லோத்தேஸ்வர்

குசராத் மாநில கிராமம்


லோத்தேஸ்வர் (Loteshwar), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். மேலும் இது சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களில் ஒன்றாகும். சிந்துவெளி நாகரிகம் தொடர்பான லோத்தேஸ்வர் தொல்லியல் மேடு ரூபன் ஆற்றின் துணை ஆறான காரி ஆற்றின் இடது கரையில் உள்ளது.[1][2]

லோத்தேஸ்வர்
லோத்தேஸ்வர் is located in இந்தியா
லோத்தேஸ்வர்
Shown within India
இருப்பிடம்குஜராத், இந்தியா
ஆயத்தொலைகள்23°36′N 71°50′E / 23.600°N 71.833°E / 23.600; 71.833
வரலாறு
கலாச்சாரம்ஆனர்த்தா பண்பாடு, சிந்துவெளி நாகரிகம்

தொல்லியல் தொகு

கிமு 6,000 ஆண்டின் லோத்தேஸ்வர் தொல்லியல் களம் வேட்டைச் சமூகத்தினர் வாழ்ந்தனர். கிமு 4,000 முதல் இப்பகுதி மக்கள் வீட்டு வளர்ப்பு விலங்குகளான ஆடு, மாடுகளை மேய்த்து வளர்த்தனர்.[3]

அகழ்வாய்வு தொகு

1990 - 1991களில் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையினர் லோத்தேஸ்வரில் அகழ்வாய்வு மேற்கொண்டனர்.

அகழ்வாய்வு முடிவில் லோத்தேஸ்வரில் இரண்டு வேறுபட்ட தொல்பொருள் பண்பாட்டுக் காலத்திற்கான சான்றுகள் கிடைத்தன. முதல் பண்பாட்டுக் காலத்திற்குரிய ஒற்றைக் கல்லால் ஆன சிறு கருவிகளும், அரைவைக் கற்களும், சுத்தியல் கற்களும் கிடைத்தன. இரண்டாம் பண்பாட்டுக் காலம் அரப்பா காலத்திற்குரிய மட்பாண்டங்கள் கிடைத்தன. [1]

தொல் பொருட்கள் தொகு

லோத்தேஸ்வர் தொல்லியல் களத்தில் கருப்பு மற்றும் சிவப்பு வண்ண மட்பாண்டங்கள், சிறு மணிகள், காதணிகள், அரிய மணிகள், சுடுமண் வளையல்கள், விளக்குகள், சுடுமண் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது. .[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Mahapatra, S.K. (Ed.) (1995). Indian Archaeology 1990-91, A Review. New Delhi: Archaeological Survey of India. பக். 12–13. http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201990-91%20A%20Review.pdf. 
  2. C.S., Gadekar,; P., Ajithprasad,; Marco, Madella,; Andrea, Balbo,; S.V., Rajesh,; B., Rondelli,; José, García-Granero Fos, Juan; David, Rodríguez Antón, et al. (2014). Continuation of a Tradition over Five Thousand Years: Lithic Assemblage from Loteshwar, North Gujarat, Western India. https://www.researchgate.net/publication/271195286_Continuation_of_a_Tradition_over_Five_Thousand_Years_Lithic_Assemblage_from_Loteshwar_North_Gujarat_Western_India. 
  3. McIntosh, Jane R. (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, Calif.: ABC-CLIO. பக். 62,74,412. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. https://books.google.com/books?id=1AJO2A-CbccC&dq=jane+mcintosh&q=loteshwar#v=snippet&q=loteshwar&f=false. 
  4. Madella, M and 12 other writers. "Social and environmental transitions in arid zones: the North Gujarat Archaeological Project — NoGAP". World Archaeology Ed.Martin Carver. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

ஆதார நூற்பட்டியல் தொகு

  This article incorporates text from a publication now in the public domain: Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Government Central Press. 1880. பக். 337. https://books.google.com/books?id=dLUBAAAAYAAJ. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=லோத்தேஸ்வர்&oldid=3433616" இலிருந்து மீள்விக்கப்பட்டது