தவழி இயந்திரம். USAEyes.org
  40. Knorz MC (March 2006). "[Complications of refractive excimer laser surgery]" (in German). Ophthalmologe 103 (3): 192–8. doi:10.1007/s00347-006-1314-y. பப்மெட்:16465507.  doi:10.1007/s00347-006-1314-y
  41. "லேசிக் அதிதிருத்தம் – எதிர்பார்க்கப்படாதது, தேவையற்றது, தேவைப்படுவது மற்றும் திட்டமிடப்படுவது". யூ.எஸ்.ஏ.ஐஸ்
  42. "லேசிக் மற்றும் அதைப் போன்ற லேசர் துணையுடனான ஒளிமுறிவு அறுவை சிகிச்சைகளுக்குப் பின் இரவுப் பார்வை ஒளிவட்டம்". யூ.எஸ்.ஏ.ஐஸ்
  43. "லேசிக் மற்றும் அதைப் போன்ற லேசர் துணையுடனான ஒளிமுறிவு அறுவை சிகிச்சைகளுக்குப் பின் இரவுப் பார்வை நட்சத்திரபிரகாசம்". யூ.எஸ்.ஏ.ஐஸ்
  44. "லேசிக் மற்றும் அதைப் போன்ற பார்வைத் திருத்தும் அறுவை சிகிச்சைக்குப் பின் இரட்டிப்பு அல்லது இரட்டைப் பார்வை". யூ.எஸ்.ஏ.ஐஸ்
  45. "லேசிக் மற்றும் அனைத்து-லேசர் லேசிக்கின் மேக்ரோ-ஸ்ட்ரியே மற்றும் மைக்ரோ-ஸ்ட்ரியே சிக்கல்" யூ.எஸ்.ஏ.ஐஸ்
  46. "லேசிக்கிலும் அனைத்து-லேசர் லேசிக்கிலும் பொத்தான் துளை முடிவுபெறாத மடல்”. யூ.எஸ்.ஏ.ஐஸ்
  47. Mirshahi A, Schöpfer D, Gerhardt D, Terzi E, Kasper T, Kohnen T (February 2006). "Incidence of posterior vitreous detachment after laser in situ keratomileusis". Graefes Arch. Clin. Exp. Ophthalmol. 244 (2): 149–53. doi:10.1007/s00417-005-0002-y. பப்மெட்:16044328.  doi:10.1007/s00417-005-0002-y1
  48. 48.0 48.1 Arevalo JF, Mendoza AJ, Velez-Vazquez W, et al. (July 2005). "Full-thickness macular hole after LASIK for the correction of myopia". Ophthalmology 112 (7): 1207–12. doi:10.1016/j.ophtha.2005.01.046. பப்மெட்:15921746. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0161-6420(05)00290-3. 
  49. மஜ்முடார், பி.ஏ. " பரணிடப்பட்டது 2006-03-11 at the வந்தவழி இயந்திரம்லேசிக் சிக்கல்கள்". பரணிடப்பட்டது 2006-03-11 at the வந்தவழி இயந்திரம் குவியப் புள்ளிகள்: கண் மருத்துவர்களுக்கான மருத்துவ பதிவேடுகள். அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆஃப்தால்மாலஜி. செப்டம்பர் 2004.
  50. Carrillo C, Chayet AS, Dougherty PJ, et al. (2005). "Incidence of complications during flap creation in LASIK using the NIDEK MK-2000 microkeratome in 26,600 cases". J Refract Surg 21 (5 Suppl): S655–7. பப்மெட்:16212299. 
  51. "கண் அறுவை சிகிச்சைக் கல்விக் குழுமம்". Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14. {{cite web}}: no-break space character in |title= at position 21 (help)
  52. Tham VM, Maloney RK (May 2000). "Microkeratome complications of laser in situ keratomileusis". Ophthalmology 107 (5): 920–4. doi:10.1016/S0161-6420(00)00004-X. பப்மெட்:10811084. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0161-6420(00)00004-X. 
  53. 53.0 53.1 53.2 Vesaluoma M, Pérez-Santonja J, Petroll WM, Linna T, Alió J, Tervo T (1 February 2000). "Corneal stromal changes induced by myopic LASIK". Invest. Ophthalmol. Vis. Sci. 41 (2): 369–76. பப்மெட்:10670464. http://www.iovs.org/cgi/content/full/41/2/369. 
  54. ஹொவனேசியன் ஜே.ஏ, ஷா எஸ்.எஸ், மெலொனி ஆர்கே. ஒளிமுறிவு அறுவை சிகிச்சைக்குப் பின் உலர் கண் மற்றும் திரும்பத் திரும்ப மீளும் அரிப்பு நோய்க்குறித்தொகுப்பு. ஜர்னல் ஆஃப் காண்டிராக்ட் ரீஃபிராக்ட் சர்ஜரி. 2001;27:577-84.
  55. http://www.usaeyes.org/lasik/faq/lasik-intralasik-dlk.htm
  56. 56.0 56.1 56.2 56.3 Sun L, Liu G, Ren Y, et al. (2005). "Efficacy and safety of LASIK in 10,052 eyes of 5081 myopic Chinese patients". J Refract Surg 21 (5 Suppl): S633–5. பப்மெட்:16212294. 
