வசந்த முல்லிக்

சர் வசந்த குமார் முல்லிக் (2 ஆகத்து 1868 - 1 அக்டோபர் 1931) ஒரு இந்திய அரசு ஊழியர் மற்றும் நீதிபதியுமாவார். முல்லிக் கொல்கத்தாவில் இருந்த ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார். இங்கிலாந்தில், யுனிவர்சிட்டி கல்லூரிப் பள்ளி மற்றும் கேம்பிரிச்சு அரசக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் 1887 இல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். [1] 1890 ஆம் ஆண்டில் இவர் வங்காளத்திற்கு உதவி நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1898 ஆம் ஆண்டில் இவர் தனது பட்டப்படிப்பை முடிக்க கேம்பிரிச்சு சென்று, அடுத்த ஆண்டு இவர் பட்டம் பெற்றார்.

நீதிபதி தொகு

பின்னர், இந்தியா திரும்பியதும் இவர் ஒரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1912 ஏப்ரலில் புதிதாக உருவாக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் சட்ட விவகாரங்களுக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர், இவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1916 இல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஆனார். அங்கு 1928 வரை பணியாற்றினார். பேரர்ரசின் 1920 புத்தாண்டு கௌரவத்தில் கௌரவிக்கப்பட்டார்.

இந்திய அமைப்பு தொகு

1928 ஏப்ரலில் இவர் பீகார் மற்றும் ஒடிசாவின் நிர்வாகக் குழுவின் தற்காலிக உறுப்பினரானார். 1929 சூலையில் இவர் இந்திய அமைப்பிற்கு நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப்பணியின் முதல் இந்திய உறுப்பினராக அமைப்பில் சேர்ந்தார். இவர் உலக நாடுகள் சங்கத்தின் பல குழுக்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

குடும்பம் தொகு

1900 ஆம் ஆண்டில் கேட் அன்னி கார்டர் என்பவரை மணந்த முல்லிக், பதவியில் இருந்தபோதே இலண்டனின் கென்சிங்டனில் உள்ள தனது வீட்டில் திடீரென இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

குறிப்புகள் தொகு

  • Obituary, The Times, 3 October 1931
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_முல்லிக்&oldid=3512087" இலிருந்து மீள்விக்கப்பட்டது