  57. லேசான கிட்டப்பார்வை திருத்தம் மற்றும் கருவிழிக்கூம்பலுக்கான இண்டாக்ஸ்
  58. "சி3-ஆர் விழிவெண்படல கொலாஜன் ரீபோஃப்ளேவின்னுடன் குறுக்கு இணைவது". Archived from the original on 2006-09-26. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  59. Lee BH, McLaren JW, Erie JC, Hodge DO, Bourne WM (1 December 2002). "Reinnervation in the cornea after LASIK". Invest. Ophthalmol. Vis. Sci. 43 (12): 3660–4. பப்மெட்:12454033. http://www.iovs.org/cgi/content/full/43/12/3660. 
  60. விழிப்பாவை மற்றும் லேசிக் இரவுப் பார்வை ஒளிவட்டம் – நட்சத்திரபிரகாசம்
  61. Cheng AC, Rao SK, Leung GY, Young AL, Lam DS (May 2006). "Late traumatic flap dislocations after LASIK". J Refract Surg 22 (5): 500–4. பப்மெட்:16722490. http://www.journalofrefractivesurgery.com/showAbst.asp?thing=12869. பார்த்த நாள்: 2010-05-14. 
  62. Hammer T, Heynemann M, Naumann I, Duncker GI (March 2006). "[Correction and induction of high-order aberrations after standard and wavefront-guided LASIK and their influence on the postoperative contrast sensitivity"] (in German). Klin Monatsbl Augenheilkd 223 (3): 217–24. doi:10.1055/s-2005-858864. பப்மெட்:16552654. http://www.thieme-connect.com/DOI/DOI?10.1055/s-2005-858864. பார்த்த நாள்: 2021-08-26. 
  63. Alió JL, Montés-Mico R (February 2006). "Wavefront-guided versus standard LASIK enhancement for residual refractive errors". Ophthalmology 113 (2): 191–7. doi:10.1016/j.ophtha.2005.10.004. பப்மெட்:16378639. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0161-6420(05)01176-0. 
  64. Caster AI, Hoff JL, Ruiz R (2005). "Conventional vs wavefront-guided LASIK using the LADARVision4000 excimer laser". J Refract Surg 21 (6): S786–91. பப்மெட்:16329381. 
  65. 65.0 65.1 65.2 Ruiz-Moreno JM, Alió JL (2003). "Incidence of retinal disease following refractive surgery in 9,239 eyes". J Refract Surg 19 (5): 534–47. பப்மெட்:14518742. 
  66. Suarez E, Torres F, Vieira JC, Ramirez E, Arevalo JF (October 2002). "Anterior uveitis after laser in situ keratomileusis". J Cataract Refract Surg 28 (10): 1793–8. doi:10.1016/S0886-3350(02)01364-0. பப்மெட்:12388030. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0886335002013640. 
  67. Boes DA, Omura AK, Hennessy MJ (December 2001). "Effect of high-altitude exposure on myopic laser in situ keratomileusis". J Cataract Refract Surg 27 (12): 1937–41. doi:10.1016/S0886-3350(01)01074-4. பப்மெட்:11738908. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0886335001010744. 
  68. Dimmig JW, Tabin G (2003). "The ascent of Mount Everest following laser in situ keratomileusis". J Refract Surg 19 (1): 48–51. பப்மெட்:12553606. 
  69. Yamane N, Miyata K, Samejima T, et al. (November 2004). "Ocular higher-order aberrations and contrast sensitivity after conventional laser in situ keratomileusis". Invest. Ophthalmol. Vis. Sci. 45 (11): 3986–90. doi:10.1167/iovs.04-0629. பப்மெட்:15505046. http://www.iovs.org/cgi/content/full/45/11/3986. 
  70. Oshika T, Miyata K, Tokunaga T, et al. (June 2002). "Higher order wavefront aberrations of cornea and magnitude of refractive correction in laser in situ keratomileusis". Ophthalmology 109 (6): 1154–8. doi:10.1016/S0161-6420(02)01028-X. பப்மெட்:12045059. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0161-6420(02)01028-X. 
  71. Erie JC, McLaren JW, Hodge DO, Bourne WM (2005). "Long-term corneal keratoctye deficits after photorefractive keratectomy and laser in situ keratomileusis". Trans Am Ophthalmol Soc 103: 56–66; discussion 67–8. பப்மெட்:17057788. பப்மெட் சென்ட்ரல்:1447559. http://www.aosonline.org/xactions/2005/1545-6110_v103_p056.pdf. பார்த்த நாள்: 2010-05-14. 
  72. Matthew Shulman (December 5, 2007). [health.usnews.com/articles/health/2007/12/05/the-cataracts-are-gone--and-so-is-the-need-for-glasses.html "The Cataracts Are Gone—and So Is the Need for Glasses"]. U.S.News & World Report. health.usnews.com/articles/health/2007/12/05/the-cataracts-are-gone--and-so-is-the-need-for-glasses.html. 
  73. http://www.usaeyes.org/lasik/faq/lasik-age.htm
Dolores Ortiz, Carlos Illueca, Jorge L. Alió (1 January 2008). "PresbyLASIK versus multifocal refractive IOLs". Ophthalmology Times Europe. பார்க்கப்பட்ட நாள் 2008-10-24.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
Epstein RL, Gurgos MA (June 2009). "Presbyopia treatment by monocular peripheral presbyLASIK". J Refract Surg 25 (6): 516–23. பப்மெட்:19603619. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேசிக்&oldid=3925666" இலிருந்து மீள்விக்கப்பட்டது